என் மலர்
தேனி
- இது குறித்து அதே பகுதியை சேர்ந்தவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.
- சாமியார், வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது வீட்டில் பில்லிசூனியம், நிர்வாண பூஜை நடத்திவந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.
எனவே இவற்றை நிறுத்துமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டுள்ளார். எனவே இது குறித்து அதே பகுதியை சேர்ந்த குணவதி (வயது65) என்பவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். மேலும் இது குறித்து அவர் பேட்டி அளித்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீடு புகுந்து குணவதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த குணவதி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.
,.- திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
- மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மக்களை திரட்டி 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று திருச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.
பெரியகுளம்:
அ.தி.மு.க.வில் ஒற்றைத்தலைமை யார்? என்பதை தீர்மானிக்க கடும் போட்டி நிலவிய நிலையில் எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில் கட்சியில் தனது செல்வாக்கை நிரூபிக்க தொண்டர்களை சந்திக்கப்போவதாக ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதனையடுத்து திருச்சியில் இன்று முப்பெரும் விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள தனது ஆதரவாளர்களை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த ஊரான பெரியகுளத்தில் அவரது ஆதரவாளர்கள் திருச்சி மாநாட்டுக்கு தொண்டர்களை வரவேற்று பல்வேறு இடங்களில் பேனர்கள் வைத்தனர்.
அந்த பேனரில் ஓ.பன்னீர்செல்வத்தை எடப்பாடி பழனிசாமி குனிந்து வணங்குவதுபோல புகைப்படம் இடம்பெற்றிருந்தது. இதனால் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த பேனர்களை அகற்ற வடகரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். பேனர்களை அகற்றாவிட்டால் நாங்களே கிழித்து எரிந்துவிடுவோம். இதனால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களே தாங்கள் வைத்த பேனர்களை அகற்றினர். இச்சம்பவத்தால் பெரியகுளத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. இதேபோல் மாவட்டத்தின் ஒருசில இடங்களிலும் வைக்கப்பட்டிருந்த பேனர்களை அகற்ற வலியுறுத்தி அ.தி.மு.க. நிர்வாகிகள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுபுறம் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் மக்களை திரட்டி 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் இன்று திருச்சிக்கு செல்ல ஆயத்தம் ஆகினர்.
- மங்கலதேவி கண்ணகி கோவிலில் இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா வருகிற மே 5-ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது.
- இன்று பளியன் குடியிருப்பு பகுதியில் சித்ரா பவுர்ணமி கொடியேற்றும் விழா நடைபெற்றது.
கூடலூர்:
தமிழக கேரளா எல்லையில் கூடலூரின் 21-வது வார்டு பகுதியான பளியங்குடியிருப்புக்கு மேலே மங்கல தேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது. இதை மங்கல தேவி கண்ணகி கோட்டம் என்றும் அழைக்கப்படுகிறது.
பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழக மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் ஆண்டுதோறும் கண்ணகி தெய்வம் தினமான சித்ராபவுர்ணமி அன்று விழா நடத்தப்பட்டு வருகிறது. காலம் மாற்றத்தால் இந்தக் கோவில் பழுதடைந்து தற்போது சேதம் அடைந்து காட்சி அளிக்கிறது.
தமிழககேரளா எல்லையில் மழை உச்சியில் இந்த கோவில் அமைந்துள்ளதால் இப்பகுதியில்இருந்து தமிழக வனப்பகுதியின் செழுமையையும் , முல்லைப் பெரியாறு அணையின் அழகான தோற்றத்தையும் காணலாம்.
கடந்த காலங்களில் தமிழக பக்தர்கள் தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பளியங்குடியிருப்பு பகுதியில் இருந்து 6 கி.மீ. தூரம் கோவிலுக்கு நடந்து சென்று வழிபட்டனர். மேலும் கேரள மாநிலம் குமுளியிலிருந்து 14 கி.மீ. தூரத்தில் வனப்பகுதி வழியாக செல்ல சாலை வசதி உள்ளது.
