என் மலர்tooltip icon

    தேனி

    • தனியார் நிறுவன ஊழியருக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.
    • வாலிபர் உடலில் காயங்களுடன் மர்மமாக இறந்துகிடந்தார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அண்ணாநகர் நந்தவனத்தெருவைச் சேர்ந்த கருப்பையா மகன் அழகுராஜா (வயது 34). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் இவரது அத்தை மகள் மீனா என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஹரினி என்ற பெண் குழந்தை உள்ளது. அழகுராஜாவுக்கும், அவரது மனைவி மீனாவுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று அழகுராஜா உடலில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இது குறித்து அழகுராஜாவின் தம்பி கார்த்திகேயனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் சம்பவ இடத்துக்கு வந்து மீனாவிடம் விசாரித்த போது அழகுராஜாவுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. திடீரென இறந்து விட்டார் என கூறினார்.

    ஆனால் அவரது பேச்சில் சந்தேகம் இருந்ததால் இது குறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் கார்த்திகேயன் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் மீனாட்சி, சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜா ஆகியோர் வழக்கு பதிவு செய்து அழகுராஜாவின் உடலை பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தேனி அருகே வெவ்வேறு சம்பவங்களில் பெண் உள்பட 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • தற்கொலைகள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே தென்பழனியை சேர்ந்தவர் செல்வக்குமார்(25). இவருக்கு திருமணமாகி 1 மகன் உள்ளார். டிரைவர் வேலை பார்த்து வந்த செல்வக்குமாருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டது. இதனால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றார். ஆனால் குணமாகவில்லை. இதனால் மனஉளைச்சலில் இருந்த செல்வக்குமார் விஷம்குடித்து மயங்கினார். தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து ஓடைப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    போடி புதூரை சேர்ந்தவர் ரமேஷ்(38). லாரி டிரைவர். அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் மது குடித்ததால் வயிற்றுவலி அதிகமானது. இதனால் ரமேஷ் விஷமாத்திரையை சாப்பிட்டு மயங்கினார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து போடி நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    வருசநாடு வாழ வந்தாள்புரத்தை சேர்ந்தவர் நந்தினி. இவரது கணவர் இறந்துவிட்ட நிலையில் கருப்பசாமி என்பவரை கடந்த 4 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் 1 மகன் உள்ளார். குடும்ப பிரச்சினை காரணமாக நந்தினி விஷம் குடித்து மயங்கினார். வருசநாடு ஆஸ்பத்திரியில் சேர்த்தபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வருசநாடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • தேனி அருகே வெவ்வேறு பிரச்சினைகளில் பள்ளி மாணவன் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • புகாரின் பேரில் போலீசார் மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே சமதர்மபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி மகன் சிவனேஷ்(30). இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இறைச்சி கடை வைத்து நடத்தி வந்தார். குடிப்பழக்கத்தால் வீட்டில் பிரச்சினை ஏற்பட்டது. சம்பவத்தன்று வெளியே சென்ற சிவனேஷ் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் தேனி போலீசார் வழக்குபதிவு செய்து அவரை தேடி வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டியை சேர்ந்தவர் கணேசன்(33). இவர் கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்வதாக கூறிச்சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது தாய் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடிப்பார்த்தும் கிடைக்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கணேசனை தேடி வருகின்றனர்.

    சின்னமனூரை சேர்ந்தவர் கண்ணன் மகன் மோகன்குமார்(16). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வருகிறார். சரிவர படிக்காமல் செல்போன் அதிகளவில் பயன்படுத்தியதால் அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் கோவித்துக்கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினார். நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்காததால் சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குபதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.

    • முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது.
    • நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணை நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வறண்ட வானிலையே நிலவுகிறது. இதனால் அணைக்கு வரும் தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. பருவமழையின் போது 142 அடிவரை உயர்ந்த நீர்மட்டம் தற்போது வேகமாக குறைந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 115.90 அடியாக உள்ளது. அணையிலிருந்து தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. அணையின் இருப்பு 1889 மி.கனஅடியாக உள்ளது.

