என் மலர்
தேனி
- வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு சென்று கொண்டிருந்தார்.
- இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.
கூடலூர்:
தேனி மாவட்டம் கூடலூர் 6-வது வார்டு ஓடைக்காரத்தெருவை சேர்ந்த முனியாண்டி மனைவி ஷீலாதேவி(34). இவர் கூடலூர் காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று வியாபாரத்தை முடித்துவிட்டு துணிப்பையில் ரூ.6500 பணம் , செல்போன், ஆதார்அட்டை உள்ளிட்டவற்றை வைத்துக்கொண்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பழனிவேல்பிள்ளை தெருவில் நின்றுகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத வாலிபர் அவர் வைத்திருந்த பையை தூக்கிகொண்டு மின்னல் வேகத்தில் சென்றுவிட்டார்.
இதுகுறித்து ஷீலாதேவி கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
- பணியாளர்கள் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
- பீரோவில் பணம், நகை எதுவும் இல்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறும் வீட்டின் உரிமையாளர் கூறினார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் சுருளிபட்டி ரோடு சின்னவாய்க்கால் தெருவை சேர்ந்தவர் சங்கரன். இவர் ஐ.ஏ.எஸ் முடித்து தமிழக அரசு உயர்பதவியில் பணியாற்றியவர். தற்போது அவர் இறந்துவிட்ட நிலையில் அவரது மகன் சந்திரசூடன் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சந்திரசூடன் சென்னையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் நிறுவனத்தில் உயர்பதவியில் பணியாற்றி வருகிறார்.
இதனால் விடுமுறையில் மட்டும் தனது ஊருக்கு வந்து செல்வது வழக்கம். இந்த வீட்டில் 2 பணியாளர்கள் தினசரி வந்து சுத்தம் செய்துவிட்டு செல்வது வழக்கம். அதன்படி பணியாளர்கள் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவும் உடைக்கப்பட்டு அதிலிருந்த பொருட்கள் சிதறிகிடந்தன.
உடனே இதுகுறித்து வீட்டின் உரிமையாளருக்கு பணியாளர் ஈஸ்வரன் (29) தகவல் தெரிவித்தார். அவர் பீரோவில் பணம், நகை எதுவும் இல்லை என்றும், இதுகுறித்து போலீசில் புகார் அளிக்குமாறும் கூறினார். இதனை தொடர்ந்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் ஈஸ்வரன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கைரேகை மற்றும் முக்கிய தடயங்களை பதிவு செய்து சென்றனர்.
கம்பம் நகரில் 24 மணிநேர அனுமதியற்ற பார்கள் தடையின்றி செயல்படுகிறது. இதனால் போதை கும்பல் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நள்ளிரவில் போதையில் வரும் நபர்கள் சாலையில் நிறுத்தியிருக்கும் மோட்டார் சைக்கிள்கள் மற்றும் பூட்டியிருக்கும் வீடுகளை உடைத்து கொள்ளையடித்து செல்கி ன்றனர். இதுதவிர நடந்து செல்லும் பெண்களிடம் வழிப்பறி சம்பவங்களும் நடந்து வருகின்றன.
இதுபோன்ற குற்றங்களை தடுக்க வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் பல்வேறு இடங்க ளில் சி.சி.டி.வி காமிராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. அவைகள் உடைக்கப்பட்டும், பல இடங்களில் செயல்ப டாத நிலையிலும் உள்ளது. இரவு நேர ரோந்து போலீ சார் பணியில் இல்லாததால் போதை கும்பல் மற்றும் கொள்ளையர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது.
எனவே மாவட்ட எஸ்.பி அதிரடி நடவடிக்கை எடுத்து அனுமதியின்றி செயல்படும் பார்கள் மற்றும் கொள்ளை யர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
- கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
- மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்
தேனி:
தேனி மாவட்டம் குச்சனூர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் அழகர்சாமி(71). இவருக்கு கடந்த சில மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்தார்.
இருந்தபோதும் நோய்குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த அழகர்சாமி விஷம் குடித்து சின்னமனூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.இதுகுறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கருத்துவேறுபாடு காரணமாக கடந்த 6 வருடமாக கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார்.
