என் மலர்tooltip icon

    தேனி

    • காட்ேராடு அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் நடந்து சென்ற போது வாகனம் மோதியது.
    • சம்பவ இடத்திலேயே பலியானார்.

    தேனி:

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(57). இவர் அப்பகுதியில் உள்ள ஓட்டலில் புரோட்டா மாஸ்டராக வேலைபார்த்து வந்தார்.

    சம்பவத்தன்று வேலைக்கு சென்ற முத்துப்பாண்டி காட்ேராடு அருகே கொடைக்கானல் செல்லும் சாலையில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த

    அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்தபுகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.
    • 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் 54 அடியாக குறைந்துள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் தேனி,மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் கோடைகாலம் தொடங்கியதில் இருந்து மழைப்பொழிவு இல்லாததால் கடும் வறட்சி நிலவி வருகிறது.

    மேற்குதொடர்ச்சி மலை மற்றும் தேனி மாவட்டத்தில் மழை இல்லாததால் அணைகளுக்கு நீர்வரத்து கடுமையாக சரிந்தது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணையில் நீர்மட்டம் தற்போது மழை இல்லாததால் 54 அடியாக குறைந்துள்ளது. இதனால் வரும் காலங்களில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படும் வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அணைக்கு நீர்வரத்து 49 கனஅடிநீராக உள்ளது.

    72 கனஅடிநீர் மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக திறக்கப்படுகிறது. இருப்பு 2602 மி.கனஅடியாக உள்ளது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.15 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லை. 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1934 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது.

    நீர்வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 155.59 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 61 அடியாக உள்ளது. அணைக்கு 3 கனஅடிநீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 23.09 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.

    • கோவிலுக்கு சென்று மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.
    • பீரோவில் இருந்த 18 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூ.5000 மாயமாகி இருந்தது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே தேவாரத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 40). இவர் செங்கல் காலவாசல் வைத்து நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது குடும்பத்துடன் மதுரை பாண்டி கோவிலுக்கு சென்றார்.

    அவசரத்தில் வீட்டு கதவை பூட்டாமல் சென்றுள்ளனர். மீண்டும் திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்துள்ளது.

    பீரோவில் இருந்த 18 பவுன் தங்கம், 100 கிராம் வெள்ளி நகைகள் மற்றும் பணம் ரூ.5000 மாயமாகி இருந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து நகை, பணம் திருடிச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    தேவாரம் அருகே கிருஷ்ணம்பட்டியைச் சேர்ந்தவர் அன்பரசு (31). இவர் சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று குடும்பத்துடன் உறவினர் வீட்டுக்கு சென்றார். திரும்பி வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. மேலும் பொருட்களும் சிதறிக்கிடந்ததால் அதிர்ச்சியடைந்த அன்பரசு உள்ளே சென்று பார்த்தார்.

    அங்கு வெள்ளி க்கொலுசு உள்ளிட்ட பொருட்கள் திருடு போயிருந்தது. இது குறித்து தேவாரம் போலீசில் புகார் அளித்தார். அதில் சிலிண்டர் வாங்க வந்த மோகன் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.

    • முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது.
    • சலவைத்தொழில் செய்து வரும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் முல்லை பெரியாற்றிலிருந்து மதுரை மாநகர் பகுதிக்கு குழாய் மூலம் குடிநீர் கொண்டுசெல்லும் திட்டத்திற்கு குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இதே இடத்தில் சலவைத்தொழில் செய்து வரும் மக்கள் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது மாநகராட்சி அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி தனியாக பாதை, படித்துறை, தங்கும்அறை மற்றும் மின்இணைப்பு வழங்கு வதாக உறுதியளித்தனர். ஆனால் தற்போது வரை அதற்கான பணிகள் நடைபெறவில்லை. இந்நிலையில் மதுரை மாநகராட்சி பொறியாளர் அரசு தலைமையில் செயற்பொறியாளர் பாக்கியலெட்சுமி உள்பட 30 பேர் கொண்ட பொறியாளர் குழு ஆய்வுக்கு வந்தது.

    அப்போது கூடலூர் சலவை தொழிலாளர்கள் சங்க நிர்வாகி குமரன் தலைமையில் பொறியாளர் குழுவை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு உறுதியளித்த கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை. உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதனால் அதிர்ச்சியடைந்த பொறியாளர் குழுவினர் மேயர், ஆணையாளரிடம் கூறி நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறிய பின்பு கலைந்து சென்றனர்.

