என் மலர்
தேனி
- கஞ்சா விற்பதாக வந்த தகவலையடுத்து கம்பம் வடக்கு போலீசார் ரோந்து சென்றனர்.
- கஞ்சாவை பறிமுதல் செய்து விற்றவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் பரமேஸ்வரன்(30). இவர் நாககன்னியம்மன் கோவில் அருகே கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்தார். அப்போது ரோந்து சென்ற கம்பம் வடக்கு போலீசார் பரமேஸ்வரனை கைது செய்து அவரிடமிருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதேபோல் வாரச்சந்தை அருகே கஞ்சா விற்பனை செய்த பிரதாப்(30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்த கஞ்சா மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது. தேனி க.விலக்கு போலீசார் முத்தனம்பட்டி பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது அங்கு கஞ்சா விற்ற கருப்பாயி(52) என்பவரை கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
- கேரள சுற்றுலாத்துறை சார்பில் மலர் கண்காட்சி இந்த ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது.
- தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக 1500-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடப்பட்டன.
மேலசொக்கநாதபுரம்:
கேரளமாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் கோடைகாலத்தில் சுற்றுலா பயணிகளை வரவேற்கும் வண்ணமாக மலர்கண்காட்சி நடைபெற்று வருகிறது. வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலா பயணிகள் மூணாறுக்கு வருகின்றனர். குறிப்பாக கோடை காலத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுகிறது.
இதமான சீதோஷ்ண த்துடன் வனப்பகுதியில் இயற்கை அழகுகளை கண்டு ரசிப்பது மனதிற்கு ரம்யமான சூழலை ஏற்படுத்தி வருகிறது.
கேரள சுற்றுலாத்துறை சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சி இந்த ஆண்டு மே 1-ந்தேதி தொடங்கி 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. மூணாறு பாலாற்றின் கரை அருகே உள்ள தாவரவியல் பூங்காவில் நடைபெறும் மலர் கண்காட்சிக்காக 1500-க்கும் மேற்பட்ட மலர் செடிகள் நடப்பட்டன.
தற்போது இதில் பல வண்ணங்களில் பூக்கள் பூத்துகுலுங்குகின்றன. காலை 8 மணிமுதல் இரவு 9 மணிவரை பார்வ யைாளர்கள் அனுமதிக்க ப்படுவார்கள். நுழைவு கட்டணமாக பெரியவர்க ளுக்கு ரூ.60, சிறுவர்களுக்கு ரூ.35 -ம் வசூலிக்கப்படு கிறது. மேலும் மலர்கண்காட்சியில் மாலை நேரத்தில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளது.
அடுத்த வாரம் தேர்வுகள் அனைத்தும் முடிந்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு முழுமையாக விடுமுறை அளிக்கப்படும். அதன்பி ன்னர் சுற்றுலா பயணிகள் கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்ததன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- வறண்ட மூல வைகையாறு மணலாக காட்சியளித்தது. இந்த நிலையில் மழையால் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
கூடலூர்:
சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்ததன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் முற்றிலும் வறண்ட மூல வைகையாறு மணலாக காட்சியளித்தது. இந்த நிலையில் மழையால் ஆற்றில் தொடர்ந்து நீர்வ ரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்த்து உள்ளனர். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.30 அடியாக உள்ளது. 308 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
வைகைஅணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 107 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை.
சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 57.47 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 0.2, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதிஅணை 1.4, போடி 6.3, வைகை அணை 0.6, வீரபாண்டி 1.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- பைக்கில் சென்றபோது எதிரே வந்த டிராக்டரை பார்த்து நிலைதடுமாறி கீழேவிழுந்தார்.
- டயர் தலை மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக அரசு போக்குவரத்து டிரைவர் பலியானார்.
கம்பம்:
கம்பம் அருகே கோம்பை ஓடைத்தெருவை சேர்ந்தவர் பவுன்பாண்டி(54). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கம்பம் 2 கிளையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ஓய்வு நாளன்று அலுவலகத்திற்கு வந்த பவுன்பாண்டி மீண்டும் ஊர்திரும்பி கொண்டிருந்தார்.
கம்பம்-கோம்பை சாலையில் ராணிமங்கம்மாள் சாலை பகுதியில் சென்றபோது எதிரே வந்த டிராக்டரை பார்த்து நிலைதடுமாறி கீழேவிழுந்தார்.
