என் மலர்
தேனி
- ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
- அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் கம்பம் மெட்டு வழியாக கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தப்படுவதாக உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து பறக்கும்படை அலுவலர் முத்துக்குமார், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் இன்று அதிகாலை ரோந்து பணியில் ஈடுபட்டனர். கம்பம் மெட்டு அருகே ஒரு வாகனத்தில் ரேசன் அரிசி மூடைகள் கடத்திச் செல்லப்பட்டது அறிந்து அதனை தடுத்து நிறுத்தினர்.
ஆனால் அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் அதி வேகத்தில் சென்றனர். இருந்தபோதும் அதிகாரிகள் துரத்திச் சென்று வாகனத்தை பிடித்தனர். அதில் 2050 கிலோ பொது வினியோக திட்டத்துக்கான ரேசன் அரிசி மூடைகள் இருந்தது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகள் அந்த ரேசன் அரிசி மூடைகளை கைப்பற்றினர். மேலும் அரிசி மூடைகளை கடத்தி வந்த வாகனத்தையும் பிடித்து நுகர்பொருள் வாணிப கிட்டங்கியில் ஒப்படைத்தனர். வாகனத்தில் வந்த 3 பேர் தப்பி ஓடியதால் அவர்களை தேடி வருகின்றனர்.
மேலும் இந்த அரிசி மூடைகள் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? இதில் தொடர்புடைய நபர்கள் யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே நந்தவனம் 3வது தெருவை சேர்ந்தவர் செல்வக்குமார் மகள் கார்த்தியாயினி (வயது20). இவர் போடி தனியார் கல்லூரியில் இளநிலை 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் சம்பவத்தன்று கல்லூரி சென்று விட்டு வருவதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் செல்வக்குமார் போடி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை போலீசார் தேடி வருகின்றனர்.
- மதுபழக்கத்திற்கு அடிமையான வாலிபர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார்.
- சம்பவத்தன்று வாலிபர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
போடி அருகே டி.வி.கே.கே நகர் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(23). இவர் போடியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பவித்ரா(23).
இந்தநிலையில் மதுபழக்கத்திற்கு அடிமையான கார்த்திக் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று இரவு தூங்கசென்ற கார்த்திக் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவரை மீட்ட உறவினர்கள் தேனி க.விலக்கு அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் டாக்டர்கள் கார்த்திக்கை பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போடிநகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 22ந் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
- சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தேனி:
தேனி மாவட்ட போலீசாரால் கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்கள் வருகிற 22ந் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 21ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, ஏதேனும் ஒரு 4 சக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு ஆயுதப்படை அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது.
- வைகை அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது.
கூடலூர்:
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 116.05 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1916 மி.கனஅடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.20 அடியாக உள்ளது.
அணைக்கு 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இருப்பு 2541 மி.கனஅடியாக உள்ளது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து, திறப்பும் இல்லை. இருப்பு 155.59 மி.கனஅடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.84 அடியாக உள்ளது.
அணைக்கு 1 கனஅடி நீர் வருகிறது. 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. இருப்பு 22.98 மி.கனஅடியாக உள்ளது. மழை எங்கும் இல்லை.
- தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் வருகிற மே மாதம் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது.
- கண்ணகி கோவில் வழிபாடு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகள் மற்றும் அறக்கட்டளை நிர்வாகிகளுடனும் கலெக்டர் தலைமையில் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது.
தேனி:
தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் வருகிற மே மாதம் 5-ந்தேதி சித்ரா பவுர்ணமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனைமுன்னிட்டு இடுக்கி, தேனி மாவட்ட கலெக்டர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பின் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது,
மங்கலதேவி கண்ணகி கோவிலின் விழா சிறப்பாக கொண்டாட இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரசு அலுவலர்க ளுடனும், கண்ணகி கோவில் அறக்கட்டளை நிர்வாகி களுடனும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டது. அதனடிப்படையில், இந்த ஆண்டு மங்கலதேவி கண்ணகி கோயில் விழா சிறப்பாக நடைபெறுவத ற்கான அனைத்து அடிப்ப டை வசதிகள் செய்து தரப்பட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. காலை 6 மணிமுதல் மதியம் 2 மணி வரை கோயிலுக்குச் செல்ல அனுமதி வழங்க ப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு காலை 6.00 மணி முதல் மதியம் 2.30 மணி வரை பக்தர்கள் கோயிலுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு ள்ளது.
பக்தர்கள் கோவிலில் இருந்து கீழே செல்வதற்கு மாலை 5.00 மணி வரை அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்தாண்டு மாலை 5.30 மணிக்குள் கீழே செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் அனைத்து பக்தர்களும் வழிபாடு செய்திட ஏதுவாக வும், பக்தர்களின் பாது காப்பிற்காகவும், சுற்றுச்சு ழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், பிளாஸ்டிக், எளிதில் தீப்பற்றக்கூடிய பொரு ட்களை எடுத்து செல்வதற்கு சில கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்டுள்ளது.