    ஆய்வு செய்ய வந்த மாநகராட்சி பொறியாளர் குழுவை சலவை தொழிலாளர்கள் முற்று கையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கடந்த ஒரு வருடமாக காசநோயால் பாதிக்கப்பட்டு இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
    • நோய் குணமாகாததால் வாழ்க்கையில் வெறுப்படைந்து பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் சிறப்பாறை அருகே உள்ள சீலமுத்தையாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வ ரன்(35). கூலித்தொழிலாளி. இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், சிவரஞ்சனி என்ற மகளும் உள்ளனர். ஈஸ்வரனுக்கு கடந்த ஒரு வருடமாக காசநோயால் பாதிக்கப்பட்டு இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

    இருந்தபோதும் நோய் குணமாகாததால் சம்பவ த்தன்று வாழ்க்கையில் வெறுப்படைந்த ஈஸ்வரன் பிளேடால் தனக்கு தானே கழுத்தை அறுத்து மயங்கி விழுந்தார்.

    க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதி க்கப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வருசநாடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.
    • சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார்.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி மஞ்சளாறு அணை வாய்க்கால் தெருவை சேர்ந்த செல்லத்துரை மகள் ரதிஷாஸ்ரீ(18). 10-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார். இவருக்கு காது சரியாக கேட்காமல் இரவில் பார்வைகுறைபாடும் இருந்து வந்துள்ளது.

    சம்பவ த்தன்று தனது பெரியப்பா வீட்டிற்கு செல்வதாக கூறிச்சென்றவர் மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து அவரது தாய் செல்வி கொடுத்த புகாரி ன்பேரில் தேவதானப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • செல்போனை திருடிக்கொண்டு தப்பிஓட முயன்றார்.
    • போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்யபட்டது.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகில் உள்ள ஜல்லிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்தவர் தினேஷ்(32). இவரது தம்பி மகேஸ். அதேபகுதியில் தனியாக வசித்து வருகிறார். சம்பவத்தன்று தினேஸ் புதிய வீட்டில் தூங்கிகொண்டிருந்தபோது மர்மநபர் உள்ளே நுழையும் சத்தம் கேட்டது. அவர் விழித்து எழுந்து அவரை பிடிக்க முயன்றார்.

    அப்போது வீட்டில் இருந்த செல்போனை திருடிக்கொண்டு தென்கரை சேவியர் தெருவை சேர்ந்த தவமணி மகன் மனோஜ்(20) என்பவர் தப்பிஓட முயன்றார். அவரை பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அவரை கைது செய்து செல்போனை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.

    • ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
    • இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அம்பேத்கர் பிறந்தநாள்விழா நேற்று கொண்டாடப்பட்டது. பழைய பஸ்நிலையம் அருகே உள்ள அம்பேத்கார் சிலைக்கு பல்வேறு தரப்பினரும் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    இரவில் முளைப்பாரி எடுத்து வானவேடிக்கை முழங்க பலர் ஊர்வலமாக வந்தனர். அப்போது யார் முதலில் சென்று அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவது என்பதில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது. இருவரும் பயங்கரமாக தாக்கி கொண்டதால் அங்கிருந்த போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி அங்கிருந்து கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர்.

    அதன்பிறகு இருதரப்பினரும் கலைந்து சென்றபோது போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்கினர். அப்போது போலீஸ் நிலையத்தில் காவலர்கள் இல்லாததால் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், போலீஸ் வாகனம், 108 ஆம்புலன்ஸ் ஆகியவற்றையும் அடித்து நொறுக்கினர். மேலும் அவ்வழியாக வந்த அரசு பஸ் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தினர். இதனால் அங்கிருந்த பொதுமக்கள் அலறிஅடித்து ஓட்டம் பிடித்தனர்.

    போலீசார் கல்வீசி தாக்கியவர்களை பிடிக்க முயன்றனர். ஆனால் போலீசாரையும் அந்த கும்பல் கல்வீசி தாக்கினர். ஏ.டி.எஸ்.பி மற்றும் 2 இன்ஸ்பெக்டர்களை கல்வீசி விரட்டி விரட்டி தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி மற்றும் போலீசார் பலத்த காயமடைந்தனர். இதனைதொடர்ந்து சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் சரக டி.ஐ.ஜி அபினவ்குமார், மாவட்ட எஸ்.பி பிரவீன் உமேஸ்டோங்கரே வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய உத்தரவிட்டனர்.

    இதனையடுத்து இரவு முழுவதும் விடியவிடிய தேடுதல் வேட்டை நடத்தி கலவரத்தில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 70 பேர் கைது செய்யப்பட்டனர். ஆனால் போலீசாரிடம் ஒருதரப்பை சேர்ந்தவர்களை மட்டுமே அதிகளவில் கைது செய்திருப்பதாக கூறி வாக்குவாதம் செய்தனர்.