ஆனால் வனத்துறையினர் இந்த சாலையில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கின்றனர். ஒரு வாரம் கொண்டாடப்பட்ட கண்ணகி கோவில் திருவிழா தற்போது சித்ரா பௌர்ணமி அன்று ஒரு நாள் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான சித்ரா பவுர்ணமி திருவிழா வருகிற மே 5-ம் தேதி ( வெள்ளிக்கிழமை ) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை பளியன் குடியிருப்பு பகுதியில் சித்ரா பவுர்ணமி கொடியேற்றும் விழா நடைபெற்றது.
பச்சை மூங்கிலில் கண்ணகி உருவம் பொறித்த மஞ்சள் நிறம் கொண்ட கொடி ஏற்றப்பட்டது முன்னதாக கொடி மரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டது. கொடியேற்றம் நிகழ்ச்சியில் கூடலூர் கம்பம் மங்கலதேவி கண்ணகி கோட்ட அறக்கட்டளை செயலாளர் ராஜகணேசன், பொருளாளர் முருகன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் சரவணன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர். பக்தர்களுக்கு கற்கண்டு, பொங்கல், அவல் பிரசாதம் வழங்கப்பட்டது.
- தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது.
- மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் மீன்பிடி தொழில் நடைபெற்று வருகிறது. இந்த அணையில் மீன்பிடி உரிமை அரசே ஏற்று நடத்தி வந்த நிலையில் திடீரென தனியாருக்கு வழங்கப்பட்டது. இதனை கண்டித்தும் அணையில் மீண்டும் பழைய முறைப்படி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி மீனவர்கள் வைகை அணை நீர்தேக்கத்தில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மீனவர்களுக்கு ஆதரவாக பல்வேறு அரசியல் கட்சியினரும் போராட்டத்தில் குதித்தனர். இந்நிலையில் ஆண்டிபட்டி தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், டி.எஸ்.பி ராமலிங்கம், இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மீன்வள உதவி இயக்குனர் பஞ்சராஜா முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அப்போது மீனவர்களுக்கு சரிபங்கு அடிப்படையில் மீன்கள் வழங்கவேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால் தனியார் மீன்பிடி உரிமம் பெற்றவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை. அதிகாரிகள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியும் இருதரப்பும் ஏற்றுக்கொள்ளாததால் கூட்டம் தோல்வியில் முடிந்தது. இதனைதொடர்ந்து வருகிற 25-ந்தேதி அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இரவு நேரத்தில் மீனவர்கள் யாரும் வைகை அணை நீர்தேக்கத்தில் மீன்பிடிக்க கூடாது என்பதற்காக போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று 4-வது நாளாக மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டதால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு அரசு சுமூகதீர்வு காணவேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 16 பேர் மீது வைகை அணை சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- குழந்தை பிறந்த சிறுமிக்கு வயதை சரிபார்த்தபோது 16 வயது என்பதால் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரர்போதுமணிக்கு தகவல் கொடுத்தனர்.
- புகாரின்பேரில் சிறுமியின் கணவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிபட்டி:
ஆண்டிபட்டி அருகே பூதிப்புரம் வளையபட்டியை சேர்ந்தவர் கேசவன். இவருக்கும் 11-ம் வகுப்பு படிக்கும் 16 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது. திருமண ஆசைவார்த்தை கூறி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மேலும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சிறுமியை கடத்திச்சென்று திருமணம் செய்துள்ளார்.
இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுமிக்கு ஆண்குழந்தை பிறந்துள்ளது. ஆஸ்பத்திரியில் அவரது வயதை சரிபார்த்தபோது 16 வயது என்பதால் இதுகுறித்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரர்போதுமணிக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் ஆண்டிபட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில வாலிபர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் விசாணை நடத்தி வருகின்றனர்.
