என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jumped into the well"

    • காணாமல் போன ஆட்டுக்குட்டியை தேடிபார்த்தபோது கிணற்றில் தவறி விழுந்தது தெரியவே அந்த பெண் கிணற்றில் குதித்து ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடு பட்டார்.
    • உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போடி தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்து, 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி புதுக்காலனியை சேர்ந்தவர் பாண்டி. இவரது மனைவி சந்திரா, மகள் சிவபாக்கியம் (வயது28). ஆடு மேய்த்து வருகிறார். போடி பரமசிவன் கோவில் செல்லும் சாலையில் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு ஆட்டை காணவில்லை.

    அவர் தேடிபார்த்தபோது அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சிவபாக்கியமும், கிணற்றில் குதித்து ஆட்டை காப்பாற்றும் முயற்சியில் ஈடு பட்டார். ஆனால் அவரால் மீண்டும் மேலே வர முடியவில்லை.

    கிணற்று க்குள்ளேயே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் போடி தீயணைப்புத்துறை யினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து 3 மணி நேர போராட்டத்துக்கு பின்னர் உயிருடன் மீட்டனர்.

    இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கிணறுகள் திறந்த வெளி கிணறு களாகவே உள்ளது. இதில் கால்நடைகள் மற்றும் பொதுமக்கள் தவறி விழுந்து வருகின்றனர். எனவே சுற்றுச்சுவர் கட்ட நட வடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து ள்ளனர்.

    ×