    நீர்பிடிப்பு பகுதியில் மழை இல்லாததால் தேக்கடி ஏரியும் வறண்டு வருகிறது. இதனால் ஏரிக்குள் மூழ்கிஇருந்த மரங்கள் வெளியே தெரியும் நிலை ஏற்பட்டுள்ளது. மழை கைகொடுத்தால்மட்டுமே மீண்டும் அணையின் நீர்மட்டம் உயரும் வாய்ப்பு உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 54.09 அடியாக உள்ளது. அணைக்கு 14 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 59.77 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 1.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    • தமிழக பொறியாளர் குழுவினர் சுரங்கப்பாதை வழியாக சென்று பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக ஆய்வு செய்தனர்.
    • தமிழக நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்ய கேரள அரசு எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு.

    கூடலூர்:

    முல்லைபெரியாறு அணையில் இருந்து தமிழக பகுதிக்கு தண்ணீர் திறக்க ப்படும் சுரங்கப்பாதையில் பராமரிப்பு பணி மேற்ெகா ள்ள முடிவு செய்யப்பட்டது. ஷட்டர் பகுதி தேக்கடி வனத்துறை சோதனை ச்சாவடி அருகே உள்ளது. அங்கிருந்து திறக்கப்படும் தண்ணீர் சுரங்கப்பாதை வழியாக குமுளி மலைப்பா தையை ஒட்டியுள்ள போர்பே அணையில் இருந்து வெளியேறும். அந்த தண்ணீர் ராட்சத குழாய் மூலம் திறக்கப்பட்டு மின்உற்பத்தி செய்தபின் லோயர்கேம்ப் முல்லை பெரியாற்றில் கலக்கும்.

    தற்போது அணையிலி ருந்து 100 கனஅடிநீர் மட்டுமே திறந்துவிடப்படு கிறது. இந்தநிலையில் தமிழக பொறியாளர் குழுவினர் சுரங்கப்பாதை வழியாக சென்று பலவீனமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து அங்கு பராமரிப்பு பணிகளை மேற்கொள்வ தற்காக ஆய்வு செய்தனர். பெரியாறு அணை செயற்பொறியாளர் சாம்இ ர்வின், உதவிபொறியா ளர்கள் ராஜகோபால், நவீன்குமார், அபிநயா, வாசுதேவன், மின்வாரிய உதவிசெயற்பொறி யாளர்கள் கருணாகரன், ரெஜி, உதவிபொறியாளர் தினேஷ் உள்பட அதிகாரிகள் உடன் சென்றனர். முல்லை பெரியாறு அணையில் தமிழக நீர்வளத்துறையினர் பராமரிப்பு பணிகள் செய்ய கேரள அரசு எவ்வித தடையும் செய்யக்கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது தமிழக விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகைஅணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 60.18 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    • ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் தலைமை யிலும், ஒன்றிய குழு துணைத்தலைவர் முன்னிலை யிலும் நடைபெற்றது.
    • சரமாரியாக புகார்களை அனைத்து கவுன்சிலர்களும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றியத்தில் 30 கிராம ஊராட்சிகள் உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் அ.தி.மு.க. ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தலைமை யிலும், ஒன்றிய குழு துணைத்தலைவர் வரதராஜன் முன்னிலை யிலும் நடைபெற்றது.

    கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்ற ப்பட இருந்த நிலையில் கூட்டம் ஆரம்பித்த உடனே ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர் பாலகிருஷ்ணன் மற்றும் கிராம ஊராட்சி ஆணை யாளர் மலர்விழி மீது அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட 17 ஒன்றிய கவுன்சிலர்கள் சரமாரியாக குற்றச்சாட்டு களை கூறினர்.