- தனது மகளுடன் வீட்டை விட்டு சென்ற அருள்ஜோதி மாயமானார்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம் கோகிலாபுரம் சி.எஸ்.ஐ சர்ச் தெருவை சேர்ந்த செல்வராஜ் மகள் அருள்ஜோதி(30). இவரு க்கும் கோவையை சேர்ந்த வெள்ளியங்கிரி என்பவரு க்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பயோஜாஸ்ரீ(10) என்ற மகள் உள்ளார்.
கருத்துவேறுபாடு காரணமாக அருள்ஜோதி கடந்த 6 வருடமாக கணவரை விட்டு பிரிந்து மகளுடன் தந்தை வீட்டில் வசித்து வருகிறார். சம்பவத்தன்று தனது மகளுடன் வீட்டை விட்டு சென்ற அருள்ஜோதி மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து செல்வராஜ் உத்தமபாளையம் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் அவர்களை தேடி வருகின்றனர்.
+2
- அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி என்ற முழக்கத்தை பரப்பி தொடர்கல்வி முயற்சியை கேரளா தொடங்கியது.
- தமிழகத்தில் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது போலவே கேரள மாநிலத்தில் சம்பூர்ணா சாஸ்த்ரா என்ற எழுத்தறிவு திட்டம்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி (வயது 108). இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் பிழைப்பிற்காக கேரள மாநிலம் வண்டன்மேடு பகுதிக்கு சென்று அங்குள்ள ஏலத்தோட்டத்தில் வேலைசெய்து வருகிறார். இவருக்கு 5 குழந்தைகள். கணவர் இறந்துவிட்ட பிறகு 2 மகன், 3 மகள்களுக்கு திருமணம் செய்து கொடுத்தார்.
தற்போதும் இவர் பேரன்கள், கொள்ளு பேரன்கள், பேத்திகள் என 5 தலைமுறைகளை கடந்தும் தோட்ட வேலைக்கு சென்று வருகிறார். 2ம் வகுப்பு வரை மட்டுமே படித்த கமலக்கன்னிக்கு தன்னால் படிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து வந்துள்ளது. தானும் படித்திருந்தால் நல்ல வேலைக்கு சென்று இன்னும் தனது குழந்தைகளை வசதியாக வாழ வைத்திருக்கலாம் என ஏக்கத்துடன் உறவினர்களிடம் கூறிவந்துள்ளார்.
இந்தியாவிலேயே கல்வி அறிவு பெற்றவர்கள் எண்ணிக்கையில் கேரள மாநிலம் முதன்மையான மாநிலமாக உள்ளது. இங்குள்ள வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற நோக்கத்தில் புதிய எழுத்தறிவு மற்றும் தொடர் கல்வி திட்டத்தை அம்மாநில அரசு செயல்படுத்தி உள்ளது. அனைவருக்கும் கல்வி மற்றும் எப்பொழுதும் கல்வி என்ற முழக்கத்தை பரப்பி தொடர்கல்வி முயற்சியை கேரளா தொடங்கியது.
தமிழகத்தில் அறிவொளி இயக்கம் தொடங்கப்பட்டது போலவே கேரள மாநிலத்தில் சம்பூர்ணா சாஸ்த்ரா என்ற எழுத்தறிவு திட்டத்தின் கீழ் வயது முதிர்ந்தவர்களும் கல்வி அறிவை பெறவேண்டும் என்ற நோக்கத்தோடு எழுத்துப்பயிற்சி மற்றும் கையெழுத்து பயிற்சி, வாசிக்கும் திறன் ஆகியவற்றை கற்றுக்கொடுத்து வருகின்றனர்.
இந்த திட்டத்தில் கமலக்கன்னி போன்ற வயது முதிர்ந்தவர்களும் சேர்ந்தனர். இருந்தாலும் அவர்களுக்கெல்லாம் முன்னோடியாக கல்வியின் மீது கொண்ட தீராத பற்றால் தொடர்ந்து பயின்று சாதனை படைத்துள்ளார்.
