என் மலர்tooltip icon

    தேனி

    • மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது.
    • வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

    கூடலூர்:

    முல்லைப்பெரியாறு அணை நீர் பிடிப்பு பகுதியில் கடந்த 1 வாரமாக மழை பெய்தது. இதனால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர் வரத்து சரியத் தொடங்கியது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலை மற்றும் நீர் பிடிப்பு பகுதியில் மீண்டும் மழை பெய்து வருவதால் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

    நேற்று 100 கன அடி நீர் வந்த நிலையில் இன்று காலை நீர் வரத்து 418 கன அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 100 கன அடி நீர் திறக்கப்படுகிறது. வைகை அணையின் நீர் மட்டம் 53.87 அடியாக உள்ளது. 14 கன அடி நீர் வருகிறது. மதுரையில் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதன் முக்கிய நிகழ்வான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி வருகிற 5-ந் தேதி நடைபெறுகிறது. அப்போது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவார்கள். வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது பக்தர்கள் மீது புனித நீர் பீய்ச்சி அடிக்கப்படும். எனவே ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்லும் வகையில் வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வருடம் தோறும் திறக்கப்படுகிறது.

    அதன்படி இன்று வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வினாடிக்கு 750 கன அடி நீர் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து நீர் திறப்பு 500 கன அடியாகவும் குறைக்கப்பட்டு 4 நாட்களுக்கு பின் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதற்காக அணைப்பகுதியில் உள்ள ஷட்டர், மதகு உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 38.20 அடியாக உள்ளது. 28 கன அடி நீர் வருகிறது. திறப்பு இல்லை. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் 66.58 அடியாக உள்ளது. 49 கன அடி நீர் வருகிறது. 3 கன அடி நீர் திறக்கப்படுகிறது. பெரியாறு 11.2, தேக்கடி 10.2, கூடலூர் 5.6, சண்முகா நதி அ ணை 4.8, உத்தமபாளையம் 1.2, போடி 20.8, வைகை அணை 2.6, சோத்துப்பாறை 8, பெரியகுளம் 6, வீரபாண்டி 7.2, அரண்மனைப்புதூர் 4 மி.மீ மழை அளவு பதிவாகியுள்ளது.

    • குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்துள்ளார்.
    • எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

    மேலசொக்கநாதபுரம்:

    கோம்பை அருகே கரியணம்பட்டியை சேர்ந்தவர் ராஜேஷ்(21). இவர் சம்பவத்தன்று பண்ணைப்புரம் கரியணம்பட்டி கட்டிடம் அருகே உள்ள குடிநீர் குழாயில் சின்டெக்ஸ் தொட்டியில் தண்ணீர் குடிப்பதற்காக குழாயை திறந்துள்ளார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோம்பை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • நீண்ட போராட்டத்துக்கு பின்னர் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையினர் ஏமாற்றம் அடைந்தனர்.
    • மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.
    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டம் தேவாரம் அருகே கோம்பை வனப்பகுதியில் கேரளாவில் இருந்து வந்த மக்னா யானை அட்டகாசம் செய்து வந்தது. மேலும் 15க்கும் மேற்பட்ட வர்கள் யானை தாக்கி உயிரிழந்தனர். விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தியது.

    இந்த மக்னா யானையை விரட்ட கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டது. நீண்ட போராட்டத்துக்கு பின்னர் யானையை பிடிக்க முடியாமல் வனத்துறையி னர் ஏமாற்றம் அடைந்தனர். இந்த நிலையில் மக்னா யானை வனப்பகுதிக்குள் சென்றதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

    சில மாதங்களுக்கு பிறகு தற்போது மீண்டும் கோம்பை வனப்பகுதியில் அட்டகாசம் செய்து வருகிறது. தம்மி நாயக்கன்பட்டி, பொன்கு ன்றம் மலையடிவாரப்பகுதி களில் மூர்க்கத்தனமாக சுற்றி வரும் யானை பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். எனவே இந்த யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
    • பிளாஸ்டிக்கை முழுமை யாக தடை செய்யவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகளை பணியாற்றவேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் நம்மஊரு சூப்பர் 2-ம் கட்ட விழிப்புணர்வு பிரச்சார பணிகள் குறித்து மாவட்ட அளவிலான ஒருங்கிணை ப்புக்குழு கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலெக்டர் ஷஜீவனா தெரிவித்ததாவது,

    தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலின்படி தேனி மாவட்டத்தில் கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய மக்கள் பங்கேற்புடன் கூடிய சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் கடந்த 2022 ஆகஸ்டு முதல் அக்டோபர் வரை நடைபெற்றது. இதன்மூலம் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ப்பட்டது.