    முறையாக தெரிவிக்கா மல் தன்னிச்சையாக செயல்பட்டு ஒரு சில ஊரா ட்சிகளுக்கு பாரபட்சமாக பணிகள் செய்யப்பட்டு ள்ளது. அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தில் பயனாளி கள் தேர்வு செய்யப்பட்டதை ஒன்றிய கவுன்சிலர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

    தேனி மாவட்ட கலெக்டர் மற்றும் திட்ட இயக்குனர், கிராம பஞ்சாயத்து இயக்கு னர் என மாவட்ட அளவிலான அதிகாரிகள் ஆய்வுக்கு வரும்போது ஒன்றியகுழு தலைவர் மற்றும் ஒன்றிய கவுன்சி லர்களுக்கு தகவல் தெரி விப்பதில்லை. புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை மற்றும் சிமெண்ட் சாலைகளை ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்துகி றோம் என்ற பெயரில் உடைத்து சேதப்படுத்தி பல மாதங்கள் ஆகியும் புதுப்பி க்கப்படாமல் உள்ளது. அதனை ஒப்பந்ததாரர்கள் புதுப்பித்து தர வேண்டும் என சரமாரியாக புகார்களை அனைத்து கவுன்சிலர்களும் கூறியதால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    மேலும் ஒன்றியக்குழு தலைவர் லோகிராஜன் தனக்குத் தெரியாமல் பல்வேறு வேலைகள் நடந்து வருவதாகவும், தனக்கு ஊராட்சி ஒன்றிய ஆணை யாளர்கள் முறையாக தகவல் தெரிவிப்பது இல்லை என்றும் சரமாரி யாக புகார் கூறினார்.

    ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் பால கிருஷ்ணன், ஒன்றியக்குழு தலைவர் உள்ளிட்ட கவுன்சிலர்கள் அனைவரின் கோரிக்கைகளுக்கு ஏற்ப வருங்காலங்களில் செயல்படுவதாகவும், அடிப்படை தேவைகள், அவசரமாக தேவைப்பட்ட ஒரு சில ஊராட்சிகளுக்கு பணிகளை மேற்கொ ண்டதால் முறையாக தகவல் தெரிவிக்க முடியவில்லை என்று விளக்கமளித்தார்.

    • மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்ப ட்டுள்ள அரசு மீன்பண்ணை யின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.
    • கிராவல் வெட்டி எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமை வழங்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து விதிமீறல்கள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மஞ்சளாறு வடிநில கோட்டத்தில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.4 கோடி மதிப்பில் அமைக்கப்ப ட்டுள்ள அரசு மீன்பண்ணை யின் செயல்பாடுகள் குறித்து தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    மீன்குஞ்சு பொறிப்பக பணி, இந்திய பெருரக கெண்டைமீன் வளர்ப்பு மற்றும் தொழில்நுட்பங்கள் குறித்து அலுவலர்களிடம் கேட்டறிந்தார். முன்னதாக ஏ.புதுப்பட்டி கிராமத்தில் சி.எஸ்.எஸ் நீலபுரட்சி திட்டத்தின்கீழ் ரூ.25 லட்சம் திட்டமதிப்பீட்டில் அமைக்க ப்பட்ட ஒருங்கிணைந்த அலங்கார மீன்வளர்ப்பு பண்ணையின் செயல்பாடு கள் குறித்தும் ஆய்வு செய்தார்.

    சில்வார்பட்டியில் செயல்பட்டு வரும் விற்பனை முனைய எந்தி ரங்களில் நடப்பு மாதம் குடும்ப அட்டைதாரர்க ளுக்கு வினியோகம் செய்யப்பட்ட பொருட்கள், மீதமுள்ள பொருட்களின் இருப்பு, தரம், அளவு குறித்து ஆய்வு செய்தார். ஆண்டிபட்டி அருகே மரிக்குண்டு கிராமத்தில் உதவி இயக்குனர் புவியியல் மற்றும் சுரங்கத்துறை மூலம் உடைக்கல் மற்றும் கிராவல் வெட்டி எடுப்பதற்கு குவாரி குத்தகை உரிமை வழங்கப்பட்ட பகுதியில் ஆய்வு செய்து விதிமீறல்கள் உள்ளதா என்றும் கேட்டறிந்தார்.

    அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு உடைகல் மற்றும் கிராவல்களை வழங்க வேண்டும் என உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

    • கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.1200 பணம் ஆகியவை திருடுபோனது.
    • திருடிய நகை, பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பம் 7வது வார்டு சுப்பிரமணியர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜபிரபு (வயது37). இவர் சம்பவத்தன்று சுருளிப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு டீக்கடை முன்பு தனது காரில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தார்.

