search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உத்தமபாளையம் அருகே தொழிலதிபர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்
    X

    கோப்பு படம்.

    உத்தமபாளையம் அருகே தொழிலதிபர் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளி சரண்

    • பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஏப்ரல் 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • குற்றவாளியை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராயப்பன்பட்டி போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே ராயப்பன்பட்டியை சேர்ந்தவர் அதிசயம்(68). கோழிப்பண்ணை உள்ளிட்ட தொழில்கள் நடத்தி வந்தார். கடந்த மார்ச் 14-ந்தேதி அவரது தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த கும்பல் அதிசயத்தை தாக்கி காரில் கடத்திச்சென்றனர். போலீசார் அவரை தேடி வந்தநிலையில் தொழிலதிபர் அதிசயத்தை தாக்கி ஓடும் காரில் இருந்து தூக்கிவீசிவிட்டு அந்த கும்பல் தப்பிஓடியது.

    பலத்த காயமடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தநிலையில் ஏப்ரல் 7-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக மதுரை மாவட்டம் ஆஸ்டின்பட்டி சாக்கலிபட்டியை சேர்ந்த பிரபு(31), திருப்பரங் குன்றத்தை சேர்ந்த கவுசிக்(22), திருநகரை சேர்ந்த அஜித்(23) உள்பட 4 பேரை கைது செய்தனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான திருப்பதி(45) என்பவரை ராயப்பன்பட்டி போலீசார் தேடி வந்தனர். இந்தநிலையில் மதுரை ஜே.எம்.கோர்ட்டில் திருப்பதி சரண் அடைந்தார். அவரை 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க ராயப்பன்பட்டி போலீசார் முடிவு செய் துள்ளனர். விசாரணைக்கு பிறகு பல்வேறு தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×