- சுருளி அருவிக்கு அரிசிப்பாறை, ஈத்தப்பாறை மற்றும் ஹைவேவிஸ், தூவானம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
- தண்ணீர் வரத்து இல்லாததால் சுருளி அருவிக்கு குளிப்பதற்காக வந்து ஏமாற வேண்டாம் என வனத்து றையினர் தெரிவித்துள்ளனர்.
உத்தமபாளையம்:
தேனி மாவட்டம், கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ளது சுருளி அருவி. அரிசிப்பாறை, ஈத்தப்பாறை மற்றும் ஹைவேவிஸ், தூவானம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர் மூலம் அருவிக்கு நீர்வரத்து இருக்கும்.
தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் அமாவாசை உள்ளிட்ட நாட்க ளில் மூதாதைய ர்களுக்கு தர்பணம் கொடுக்க சுருளி அருவிக்கு வருகின்றனர். மேலும் சபரிமலை செல்லும் பக்தர்கள் அருவியில் புனித நீராடி செல்கின்றனர். கடந்த சில நாட்களாக மழை இல்லாததால் அணைக்கு நீர்வரத்து குறைவாகவே இருந்தது.
இந்த நிலையில் தற்போது தண்ணீர் வரத்து முற்றிலும் நின்றது. இதனால் அருவி வறண்டு காணப்படுகிறது. எனவே சுற்றுலா பயணிகள், பக்தர்கள் சுருளி அரு விக்கு குளிப்பதற்காக வந்து ஏமாற வேண்டாம் என வனத்து றையினர் தெரிவித்து ள்ளனர். நீர்வரத்து தொடங்கியதும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என தெரிவித்தனர்.
- கடந்த 2 மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கத்தால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக நின்று நீர்மட்டம் குறைந்தது.
- முல்லை பெரியாறுஅணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக உள்ளது.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறுஅணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மழையையே முழுவதுமாக நம்பியிருந்தனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கத்தால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக நின்று நீர்மட்டம் குறைந்தது.
இந்நிலையில் நேற்று தேனி, திண்டுக்கல் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதுபோல முல்லை பெரியாறுஅணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1871 மி.கன அடியாக உள்ளது.
வைகை அணையின் நீர்மட்டம் 53.99 அடியாக உள்ளது. அணைக்கு 26 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2568 மி.கன அடியாக உள்ளது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 155.59 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 58.98 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 21.68 மி.கன அடியாக உள்ளது.
பெரியாறு 23, தேக்கடி 1.8, உத்தமபாளையம் 5.2, சண்முகாநதி அணை 4.7, மஞ்சளாறு 8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.
- கொள்ளை வழக்கில் உத்தம பாளையத்தை சேர்ந்தவரை கைது செய்து அவரிடமிருந்த இருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
- தேனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் கொள்ளையனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.
தேனி:
தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் 2013 ஜூன் 30ம் தேதி கருப்பு கையுறைகள், முகமூடி, ஹெல்மெட் அணிந்து அடையாளம் தெரியாத நபர் திடீரென நுழைந்தார். தடுக்க முயன்ற காவலாளியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவலாளி தப்பியோடினார்.
இதனால் நகைக்கடையின் கதவு அருகில் இருந்த கண்ணாடி மீது குண்டு பட்டு சிதறியது. அதன் பின் உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையன் மேல்த ளத்தை நோக்கி 3 முறை சுட்டு ஊழியர்களை மிரட்டினார். பின்னர் 50 பவுன் தங்க சங்கிலிகளை பையில் அள்ளிக் கொண்டு தப்ப முயன்றார்.
தெருவில் ஓடிய அவரை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கோபி விசாரணையில் அவர் தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த கேரளக்குமரன் என தெரிய வந்தது. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தேனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேல்முருகன் ஆஜரான கேரளக்கு மரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுந்தரி தீப்பளித்தார். இதுகுறித்து தேனி போலீசார் தெரிவித்ததாவது, கேரளக்குமரன் பல திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறையில் இருந்த போது பப்புலு என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இணைந்து பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோச்சூரில் வசிக்கும் குரூஸிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்து கைத்துப்பா க்கியை வாங்கி உள்ளார் என்று தெரிவித்தனர்.
