என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "District General Committee"

    • தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை கொண்டு வர வேண்டும்.
    • ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    தேனி:

    தேனியில் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் ரமேஷ், திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் சந்திரன் கூட்டமைப்பின் செயல்பாடுகள் மற்றும் பொதுக்குழுவின் தீர்மானங்களை முன்மொழிந்தார்.

    கூட்டத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதியின் படி தமிழகத்தில் உள்ள அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதிய திட்ட முறையினை கொண்டு வர வேண்டும். அனைத்து அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தபட்சம் 8 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் என்பதை உறுதி செய்ய வேண்டும்.

    ஆசிரியர்களுக்கான பணி பாதுகாப்பு சட்டத்தினை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பன உள்பட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக பணி ஓய்வு பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் குருலட்சுமி, ஜனார்த்தனன் ஆகியோர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. சின்னமனூர் வட்டார செயலாளர் மகள் சபரினாதவ்மி நீளம் தாண்டுதலில் தேசிய அளவில் சாதனை படைத்தமைக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. முடிவில் மாவட்ட பொருளாளர் செந்தில் நன்றி கூறினார்

    ×