என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள் (District)
தந்தை இறந்த துக்கத்திலும் தேர்வில் பங்கேற்ற பிளஸ்-2 மாணவி
- தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது.
- செய்முறை தேர்வில் தான் பங்கேற்க விரும்புவதாக மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார்.
தேனி :
தேனி பங்களாமேடுவை சேர்ந்தவர் பவுன்ராஜ் (வயது 47). டீக்கடை தொழிலாளி. இவருடைய மகள் கங்கா. இவர் தேனி நாடார் சரசுவதி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவில் பவுன்ராஜ் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
இந்தநிலையில், தமிழகத்தில் பிளஸ்-1, பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான செய்முறை தேர்வு நேற்று தொடங்கியது. தந்தை இறந்த துக்கம் தாங்காமல், கதறி அழுத மாணவிக்கு செய்முறை தேர்வை எழுத வேண்டும் என்ற தவிப்பும் இருந்தது. செய்முறை தேர்வில் தான் பங்கேற்க விரும்புவதாக மாணவி தனது தாயாரிடம் தெரிவித்தார்.
தந்தையின் இறுதிச்சடங்கில் பங்கேற்க உறவினர்கள் வீட்டுக்கு வந்திருந்த நிலையில், மாணவி கங்கா பள்ளிக்கு புறப்பட்டுச் சென்று செய்முறை தேர்வில் பங்கேற்றார். தேர்வு முடிந்து வந்து தனது தந்தையின் இறுதிச்சடங்கில் மாணவி பங்கேற்றார்.
தந்தையின் மரணம் சோகத்தை ஏற்படுத்தியபோதிலும், அந்த சூழலில் தேர்வில் மாணவி பங்கேற்ற சம்பவம் அப்பகுதி மக்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.