என் மலர்
நீங்கள் தேடியது "Laborer suicide"
- நெட்டப்பாக்கம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- கடந்த சில ஆண்டுகளாக ராஜேந்திரன் ஆணி பாதம் நோயினால் அவதிப்பட்டு வந்தார்.
புதுச்சேரி:
நெட்டப்பாக்கம் அருகே கூலி தொழிலாளி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெட்டப்பாக்கம் அருகே பண்டசோழநல்லூர் புதுகாலனி 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன்(வயது56). கூலி தொழிலாளி. இவருக்கு மயிலம்மாள் என்ற மனைவியும், சீதா என்ற மகளும் உள்ளனர். சீதாவுக்கு திருமணமாகி அவரது கணவர் சாந்தலிங்கத்துடன் தனது தாய் வீட்டிலேயே வசித்து வருகிறார்.
கடந்த சில ஆண்டுகளாக ராஜேந்திரன் ஆணி பாதம் நோயினால் அவதிப்பட்டு வந்தார். அதற்காக ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றும் ஆணி பாதம் நோய் குணமாகவில்லை.
இதனால் மனமுடைந்த ராஜேந்திரன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். வீட்டில் யாரும் இல்லாத போது அவர் ஜன்னல் கம்பியில் கயிற்றால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து அவரது மருமகன் சாந்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் நெட்டப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
- மனஉளைச்சலில் இருந்த அவர் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தேனி:
தேனி பாரஸ்ட் ரோடு பகுதியை சேர்ந்தவர் மாரிச்செல்வம்(48). இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். டெய்லரிங் வேலை பார்த்து வந்தார். மது பழக்கத்திற்கு அடிமையானதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது.
இதனால் அவரது மனைவி கோபித்துக்கொண்டு தனது தாய்வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் மனஉளைச்சலில் இருந்த மாரிச்செல்வம் வீட்டிலேயே தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தேனி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