இந்த படிப்பை முடித்தவர்களுக்கு தேர்வு நடத்தப்பட்டு அதில் வெற்றி பெறுபவர்களுக்கு சான்று வழங்கப்படும். அந்த வகையில் கமலக்கன்னி தேர்வில் 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்றார். இந்த திட்டத்திற்கு முன் உதாரணமாக திகழ்ந்த மூதாட்டியை பஞ்சாயத்து நிர்வாகமும், பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தை பூர்வீகமாக கொண்டிருந்ததால் தமிழும், மலையாளமும் சேர்ந்து படித்து 2 மொழிகளிலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி உள்ளார். இதுகுறித்து கமலக்கன்னி தெரிவிக்கையில்,
எனது பெற்றோர் என்னை பள்ளிக்கு அனுப்பி 2ம் வகுப்புடன் நிறுத்தி விட்டனர். நான் படிக்கும் காலத்தில் பள்ளிக்கு நீண்டதூரம் நடந்து செல்லவேண்டும். மேலும் குடும்ப வறுமையால் பள்ளிக்கு உணவு கொண்டுசெல்ல முடியாது. இதனால் எப்போதாவது பள்ளிக்கு செல்வோம். பின்னர் பள்ளிக்கு செல்வதை நிறுத்தி விட்டோம். என்னை போலவே என்னுடன் பிறந்தவர்களும் படிப்பறிவு இல்லாதவர்கள். இதனால் 15 வயதிலேயே எனக்கு திருமணம் நடந்தது.
அதன் பிறகு படிப்பை பற்றி சிந்திக்க நேரமில்லை. இருந்த போதும் எனது குழந்தைகள், பேரன், பேத்திகள் அனைவரும் பள்ளி, கல்லூரிக்கு சென்று பயின்றனர். அப்போதுதான் நம்மால் இதுபோல் படிக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தது. கல்வி கற்காவிட்டாலும் கேள்வி ஞானம் உள்ளது. தற்போது 108 வயது ஆனபோதிலும் எனது வேலைகளை நானே செய்துகொள்கிறேன். கண்ணாடி அணிவது கிடையாது. எனது குழந்தைகள் என்னை நல்ல முறையில் பார்த்து கொள்கிறார்கள். படிப்பறிவு இல்லையே என்ற குறையை போக்க கேரள அரசு அறிவித்த சம்பூர்ணா சாஸ்த்ரா திட்டம் எனக்கு உதவியாக இருந்தது.
இந்த திட்டத்தில் யார் வேண்டுமானாலும் கிடைக்கும் நேரத்தில் கல்வி கற்றுக்கொள்ளலாம். நம்முடைய இருப்பிடத்திற்கே வந்து சொல்லிக் கொடுப்பார்கள். எனது ஆர்வத்தை பார்த்து எனக்கு தமிழில் உள்ள அனைத்து எழுத்துக்களும், மலையாளத்தில் உள்ள எழுத்துக்களும் கற்றுத்தரப்பட்டன. அதன் பிறகு சொற்களை எழுதும் பயிற்சி அளிக்கப்பட்டது.
பின்னர் எனது பெயரை எழுத கற்றுக்கொடுத்தனர். பலஆண்டுகளாக ஏலத்தோட்டத்தில் கைரேகை வைத்து சம்பளம் வாங்கிய நான் முதன்முதலாக கையெழுத்து போட்டு சம்பளம் வாங்கியபோது அதில் கிடைத்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.
தற்போது சரளமாக படிக்க முடியாவிட்டாலும் எழுத்துக்களை மெதுவாக கூட்டி படித்து வருகிறேன். இதனை தொடர்ந்து 2ம் கட்ட தேர்வு நடத்துவார்கள். அதிலும் நல்ல மதிப்பெண் எடுப்பேன் என நம்புகிறேன்.
இன்றைய காலகட்டத்தில் படிப்பதற்கு ஏற்ற சூழல் இருந்தபோதும் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் வேலைக்கு அனுப்புகின்றனர். ஆனால் எங்களது காலத்தில் பள்ளிக்கு செல்வதே போராட்டமாக இருக்கும். இன்று கல்விக்காக பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.