    கல்வீச்சு சம்பவத்தால் பெரியகுளத்தில் பதட்டமான சூழல் உருவானதால் அப்பகுதியில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. இன்றும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. போலீசார் முக்கிய இடங்களில் பேரிகார்டுகளை போட்டு பிரச்சினை ஏற்படாத வகையில் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    தொடர்ந்து கலவரத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் முயற்சியில் போலீசார் இறங்கியுள்ளனர். கடந்த 2010-ம் ஆண்டு அம்பேத்கார் பிறந்தநாள்விழாவில் இதேபோன்று மோதல் ஏற்பட்டதாகவும், அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து வந்தனர் என்றும், அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். ஆனால் இந்த ஆண்டு இரவு நேரத்தில் பிரச்சினைக்குரிய இடத்தில் அதிகளவு மக்களை அனுமதித்தால் கலவரம் வெடித்ததாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    • இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.
    • ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார்.

    ராமேசுவரம்:

    இந்தியா-இலங்கை இடையே உள்ள கடல் பகுதியில் நீந்தி பலர் சாதனை படைத்துள்ளனர். இலங்கை தலை மன்னார்-தனுஷ்கோடி இடையேயான பாக் ஜலசந்தி கடற்பகுதியை 1994-ம் ஆண்டு குற்றாலீஸ் வரன் தனது 12 வயதிலும், 2019-ம் ஆண்டு தேனியை சேர்ந்த ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் நீந்தி கடந்தனர்.

    அதேபோல் ஆட்டி சத்தால் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த ஜியாராய் என்ற 13 வயது சிறுமி 2012-ம் ஆண்டு மார்ச் 20-ந்தேதியும், தேனியை சேர்ந்த சினேகன் என்ற 14 வயது சிறுவன் அதே மாதத்தில் 29-ந்தேதி யும் தலைமன்னார்-தனுஷ் கோடி இடையே கடலில் நீந்தி சாதனை படைத்தனர்.

    இவர்களை போன்றே பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் உள்ளிட்டோர் இந்த கடல் பகுதியை நீந்தி கடந்துள்ளனர். இந்நிலையில் சென்னையை சேர்ந்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஒருவர், இலங்கை தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் 32 கி.மீ. நீந்தி சாதனை படைத்துள்ளார்.

    சென்னை வடபழனியை சேர்ந்த ராஜசேகரன்-வனிதா தம்பதியரின் மகன் ஸ்ரீராம் சீனிவாஸ்(வயது29). கால், கைகள் செயல்திறன் குறைந்த மாற்றுத்திறனாளி வாலிபரான இவர் நீச்சலில் ஆர்வம் கொண்டவர். தனது 4 வயதில் இருந்தே நீச்சல் பயிற்சி பெற்று வரும் இவர், அதில் பல சாதனைகளை படைக்கும் நோக்கத்தில் செயல்பட்டு வந்தார்.

    ஏற்கனவே கடலூர் அருகே 5 கி.மீ. தூரம் கடலில் நீந்தி ஜனாதிபதி விருது பெற்றுள்ளார். இந்த நிலையில் இலங்கை தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைக்க முடிவு செய்தார். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் தனது பெற்றோர் மற்றும் நீச்சல் பயிற்சியாளர்கள் உள்ளிட்டோருடன் ராமேசு வரத்திற்கு வந்தார்.

    அவர் தனது சாதனை பயணத்தை தொடங்குவதற்காக இலங்கை தலை மன்னார் ஊர்முனை கடல் பகுதிக்கு நேற்று முன்தினம் சென்றார். அன்று மாலை 5 மணிக்கு மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாஸ் தலைமன்னாரில் இருந்து நீச்சல் அடிக்க தொடங்கினார்.

    தொடர்ந்து இரவிலும் விடாமல் நீந்திய அவர், நேற்று மதியம் 1.30 மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதிக்கு வந்து சேர்ந்தார். தலை மன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான 32 கி.மீ. தூர கடல் பகுதியை 20 மணிநேரம் 20 நிமிடத்தில் கடந்துள்ளார்.

    இதன் மூலம் இந்த கடல் பகுதியை கடந்த முதல் மாற்றுத்திறனாளி வாலிபர் என்ற சாதனையை அவர் படைத்தார். அவருக்கு கொல்கத்தாவை சேர்ந்த யுனிவர்சல் வேர்ல்டு ரெக்கார்டு அமைப்பின் சார்பில் சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.