    அப்போது திடீரென அவர் தூங்கி விட்டார். மீண்டும் எழுந்து பார்த்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின், செல்போன், ரூ.1200 பணம் ஆகியவை திருடுபோனது.

    அப்போது அங்கே நின்றுகொண்டிருந்த சுருளிப்பட்டி ரோடு பகுதியை சேர்ந்த சதீஷ் (32), விஜய் ஆகியோரிடம் இது குறித்து கேட்டார். அவர்கள் தங்களுக்கு எதுவும் தெரியாது என கூறினர். இருந்தபோதும் அவர்கள்தான் நகை, பணத்தை திருடி இருக்ககூடும் என்று சந்தேகம் அடைந்த ராஜபிரபு, அவரது நண்பர்கள் சசி, ஜெகதீஷ்குமார், நிவேக், கல்யாணி, சந்தானம், ஹரீஷ், வெற்றி ஆகியோர் சதீஷ், விஜயை காரில் அழைத்துக் கொண்டு கடுமையாக தாக்கி நகை, பணத்தை தராவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டினர்.

    படுகாயம் அடைந்த அவர்கள் கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இது குறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சம்பவத்தன்று அதனை சரிபார்த்தபோது 20 பைப்புகள் மாயமாகி இருந்தன.
    • மர்ம நபர்கள் இதனை திருடிச் சென்றனரா? என தெரியவில்லை.

    தேவதானப்பட்டி:

    தேவதானப்பட்டி அருகே டி.வாடிப்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (வயது70). இவர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். அலுவலகம் அருகே இரும்பு குடிநீர் பைப்புகள் வைக்கப்பட்டிருந்தது.

    சம்பவத்தன்று அதனை சரிபார்த்தபோது 20 பைப்புகள் மாயமாகி இருந்தன. மர்ம நபர்கள் இதனை திருடிச் சென்றனரா? என தெரிய வில்லை. இது குறித்து தேவதானப்பட்டி போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    இந்த கூட்டத்தில் விவசாயிய, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வுகாணலாம்.

    தேனி:

    பெரியகுளம் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக வருகிற 21-ந்தேதி காலை 11 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும்கூட்டம் நடைபெற உள்ளது.

    மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் விவசாயிய, விவசாயிகள் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து மனு அளித்து தீர்வுகாணலாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது

    • பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஏப்ரல் 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • குற்றவாளியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராயப்பன்பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம்(68). கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்தார். கடந்த மார்ச் 14-ந்தேதி அவரது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அதிசயத்தை தாக்கி காரில் கடத்திச்சென்றனர். போலீசார் அவரை தேடி வந்தநிலையில் தொழிலதிபர் அதிசயத்தை தாக்கி ஓடும் காரில் இருந்து தூக்கிவீசிவிட்டு அந்த கும்பல் தப்பிஓடியது.

    பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஏப்ரல் 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி சாக்கலிபட்டியை சேர்ந்த பிரபு(31), திருப்பரங் குன்றத்தை சேர்ந்த கவுசிக்(22), திருநகரை சேர்ந்த அஜித்(23) உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருப்பதி(45) என்பவரை ராயப்பன்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் மதுரை ஜே.எம்.கோர்ட்டில் திருப்பதி சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராயப்பன்பட்டி போலீசார் முடிவு செய் துள்ளனர். விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • கோடை காலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது.
    • இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது.

    கூடலூர்:

    கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ள முல்லைபெரியாறு அணைமூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதி பெறுகிறது. குறிப்பாக கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14707 ஏக்கரில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. மேலும் மதுரை, தேனி மாவட்ட குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.

    கோடைகாலம் தொடங்கியது முதல் அணைக்கு நீர்வரத்து சரிந்ததால் நீர்மட்டம் குறைந்துகொண்டே வந்தது. இன்று காலை அணைக்கு தண்ணீர் வரத்து அடியோடு நின்றுவிட்டது. 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 116 அடியாக உள்ளது. வைகை அணையின் நீர்மட்டம் 54.17 அடியாக உள்ளது. 49 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. வரத்தும், திறப்பும் இல்லை. சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 60.35 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மழை எங்கும் இல்லை.

    ×