இதை கவனிக்காத டிராக்டர் டிரைவர் பவுன்பாண்டி மீது மோதினார். இதில் டிராக்டர் டயர் பவுன்பாண்டியின் தலைமீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோம்பை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டர் டிரைவர் ஈஸ்வரனை கைது செய்தனர்.
- காசோலையை வங்கியில் வசூலுக்காக கொடுத்த போது கையெழுத்து மாறியுள்ளதாக திரும்பி வந்துவிட்டது.
- வங்கி கணக்கில் ரூ.2லட்சத்ைத அனுப்பி வைத்து பின்னர் பொருட்கள் வாங்கி தரவில்லை.
தேனி:
தேனி அருகே பழனி செட்டி பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம்(67). இவரும், இவரது உறவினர் செந்தில்குமார்(45) என்பவரும் வீட்டில் உள்அல ங்காரம் தொழிலை அபிவிரு த்தி செய்ய முடிவு செய்தனர். அதன்படி செந்தில்குமார் ரூ.9 லட்சத்தை கடனாக கேட்டார். 3 மாதத்தில் திருப்பி தருவதாக தெரி வித்துள்ளார்.
இதனைதொடர்ந்து பன்னீர்செல்வம் அவருக்கு பணம் கொடுத்துள்ளார். அதன்பின்னர் காசோலை மூலம் பணத்தை தருவதாக செந்தில்குமார் தெரிவித்து ள்ளார். அந்த காசோலையை வங்கியில் வசூலுக்காக கொடுத்த போது கையெழுத்து மாறியுள்ளதாக திரும்பி வந்துவிட்டது. இதுகுறித்து கேட்டபோது எந்தபதிலும் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த பன்னீர்செல்வம் தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
கோர்ட்டு உத்தரவுப்படி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து செந்தில்குமாரிடம் விசாரித்து வருகின்றனர்.
தேனி அருகே மாரியம்ம ன்கோவில்பட்டியை சேர்ந்தவர் பிரித்தி விராஜ்(32). இவர் கணினி விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் வைத்துள்ளார். மதுரை சிம்மக்கல் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவரு டன் பழக்கம் ஏற்பட்டு இணையதளம் மூலம் பொரு ட்கள் வாங்கி தருவதாக கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பிரித்திவிராஜ் தினேசின் வங்கி கணக்கில் ரூ.2லட்சத்ைத அனுப்பி வைத்தார். ஆனால் அதன்பின்னர் பொருட்கள் வாங்கி தரவில்லை. மேலும் செல்போனையும் சுவி ட்ச்ஆப் செய்து விட்டதால் மதுரைக்கு சென்றார். அங்கு தினேஷ் கடையை காலி செய்து விட்டதாக அருகில் இருந்த வர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தேனி குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியன்று திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
- தமிழக பக்தர்கள் இடையூறின்றி சென்று வர தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.
கூடலூர்:
தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியன்று திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு கேரள வனத்துறையினர் அதிக அளவில் கெடு பிடிகளை தருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பலியன்குடி வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இந்த கோவிலுக்கு லோயர் கேம்ப் பலியன்குடி யில் இருந்து சுமார் 6.6 கி.மீ தூரம் தமிழக வனப்பகுதி வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.
இது மட்டுமின்றி கேரள மாநிலம் குமுளியில் இருந்து கொக்கரகண்டம் வழியாக 14 கி.மீ தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது. சித்ரா பவுர்ண மியன்று தமிழக வனப்பாதை யில் வாகனங்கள் செல்ல முடியாது. ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் அங்கு கேரள அரசு அனுமதி பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக கோவில் கட்டுப்பாடு முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வருவதற்கு கேரள அரசு திட்டம் தீட்டி வருகிறது.