- தேனி அருகே நோய்கொடுமை மற்றும் குடிப்பழக்கத்தால் பெண் உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
தேனி:
தேனி அருகே பழனி செட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த் மனைவி விவிதா(21). கடந்த 2 வருடங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்றுள்ளார். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தாய் வீட்டில் தங்கி சிகிச்சை எடுத்து வந்து ள்ளார்.
தொடர்ந்து நோய்கொடு மையால் அவதிப்பட்டதால் மனஉளைச்சலில் இருந்த விவிதா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம்(76), இவருக்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் மன உளைச்சலில் இருந்த தனது உறவினரை பார்க்க தெப்பம்பட்டி பகுதிக்கு வந்துள்ளார். அங்குள்ள மலைப்பகுதியில் விஷம் குடித்து இறந்துகிடந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் ராஜதானி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.
- தேனி மாவட்டத்தில் ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் மூலம் 1116 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
- 553 தாய்மார்களுக்கு சிறப்பு உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தேனி:
தேனி மாவட்டத்தில் தமிழக அரசின் முன்னோடி திட்டமான ஊட்டச்சத்தை உறுதிசெய் திட்டம் மூலம் அரைத்த வேர்கடலை, பால்பவுடர், எண்ணெய், சர்க்கரை, வைட்டமின்கள் மற்றும் மினரல் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
தேனி மாவட்ட த்தில் ஆண்டிபட்டி, போடி, சின்னமனூர், கம்பம், தேனி , மயிலாடும்பாறை, பெரிய குளம், உத்தம பாளையம் ஆகிய வட்டாரங்களை சேர்ந்த 1116 குழந்தைகள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு அங்கன்வாடி மையங்கள் மூலம் சிறப்பு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு 2 ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்பட்டு வருகிறது. பேரிச்சம்பழம் 1 கிலோ, நெய், அமினோஅமிலம், வைட்டமின்திரவம், புரோட்டின் பவுடர், குடற்புழு நீக்க மாத்திரை ஆகிய பொருட்கள் அடங்கிய பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தில் ஆண்டிபட்டியில் 49, போடி யில் 84, சின்னமனூரில் 61, கம்பத்தில் 75, மயிலாடு ம்பாறையில் 70, பெரிய குளத்தில் 89, தேனியில் 62, உத்தமபாளையத்தில் 63 என மொத்தம் 553 தாய்மார்களுக்கு சிறப்பு உணவு பெட்டகங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின்மூலம் பயனடைந்த கோகிலா புரத்தை சேர்ந்த இலக்கியா என்பவர் தெரிவிக்கையில், விவசாய கூலிவேலை பார்த்துவரும் எனது கணவருக்கு போதிய வருவாய் இல்லாததால் கஷ்டமான சூழ்நிலையில் இருந்துவருகிறோம். எனது மகன் பிறக்கும்போது எடைகுறைவாக இருந்தான். இதனைதொடர்ந்து எங்கள் பகுதியில் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் அங்கன்வாடி மைய த்தில் உணவு பெட்டகம் வழங்கப்பட்டது. இதன்மூ லம் எனக்கு நல்ல சக்தி கிடைத்துள்ளது என்றார்.
தேனி அல்லிநகரம் நகராட்சியை சேர்ந்த அம்பிகா தெரிவிக்கையில், எனது மகன் பிறக்கும்போதே எடை குறைவாக இருந்தான். இதனால் டாக்டர்கள் பரிசோதனை செய்து தமிழக அரசு மூலம் வழங்கும் சிறப்பு உணவினை 36 நாட்களுக்கு வழங்கினர். தற்போது எனது மகனும், நானும் ஆரோக்கியமாக உள்ளோம். ஏழை மக்களின் நலன் கருதி தமிழகஅரசு செயல்படுத்தும் இதுபோன்ற திட்டங்கள் மக்களுக்கு பெரிதும் உதவியாக உள்ளது என்றார்.