இதனை குழந்தைகள் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பெற்றோர்களும் படிக்கும் காலத்தில் தங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பாமல் கல்வி கற்க அனுதிக்க வேண்டும். அவர்கள் படித்தால் உங்களுக்கும், அவர்கள் எதிர்காலத்திற்கும் உதவியாக இருக்கும். நான் எடுத்த மதிப்பெண்ணை வைத்து பல்வேறு அதிகாரிகள் என்னை பாராட்டி வருகின்றனர். இது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இன்னும் படிப்பதற்கு இது உதவியாக உள்ளது.
பிச்சை புகினும் கற்கை நன்றே என்று அவ்வையார் கூறினார். ஆனால் அதுபோன்ற நிலை எனக்கு ஏற்படவில்லை. அரசே கல்வி கொடுத்து நன்றாக படித்ததற்காக பாராட்டு சான்றும் வழங்கியுள்ளது என்றார்.
- கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது 2 செல்போன்களை திருடப்பட்டது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து 2 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர்.
தேனி:
பெரியகுளம் ஏ.மீனாட்சி புரத்தை சேர்ந்தவர் சின்னச்சாமி. இவர் தேனியில் செல்போன் கடை வைத்துள்ளார். சம்பவத்தன்று கதவை திறந்து வைத்து விட்டு வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது அதிகாலை நேரத்தில் அங்கு புகுந்த பட்டாளம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவக்குமார் (29) என்பவர் 2 செல்போன்களை திருடிச் சென்றார்.
இது குறித்து தென்கரை போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்து 2 செல்போ ன்களை பறிமுதல் செய்தனர். சிவக்குமார் மீது தென்கரை, பெரியகுளம், பழனி செட்டிபட்டி போலீசில் ஏற்கனவே வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேல்மங்கலத்தை சேர்ந்தவர் தங்கமுத்து ப்பிள்ளை (80). இவர் பட்டாளம்மன் முத்தையா கோவிலில் அறங்காவலர் குழு தலைவராக உள்ளார். சம்பவத்தன்று அங்கு புகுந்த மர்ம நபர்கள் சாமி சிலைகளில் இருந்த வெள்ளி நகையை திருடிச் சென்றனர். இது குறித்து ஜெயமங்கலம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- காணாமல் போன ஆட்டுக்குட்டியை தேடிபார்த்தபோது கிணற்றில் தவறி விழுந்தது தெரியவே அந்த பெண் கிணற்றில் குதித்து ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடு பட்டார்.
- உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போடி தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்து, 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி புதுக்காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா, மகள் சிவபாக்கியம் (வயது28). ஆடு மேய்த்து வருகிறார். போடி பரமசிவன் கோவில் செல்லும் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டை காணவில்லை.
அவர் தேடிபார்த்தபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிவபாக்கியமும், கிணற்றில் குதித்து ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடு பட்டார். ஆனால் அவரால் மீண்டும் மேலே வர முடியவில்லை.
கிணற்று க்குள்ளேயே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போடி தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.
இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிணறுகள் திறந்த வெளி கிணறு களாகவே உள்ளது. இதில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து வருகின்றனர். எனவே சுற்றுச்சுவர் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.
- ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியார் வைகை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர், பார்வர்ட் பிளாக் கட்சியினர் கலந்து கொண்டனர்.
- 9 அம்ச கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
வருசநாடு:
தேனி மாவட்டம் மயிலாடும்பாறையில் ஒருங்கிணைந்த பெரியாறு வைகை 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்ட த்திற்கு 5 மாவட்ட பாசன விவசாயிகள் சங்கத்தலைவர் எஸ்.ஆர்.தேவர் தலைமை தாங்கினார். தேனி மாவட்ட பொதுச் செயலாளர் ராமேந்திரன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் ஒருங்கிணைந்த 5 மாவட்ட பெரியார் வைகை விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக நாம் தமிழர், பார்வர்ட் பிளாக் கட்சியினர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் வாலிப்பாறை அருகே மூலவைகை ஆற்றில் புதிய அணை கட்ட வேண்டும், இலவம் பஞ்சு கிலோ ரூ.120 ,கொட்டை முந்திரி ரூ.110 க்கும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.