கோவிலின் முகப்பு வாயில் தேனி மாவட்டத்தை நோக்கி அமைந்துள்ளது. 1817ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி சர்வேயை யும், 1893, 1896ல் நடைபெற்ற சர்வேயிலும், 1913, 1915-ல் வெளியிடப்பட்ட எல்லை வரை படங்களிலும் தமிழக வனப்பகுதியிலேயே கோவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
1976ம் ஆண்டு தமிழக - கேரள அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயி லும் கோவில் 40 அடி தூரம் தள்ளி தமிழக வனப்பகுதி யில் இருப்பது ஒப்புக்கொ ள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கேரள வனப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு பாதை அமை க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் கெடுபிடிகள் தொடங்கியது. எனவே இதனை தடுக்க தமிழக வனப்பகுதியான பலியன்குடியில் இருந்து 6.6 கி.மீ தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்தால் பக்த ர்கள் கோவிலுக்கு செல்ல பாதைகள் கிடைக்கும்.
வாகன போக்குவரத்து குறைவால் இப்பகுதி நடை பாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோவில் வரை சாலை அமைக்க தமிழக அரசு சர்வே பணிகள் மேற்கொண்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து பணிகள் முடக்கப்பட்டது. தற்போது ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து சர்வே பணிகள் நடந்தன. அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக பக்தர்கள் இடையூறின்றி சென்று வர தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றனர்.
சித்ரா பவுர்ணமி மே 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் 20-ந் தேதி பணி நாளாக செயல்படும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.
- திரும்பி வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
- அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகே லட்சுமிபுரத்ைத சேர்ந்தவர் ஸ்ரீநாத் (வயது42). சம்பவத்தன்று குடும்பத்துடன் தோட்டத்துக்கு சென்று விட்டார். மீண்டும் வீடு திரும்பியபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு அருகில் கோடாரி கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் இருந்த துணிகள் சிதறி கிடந்தன.
அப்போது ஒரு வாலிபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்தார். அவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் பிடித்து தென்கரை போலீசில் ஒப்படைத்தார். போலீசார் விசாரணையில் பிடிபட்ட வாலிபர் உத்தமபாளையம் அருகே சுருளிபட்டியை சேர்ந்த ஆகாஷ் (வயது17) என தெரிய வந்தது. போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
- வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்தபோது நடை அடைக்கப்பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர்.
- அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது
தேனி:
தேனி மாவட்டம் தேவாரம் போலீஸ் நிலையம் அருகே காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் மணிகண்டன் (வயது40). இவரது மனைவி மாலதி. இவர்கள் கேரளாவில் தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.
சம்பவத்தன்று வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு சாமி கும்பிட வந்தனர். அப்ேபாது நடை அடைக்கப்பட்டதால் அங்கேயே தங்கி விட்டு மறுநாள் வழிபாடு செய்யலாம் என முடிவு செய்தனர்.
அதன்படி கோவிலில் மாவிளக்கு எடுக்கும் இடத்தில் தூங்கிவிட்டு மறுநாள் காலையில் எழுந்து பார்த்தனர். அப்போது தங்கள் பையில் வைத்திருந்த 6 பவுன் நகை, செல்போன், ரொக்க பணம் ரூ.6800 ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்து 800 ஆகும். அக்கம் பக்கத்தில் விசாரித்தபோதும் தெரியவில்லை. இது குறித்து வீரபாண்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் கோவிலில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு காமிரா க்களை ஆராய்ந்து கொள்ளையர்களை போலீ சார் தேடி வருகின்றனர். கோவிலுக்கு சாமி கும்பிட வந்த இடத்தில் நகை, பணம் கொள்ளை போன சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது.
- இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது.
- அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கூடலூர்:
தேனி, திண்டுக்கல் உள்பட மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்தது. அதன்படி கடந்த சில நாட்களாக தேனி, திண்டு க்கல் மாவட்டத்தில் தொட ர்ந்து மழை பெய்துவருகிறது. நேற்று பகல் பொழுதில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் மாலையில் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
தேனியில் மரம் முறிந்து விழுந்ததில் கார் சேதமடைந்தது. பெரியகுளத்தில் இடி மின்னலுடன் சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடியது. ஆண்டிபட்டி பகுதியில் மாலை நேரத்தில் சாரல் மழையுடன் குளிர்ந்தகாற்று வீசியது. இதேபோல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி ஏற்பட்டது.