    சாதனைக்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு ராமேசுவரம் துணை போலீஸ் சூப்பிரண்டு உமாதேவி வழங்கி பாராட்டினார். சாதனை படைத்த வாலிபரை அவரது பெற்றோர், உறவினர்கள் பொன்னாடை போர்த்தி வரவேற்றனர். மேலும் பாரதீய ஜனதா கட்சியினரும் நேரில் சென்று வாலிபரை பாராட்டினர்.

    தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரை கடலில் நீந்தி சாதனை படைத்த மாற்றுத்திறனாளி வாலிபர் ஸ்ரீராம் சீனிவாசுக்கு அதிகாரிகள், அரசியல் கட்சியினர், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். 

    • யோகேஷ்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்தது பொதுமக்களை கண்கலங்க வைத்தது.
    • யோகேஷ்குமார் மறைவால் தேவாரம், மூணாண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த சோகம் அடைந்தனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகில் உள்ள மூணாண்டிபட்டியை சேர்ந்த ஜெயராஜ் மகன் யோகேஷ்குமார் (வயது25). இவர் பஞ்சாப் மாநிலம் பதிண்டா பகுதியில் உள்ள ராணுவ முகாமில் பணியில் இருந்தபோது நடந்த துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தார்.

    திருணமாகாத யோகேஷ்குமாருக்கு சங்கீதா (31), சர்மிளா ஆகிய 2 சகோதரிகள் உள்ளனர். உசிலம்பட்டியில் உள்ள கல்லூரியில் இளநிலை பட்டப்படிப்பை முடித்த இவர் கடந்த 2019ம் ஆண்டில் ராணுவத்தில் சேர்ந்தார்.

    உயிரிழந்த யோகேஷ்குமார் உடல் விமானம்மூலம் பஞ்சாபில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு இன்று காலை 8.30 மணிக்கு வந்தடைந்தது. பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அவரது உடல் மூணாண்டிபட்டிக்கு பகல் 11.30 மணிக்கு வந்தடைந்தது. அங்கு அவரது உடலை உறவினரிடம் ராணுவத்தினர் ஒப்படைத்தனர். அங்கு பிரத்தியேகமாக அமைக்கப்பட்டிருந்த மேடையில் யோகேஷ்குமார் உடலுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அஞ்சலி செலுத்தினர்.

    யோகேஷ்குமார் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் குடும்பத்தினர் கதறி அழுத்தது பொதுமக்களை கண்கலங்க வைத்தது. தனது ஒரே மகனை ராணுவத்தில் சேர்த்து துப்பாக்கி குண்டுக்கு பலியாகிய ஜெயராஜ் மற்றும் அவரது மனைவிக்கு கிராம மக்கள் ஆறுதல் தெரிவித்தனர்.

    யோகேஷ்குமார் மறைவால் தேவாரம், மூணாண்டிபட்டி மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் மிகுந்த சோகம் அடைந்தனர். 

    • 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் அருகே எ.புதுக்கோட்டையை சேர்ந்தவர் சுந்தர்(31). அதேபகுதியை சேர்ந்த சுவாதி என்பவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு சுந்தரை 2-வது திருமணம் செய்து கொண்டார். 5 மாத கர்ப்பிணியாக இருந்த நிலையில் சுவாதியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்துவந்தார்.

    மேலும் மதுகுடித்துவந்து சுவாதி மற்றும் அவரது குடும்பத்தினரை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கினார். சம்பவத்தன்றும் இதேபோல் அவர் சுவாதியை தாக்கியதால் படுகாயமடைந்தார். இந்நிலையில் திடீரென வயிற்றுவலி அதிகமாகவே சுவாதியை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் கரு கலைந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    மேலும் சுவாதிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து சுந்தரை கைது செய்தனர்.

    • திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தவரை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
    • சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டி அருகே ரெங்கசமுத்திரத்தை சேர்ந்தவர் சீனியம்மாள்(67). இவர் தனது பேத்தியுடன் மோட்டார் சைக்கிளில் மாத்திரை வாங்க சென்றார். அப்போது திடீரென தலைசுற்றல் ஏற்பட்டு பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

    இதில் தலை யில் பலத்த காயமடைந்த சீனியம்மாள் ஆண்டிபட்டி அரசு ஆஸ்ப த்திரிக்கு கொண்டு செல்ல ப்ப ட்டார். அங்கி ருந்து தேனிக்கும், பின்னர் மேல்சிகி ச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரி க்கும் அனுப்பி வைக்கப்ப ட்டார்.

    அங்கு சிகிச்சை பலனி ன்றி அவர் உயிரி ழந்தார். இதுகுறித்து வைகை அணை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×