என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
தேனி மாவட்ட போலீசார் சார்பில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம்
- பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வருகிற 22ந் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது.
- சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம்.
தேனி:
தேனி மாவட்ட போலீசாரால் கழிவு செய்யப்பட்ட 6 நான்கு சக்கர வாகனங்கள், 3 இரு சக்கர வாகனங்கள் என மொத்தம் 9 வாகனங்கள் வருகிற 22ந் தேதி காலை 10 மணிக்கு தேனி மாவட்ட ஆயுதப்படை வாகன பிரிவு வளாகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வருகிற 21ந் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை பார்வையிட்டுக் கொள்ளலாம்.
மேலும் ஏலம் எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அன்றே இருசக்கர வாகனத்திற்கு ரூ.1000, ஏதேனும் ஒரு 4 சக்கர வாகனத்துக்கு ரூ.2 ஆயிரம் முன்பணம் செலுத்தி தங்களது பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். ஏலம் எடுத்தவுடன் முழு தொகை மற்றும் அதற்குண்டான சரக்கு மற்றும் சேவை வரி முழுவதையும் அரசுக்கு ரொக்கமாக செலுத்தி வாகனத்தை பெற்றுக்கொள்ளலாம் என போலீசார் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு ஆயுதப்படை அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம். ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் கட்டாயமாக முககவசம் அணிந்து வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.