தொடர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அணைகளின் நீர்மட்டம் உயரும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர். இதன்மூலம் கம்பம் பள்ளத்தாக்கு பகுதி விவசாயத்திற்கு முதல்போக சாகுபடி தண்ணீர் திறப்பதில் சிக்கல் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது. முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.20 அடியாக உள்ளது. அணைக்கு 413 கனஅடிநீர் வருகிறது. தமிழக பகுதிக்கு 100 கனஅடிநீர் திறக்கப்படு கிறது. வைகை அணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 247 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படு கிறது.
மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. 4 கனஅடிநீர் வருகிறது. 25 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 57.89 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.
பெரியாறு 32, தேக்கடி 4.2, கூடலூர் 4.6, உத்தமபாளையம் 7.2, சண்முகாநதி அணை 16.4, போடி 2, வைகை அணை 12.4, சோத்துப்பாறை 18, மஞ்சளாறு 3, பெரியகுளம் 75, வீரபாண்டி 30.4, அரண்மனைப்புதூர் 32.4, ஆண்டிபட்டி 21.4 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.
- கடந்த ஒரு வாரமாக நடந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று மீன்களை அள்ளி வந்தனர்.
- ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கு மீன்களும் வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர்.
ஆண்டிபட்டி:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்குஞ்சுகளை விட்டு மீன்களைபிடித்து வந்தனர். வைகைஅணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு பங்கீடு அடிப்படையில் மீன்பிடிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. மீன்வளத்துறை சார்பில் வைகை அணையில் மீன்பிடிக்கும் ஒப்பந்தப்புள்ளி மூலம் கடந்த 1-ந்தேதி முதல் தனியாருக்கு வழங்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்ததாரர் சார்பில் மீன்பிடிப்பதற்கு வழங்கப்படும் கூலி போதுமானதாக இல்லை என்றும் , சம பங்கீட்டில் மீன்கள் வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. இந்நிலையில் ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா, டி.எஸ்.பி ராமலிங்கம், எம்.எல்.ஏ மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அணையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்களுக்கு இயற்கையாக வளரும் ஜிலேபிரக மீன்களை சமபங்கு என்ற அடிப்படையிலும், கட்லா, ரோகு, மிருகால் போன்ற வளர்ப்பு மீன்களை 3ல் ஒரு பங்கு என்ற அடிப்படையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் பிரித்து வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.
கடந்த ஒரு வாரமாக நடந்த மீனவர்கள் போராட்டம் முடிவுக்கு வந்ததால் இன்று ஏராளமான மீனவர்கள் மீன்பிடிக்க சென்று மீன்களை அள்ளி வந்தனர். ஒப்பந்த அடிப்படையில் மீனவர்களுக்கு மீன்களும் வழங்கப்பட்டதால் அவர்கள் நிம்மதி அடைந்தனர். போராட்டத்தால் கடந்த ஒரு வாரமாக வெறிச்சோடி கிடந்த வைகை அணை பகுதி இன்று மீண்டும் களைகட்டியது.
- வனப்பகுதியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
- மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
வருசநாடு:
தேனி மாவட்டம் வருச நாடு வனச்சரகத்திற்கு ட்பட்ட ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வருசநாடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் தர்மன் வனக்காப்பாளர் கமலேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
அப்போது ஐந்தரைப்புலி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த தேக்கம்பட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 40), பொம்மையக்கவுண்ட ன்பட்டியை சேர்ந்த ஆசை த்தம்பி (42), ஐந்தரைபுலியைச் சேர்ந்த முருகன் (48) ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்து 5 கிலோ அளவில் கடமான் கறியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தலை மறைவாக உள்ள மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
- சில நபர்கள் கரூரில் இருந்து அமைச்சர் சார்பாக வருவதாக கூறிக்கொண்டு விற்பனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
- டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தேர்வு துறை அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி சில நபர்கள் கரூரில் இருந்து அமைச்சர் சார்பாக வருவதாக கூறிக்கொண்டு விற்பனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணம் கேட்டும், பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்லியும் மிரட்டுகின்றனர்.
டாஸ்மாக் குடோனில் இருந்து வரக்கூடிய மதுபான பெட்டிக்கு ரூ.12 வீதம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். எனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோரிக்கை மனு கொடுக்க ஊழியர்கள் சென்றதால் சில கடைகளை அடைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனை கண்டித்து டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் டாஸ்மாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அடைக்கப்பட்ட கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.