பக்தர்கள் பாதுகாப்புடன் எவ்வித சிரமமின்றி மங்கலதேவி கண்ணகி கோயிலில் வழிபாடு செய்து திரும்பும் பொருட்டு வாக னங்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்கும் வகையில்வாகன தரச்சான்றிதழ் மே 2-ந்தேதி முதல் 4-ந்தேதி வரை மாலை 5 மணிக்கு வழங்க ப்படவுள்ளது. ஒரு முறை அனுமதிச்சீட்டு பெற்றால் போதுமானது. அதனை அன்றைய தினம் முழுவதும் பயன்படுத்திக் கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்தாண்டு 16,000 பக்தர்கள் கோவிலுக்கு வருகை தந்துள்ளனர். கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களுக்கு கடந்த முறை 6 கழிப்பறைகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது, இந்தாண்டு கூடுதலாக 6 கழிப்பறைகள், கூடுதலாக குடிநீர் வசதிகள், வழி நெடுகிலும் பாதுகாப்பு வசதிகள், கடந்தாண்டை விட இந்தாண்டு பக்தர்களின் வருகை அதிக அளவில் இருப்பதற்கு வாய்ப்புகள் இருப்பதை கருத்தில் கொண்டு, கூடுதலாக கழிப்பறை, குடிநீர், பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், பளியன்குடி வழியாக வருகை தரும் பக்தர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதிகள் ஏற்படுத்திடவும் நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. திருவிழாவினை சிறப்பாக கொண்டாடிட அனைத்து பக்தர்களும் இரு மாநில மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டுதலுக்கு முழு ஒத்துழைப்பினை வழங்கிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.
- சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
- ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அணைக்கரைக்கப்பட்டி காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் நம்பெருமாள் ராஜ் (வயது 49). இவரது மனைவி நிர்மலா தேவி (45). இவர்களது மகன் ராகுல்ராஜ் (15). இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டு இருந்தார். இவரை தாய் நிர்மலா தேவி கவனித்து வந்த நிலையில் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நோய்வாய்பட்டு இறந்து விட்டார்.
அப்போது முதல் நம்பெருமாள் ராஜ் தனது மகனை கவனித்து வந்துள்ளார். மேலும் மனைவி இறந்ததால் மகனை சரிவர கவனிக்க முடியாமல் குடிப்பழக்கத்துக்கு அடிமையானார். இதனால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்ய முடிவு செய்தார். தான் இறந்து விட்டால் தனது மகனை யாரும் கவனிக்க மாட்டார்கள் என நினைத்து அவருக்கு விஷம் கொடுத்து தானும் அதே விஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.
அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தேனி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிகிச்சையில் இருந்த ராகுல்ராஜ் மற்றும் நம்பெருமாள் ராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இது குறித்து அவரது உறவினர் ஆனந்தகுமார் போடி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீட்டுக்கு அருகில் வசிப்பவர்கள் முருகேஸ்வரியை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
- மனவேதனையில் இருந்தவர் தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி மாவட்டம் சின்னமனூர் காந்திநகர் காலனி 5-வது தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி முருகேஸ்வரி (வயது 38). இவர் சீப்பாலக்கோட்டை அங்கன்வாடி மையத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். கணவர் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இவரது மகன் சந்துரு (19) கடந்த 2 வருடங்களுக்கு முன்பு திருநங்கையாக மாறி விட்டார். இவர்களது வீட்டுக்கு அருகில் வசிக்கும் பாண்டி, அவரது மனைவி ஆகியோர் முருகேஸ்வரியை தரக்குறைவாக பேசி வந்துள்ளார்.
இது குறித்து கோவையில் இருந்த தனது மகனிடம் முருகேஸ்வரி கூறி அழுதார். அவர் சமாதானப்படுத்திய நிலையில் மனவேதனை யில் இருந்த முருகேஸ்வரி தனது வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சந்துரு சின்னமனூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். தனது தாயை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனிசெட்டிபட்டியை சேர்ந்தவர் அய்யப்பன் மனைவி காளியம்மாள் (வயது62). இவரது மகன் காமுத்துரை (42). இவர் திருப்பூரில் வேலை பார்த்து வருகிறார். காளியம்மாள் தனது சகோதரி பராமரிப்பில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இது குறித்து தகவல் அறிந்ததும் காமுத்துரை சொந்த ஊர் திரும்பி அக்கம் பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் கிடைக்காததால் பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை தேடி வருகின்றனர்.
உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் அன்பழகன் மனைவி வேல்மணி (53). இவர் பல இடங்களில் கடன் வாங்கி இருந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்ததால் வேல்மணி மாயமானார். இது குறித்து ராயப்பன்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை கொண்டு வர வேண்டும்.
- ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தேனி:
தேனியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் ரமேஷ், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரன் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பொதுக்குழுவின் தீர்மானங்களை முன்மொழிந்தார்.
கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை கொண்டு வர வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.
ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பணி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் குருலட்சுமி, ஜனார்த்தனன் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சின்னமனூர் வட்டார செயலாளர் மகள் சபரினாதவ்மி நீளம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை படைத்தமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்
- வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
- குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.
பெரியகுளம்:
தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார த்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடை க்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை இல்லாததாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அருவிக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.
இந்நிலையில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர். சிலர் அருவியின் மேல் பகுதியில் உள்ள தேங்கிய தண்ணீரில் குளித்து வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர். மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 10 நாட்களில் அருவி வறண்டு போகும் அபாயம் உள்ளது
- மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
- மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(48). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மாரிச்செல்வம் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