- குடும்ப பிரச்சினை காரணமாக தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணைக்காக வாலிபரை அழைத்ததால் திடீரென மாயமானார்.
தேனி:
தேனி அருகே கோட்டூரை சேர்ந்தவர் ராஜபிரபு. இவருக்கும் அதேபகுதியை சேர்ந்த செண்பகா என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.
பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதனைதொடர்ந்து தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருதரப்பினரும் சீர்வரிசை பொருட்களை திரும்ப பெற்றுக்கொண்டனர். மேலும் கோர்ட்டில் விவாகரத்து கேட்டு மனு அளித்தனர்.
அந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் செண்பகா மீண்டும் தேனி அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பாக விசாரணைக்கு சென்ற ராஜபிரபு அதன்பின்னர் மிகுந்த மனஉளைச்சலுடன் காணப்பட்டார். இந்தநிலையில் அவர் திடீரென மாயமானார்.
இதுகுறித்து தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.பி உத்தரவின்பேரில் வீரபாண்டி போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான ராஜபிரபுவை தேடி வருகின்றனர்.
- பிக்கப் அணை தேக்கத்தில் பொதுமக்கள் ஆற்றில் குப்பை மற்றும் கோவில் விழாக்களின் போது ஏற்படும் கழிவுகளை கொட்டுகின்றனர்.
- ஆற்றில் அதிக அளவு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்துள்ளது. இவை தண்ணீரை மறைத்து அதன் தன்மையை மாற்று கிறது.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் வைகை அணையில் இருந்து திறக்க ப்படும் தண்ணீர் மதுரை மாவட்ட குடிநீருக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 71 அடி உயரம் கொண்ட வைகை அணை மூலம் பாசனம் மற்றும் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வருகின்றது.
வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீர் தரைப்பாலம், பெரியபாலம் வழியாக பிக்கப் அணை நீர்தேக்கத்துக்கு வருகிறது. அங்கிருந்து பாசனத்துக்காக கால்வாய், ஆற்றுவழியாக தண்ணீர் திருப்பி விடப்படுகிறது.
பிக்கப் அணையில் தேங்கும் நீர் பம்பிங் செய்ய ப்பட்டு சுத்திகரிப்புக்குப்பின் மதுரை, தேனி மாவட்ட பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக பயன்படுத்த ப்படுகிறது. கடந்த சில நாட்களாக மழை இல்லாத தால் அணைக்கு நீர்வரத்து சரிந்தது. முல்லைப்பெ ரியாறு அணையில் 100 கன அடி நீர் மட்டுமே திறக்கப்படுவதால் வைகை அணைக்கு நீர்வரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.
இந்த நிலையில் மதுரை மாநகர குடிநீருக்காக 72 கன அடி நீர் வெளியேற்றப்படு கிறது. இந்த நீர் பிக்கப் அணை தேக்கத்தில் சேறுகிறது. இங்கு பொது மக்கள் ஆற்றில் குப்பை மற்றும் கோவில் விழாக்க ளின் போது ஏற்படும் கழிவுகளை கொட்டுகின்ற னர். இதனால் குடிநீர் மாசுபட்டு வருகிறது. இதனை குடிக்கும் பொது மக்களின் சுகாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.
மேலும் ஆற்றில் அதிக அளவு ஆகாயத்தாமரைச் செடிகள் வளர்ந்துள்ளது. இவை தண்ணீரை மறைத்து அதன் தன்மையை மாற்று கிறது. எனவே மதுரை, தேனி மாவட்ட நிர்வாகம் பிக்கப் அணையை முறை யாக பராமரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