வைகை ஆற்றில் வாலிப்பாறை முதல் வைகை அணை வரை 12 இடங்களில் புதிய தடுப்பணைகளை கட்டவேண்டும். வைகை அணையில் பல ஆண்டுகளாக தேங்கியுள்ள மணலை 10 அடி வரை தூர்வாரி அதிகமான நீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விவசாயிகளுக்கு வழங்கப்படும் இலவச மின்சாரத்தை ரத்து செய்யாமல் தொடர்ந்து வழங்க வேண்டும். கூட்டுறவு வங்கிகளில் விவசாயி களுக்கு ரத்துசெய்த நகை க்கடன் ரத்தை அனைத்து விவசாயிகளுக்கும் நீட்டித்து வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரி க்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்ப ப்பட்டன.
- பழுத்து காய்ந்த இலவம் காய்கள் வெடித்து சிதறி சாலைகளில் பரவி வீணாகி வருகிறது
- இலவம் பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் சுமார் 20000-க்கும் மேற்பட்ட ஏக்கரில் இலவம் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. குரங்கனி, கொட்டக்குடி, கொம்புதூக்கி , சிரக்காடு, மேலப்பரவு, உலக்குருட்டி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் அதிகம் இலவம் மரங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
இந்த காயிலிருந்து பெறப்படும் பஞ்சு மெத்தை, தலையணை, இருக்கைகள் தயாரிக்க அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. தரமான இலவம் பஞ்சால் செய்யப்படும் மெத்தை, தலையணைகள் உடல் வெப்ப நிலையை சீராக வைத்திருக்கும் என்பதால் இங்கு விளையும் இலவம் பஞ்சுக்கு வெளிச்சந்தையில் நல்ல மதிப்பு உண்டு. இதனால் உலகளவில் பல்வேறு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
நயம் பஞ்சு ஒரு கிலோ ரூ.280 முதல் ரூ.380 வரை விற்கப்படுகிறது. விதையுடன் கூடிய பஞ்சு கிலோ ரூ.80லிருந்து ரூ.120 வரை விற்கப்பட்டு வருகிறது. இந்த வருடம் இலவம்காய் அமோக விளைச்சல் அடைந்துள்ள போதும் கொள்முதல் விலையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. ஒரு கிலோ பஞ்சு ரூ.45லிருந்து ரூ.50 வரை மட்டுமே விற்பனையாவதால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருவதாக தெரிவிக்கின்றனர்.
இந்த மரங்கள் 60 அடியில் இருந்து 80 அடி வரை வளரக்கூடியது. மரம் முழுவதும் முட்கள் நிறைந்ததாக இருக்கும். எனவே அனுபவம் வாய்ந்த நபர்கள் மட்டுமே மரத்தின் உச்சியில் ஏறி காய்களை பறிக்கும் பணியில் ஈடுபடுவார்கள். இதற்காக நபர் ஒருவருக்கு ஒரு நாளைக்கு ரூ.1000 முதல் ரூ.1100 வரை சம்பளம் கொடுக்கப்படுகிறது.
தற்போது பஞ்சு விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் அதிக கூலி கொடுத்து காய்களை பறிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டள்ளனர். எனவே பழுத்து காய்ந்த இலவம் காய்கள் வெடித்து சிதறி சாலைகளில் பரவி வீணாகி வருகிறது. கடந்த ஆண்டு விலை , விளைச்சல் குறைவாக இருந்ததால் விவசாயிகள் லாபம் இல்லாமல் பாதிக்கப்பட்டனர். இந்த ஆண்டு விளைச்சல் அதிகரித்தும் உற்பத்தி செலவை காட்டிலும் வியாபாரிகள் கொள்முதல் விலை குறைவாக உள்ளதால் நஷ்டத்தை சந்தித்துள்ளனர். தரத்திலும், உற்பத்தியிலும், ஏற்றுமதியிலும் முதன்மையாக உள்ள போடி சுற்றுப்பகுதியில் விளையும் இலவம் பஞ்சுக்கு உரிய விலை கிடைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
- காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
- கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது.
