search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tasmac employees union"

    • சில நபர்கள் கரூரில் இருந்து அமைச்சர் சார்பாக வருவதாக கூறிக்கொண்டு விற்பனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணம் கேட்டு மிரட்டுகின்றனர்.
    • டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் டாஸ்மார்க் ஊழியர் சங்கங்களின் கூட்டுக் குழு சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. அந்த மனுவில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை தேர்வு துறை அமைச்சரின் பெயரை தவறாக பயன்படுத்தி சில நபர்கள் கரூரில் இருந்து அமைச்சர் சார்பாக வருவதாக கூறிக்கொண்டு விற்பனைத் தொகையில் ஒரு குறிப்பிட்ட சதவீத அடிப்படையில் பணம் கேட்டும், பணம் கொடுக்காத கடைகளை அடைக்கச் சொல்லியும் மிரட்டுகின்றனர்.

    டாஸ்மாக் குடோனில் இருந்து வரக்கூடிய மதுபான பெட்டிக்கு ரூ.12 வீதம் தர வேண்டும் என நிர்பந்தம் செய்கின்றனர். எனவே டாஸ்மாக் ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் வருவாய் இழப்பு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கோரிக்கை மனு கொடுக்க ஊழியர்கள் சென்றதால் சில கடைகளை அடைக்க டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டது.

    இதனை கண்டித்து டாஸ்மாக் ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் டாஸ்மாக் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் பின்னர் அடைக்கப்பட்ட கடைகளை திறப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் கூறியதை அடுத்து ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

    ×