search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சுட்டெரிக்கும்  வெயில், பள்ளி விடுமுறையால் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
    X

    கும்பக்கரை அருவியில் காத்திருந்து குளியல் போடும் சுற்றுலா பயணிகள்.

    சுட்டெரிக்கும் வெயில், பள்ளி விடுமுறையால் கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்

    • வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
    • குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர்.

    பெரியகுளம்:

    தேனிமாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவி மேற்கு தொடர்ச்சி மலை அடிவார த்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மற்றும் கொடை க்கானல் பகுதிகளான வட்டக்கானல், வெள்ள கெவி உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழையால் அருவிக்கு நீர்வரத்து வருகிறது. இந்நிலையில் கடந்த 20 நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் முற்றிலும் மழை இல்லாததாலும், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாலும் அருவிக்கு குறைந்த அளவே நீர்வரத்து உள்ளது.

    இந்நிலையில் கோடை விடுமுறை தொடங்கி உள்ளது. இதனால் வெப்பத்தை தணிக்க கும்பக்கரை அருவிக்கு தேனி, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.

    மேலும் வெளி மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர். ஆனால் குறைந்த அளவே தண்ணீர் கொட்டியதால் நீண்ட நேரம் காத்திருந்து குளித்து சென்றனர். சிலர் அருவியின் மேல் பகுதியில் உள்ள தேங்கிய தண்ணீரில் குளித்து வெயிலில் இருந்து பாதுகாத்துக் கொண்டனர். மழை பெய்தால் மட்டுமே நீர்வரத்து இருக்கும். இந்த நிலை தொடர்ந்தால் 10 நாட்களில் அருவி வறண்டு போகும் அபாயம் உள்ளது

    Next Story
    ×