கூடலூர்:
கூடலூர் நகராட்சியில் தூய்மைக்கான மக்கள் இயக்கம் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு வாரமும் 2 மற்றும் 4-ம் சனிக்கிழமைகளில் தூய்மை பணிகள் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி கூடலூர் நகராட்சி 10-வது வார்டு காமாட்சி அம்மன் கோவில் தெரு பகுதியில் தூய்மை திட்ட பணிகளுக்கான உறுதிமொழி எடுக்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் பத்மாவதி லோகந்துரை தலைமை தாங்கினார். ஆணையாளர் காஞ்சனா, மேலாளர் ஜெயந்தி ,சுகாதார ஆய்வாளர் விவேக் ஆகியோர் முன்னிலை வகித்தனர் .
நகராட்சி கவுன்சிலர்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்ட தூய்மை பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தூய்மை பணிக்கான விழிப்புணர்வு உறுதிமொழியை எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு அங்குள்ள கழிப்பறை வளாகங்களில் உள்ள சுவர்களில் வர்ணம் பூசி விழிப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டது. பின் அருகில் உள்ள ஆலமரம் பகுதி, காக்கைக்கு அன்னம் இடும் பகுதிகளில் குப்பைக்கழிவுகளை அகற்றி தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
- தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
- தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் கமலக்கன்னி(108). கடந்த பல ஆண்டுகளுக்கு முன்பே பிழைப்புக்காக இடுக்கி மாவட்டம் வண்டன்மேட்டில் உள்ள ஏலக்காய் தோட்டத்திற்கு வேலைக்கு சென்றுவிட்டார். குடும்ப வறுமை காரணமாக 2-ம் வகுப்புவரை மட்டுமே படித்த கமலக்கன்னி அதன்பிறகு வேலைக்கு சென்றுவிட்டதால் தன்னால் படிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்பட்டார்.
தானும் படித்திருந்தால் நல்ல வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்றி இருக்க முடியும் என தனது உறவினர்களிடம் கூறி வந்துள்ளார். இருந்தபோதும் மீண்டும் தான் படிக்க வேண்டும் என்ற ஆசை மட்டும் அவரிடம் விடவில்லை. கேரள அரசு சம்பூர்ணாசாக்சாத் வகுப்பு என்னும் முழுஎழுத்தறிவுவகுப்பில் கமலக்கன்னி சேர்ந்தார். அங்கு தமிழும், மலையாளமும் எழுத மற்றும் படிக்க கற்றுக்கொண்டார்.
எழுத்து தேர்வு முடிவில் கமலக்கன்னி 100க்கு 97 மதிப்பெண்கள் பெற்று அனைவரின் பாராட்டையும் பெற்றார். தள்ளாத வயதிலும் ஆர்வமுடன் கல்வி அறிவை பெற்ற கமலக்கன்னிக்கு வண்டன்மேடு பஞ்சாயத்து சார்பில் பாராட்டு கேடயம் வழங்கப்பட்டது. அப்போது அவர் தெரிவிக்கையில், இன்றைய சூழலில் கல்வி கற்க அனைத்து வசதிகளும் உள்ளது. இருந்தபோதும் குழந்தைகள் பள்ளிக்கூடம் செல்ல தயங்குகின்றனர். எங்கள் காலத்தில் பள்ளிக்கு செல்லவே நீண்டதூரம் செல்ல வேண்டும். இதனால் எங்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு வேலைக்கு வைத்து கொண்டனர். எனவே மாணவர்கள் கற்கும் காலத்தில் கல்வியை உணர்ந்து படிக்க வேண்டும் என்றார்.
- நிறுவனத்துக்குள் புகுந்து காப்பர் வயர், அலுமினிய வயர், பீஸ் கட்டை உள்ளிட்ட மின் உபகரணப் பொருட்களை திருடிச் சென்றனர்
- பொருட்கைள திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே மதுராபுரி - அழகாபுரி சாலையில் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் உப்புக்கோட்டை மேலத் தெருவைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார்.
சம்பவத்தன்று இந்த நிறுவனத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் அங்கிருந்த காப்பர் வயர், அலுமினிய வயர், பீஸ் கட்டை உள்ளிட்ட மின் உபகரணப் பொருட்களை திருடிச் சென்றனர். மறு நாள் நிறுவனத்துக்கு சென்ற நாகராஜ் பொருட்கள் திருடப்பட்டு இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து அல்லிநகரம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மின் உபகரணப் பொருட்கைள திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.