    இதைதொடர்ந்து 2-ம் கட்டமாக வரும் மே 1 முதல் ஜூன் 15 வரை கிராம ஊராட்சி பகுதிகளில் நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை பற்றிய நம்ம ஊரு சூப்பரு சிறப்பு விழிப்பு ணர்வு பிரசாரம் நடைபெற உள்ளது. கிராமப்பகுதிகளில் இந்த சிறப்பு விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளும் பொருட்டு இதை சிறப்பாக நடத்துவதற்கு நியமிக்க ப்பட்டுள்ள பொறுப்பு அலுவலர்கள் மற்றும் கண்காணிப்பு அலுவலர்கள் முறையாக தங்களது பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

    ஊரக பகுதிகளில் உள்ள பொதுமக்களிடம் சுயஉதவி க்குழு உறுப்பினர்கள் மூலமாக நீர், சுகாதாரம் மற்றும் கழிவுநீர் மேலாண்மை தொடர்பாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும். துப்புரவு மற்றும் திட, திரவ கழிவு மேலாண்மைக்காக வழங்கப்படும். அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளின் செயல்பாட்டை உறுதி செய்தல், பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிப்பதுடன் அனைத்து இடங்களிலும் குப்பை இல்லாமலும், திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருப்பதை உறுதி செய்தல், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை முழுமை யாக தடை செய்யவும், வணிக நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தல் போன்ற பணிகளை மாவட்ட அள விலான ஒருங்கிணை ப்புக்குழு அனைத்துத்துறை அலுவலர்கள் இணைந்து பணியாற்றிட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

    • சோத்துப்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு செல்வதற்காக நண்பர்களுடன் தொழிலாளி மோட்டார் சைக்கிளில் சென்றார்.
    • திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    பெரியகுளம்:

    தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது49). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி குழந்தை களுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

    இந்த நிலையில் சோத்துப்பாறை பகுதியில் உள்ள மாந்தோ ப்புக்கு செல்வதற்காக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பால கிருஷ்ணன் இறந்து விட்டட தாக தெரிவித்தனர். இது குறித்து தென்கரை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

    • போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இன்று அணைப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாம் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.
    • மீனவர்கள் நாங்கள் போராட்டம் நடத்த வில்லை. ஒப்பந்ததாரர்தான் மீன் பிடிக்க எங்களை அனுமதிக்க வில்லை. எப்போது வேலைக்கு அழைத்தாலும் உடனே வர தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்குஞ்சுகளை விட்டு மீன்களைபிடித்து வந்தனர்.

    வைகைஅணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு பங்கீடு அடிப்படையில் மீன்பிடிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. மீன்வளத்துறை சார்பில் வைகை அணையில் மீன்பிடிக்கும் ஒப்பந்தப்பு ள்ளி மூலம் கடந்த 1-ந்தேதி முதல் தனியாருக்கு வழங்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்ததாரர் சார்பில் மீன்பிடிப்பதற்கு வழங்கப்படும் கூலி போது மானதாக இல்லை என்றும் , சம பங்கீட்டில் மீன்கள் வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடை ந்தது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா, டி.எஸ்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அணையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்க ளுக்கு இயற்கையாக வளரும் ஜிலேபிரக மீன்களை சமபங்கு என்ற அடிப்படையிலும், கட்லா, ரோகு, மிருகால் போன்ற வளர்ப்பு மீன்களை 3ல் ஒரு பங்கு என்ற அடிப்படையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் பிரித்து வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இன்று அணைப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாம் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். இது குறித்து உதவி இயக்குனர் பஞ்சராஜா கூறுகையில், வைகை அணையில் முதல் நாள் 1½ டன் மீன்கள் பிடிபட்டது.

    இதில் 500 கிலோவுக்கு மேற்பட்ட மீன்கள் விற்பனையாகவில்லை. எனவே வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக கூறினார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், நாங்கள் போராட்டம் நடத்த வில்லை. ஒப்பந்ததாரர்தான் மீன் பிடிக்க எங்களை அனுமதிக்க வில்லை. எப்போது வேலைக்கு அழைத்தாலும் உடனே வர தயாராக உள்ளோம்.

    ஆனால் எங்களுக்கு சேர வேண்டிய பங்கை முழுமையாக தர வேண்டும். வியாபாரம் ஆகவில்லை என கூறி வியாபாரிகளுக்கு வழங்கப்படும் மீன்களின் அளவை குறைக்கும் முயற்சி யாகவே ஒப்பந்ததாரரின் செயல்பாடு உள்ளது என்றனர்.

    • தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில் மே 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.
    • பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்க தெரிவிக்கப்பட்டுள்ளது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் சட்டப்பணிகள் ஆணை க்குழு சார்பில் மே 13-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்ற முகாம் நடைபெறுகிறது.

    தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிப்பட்டி, உத்தம பாளையம் நீதி மன்றங்களில் நிலுவையில் உள்ள மோட்டார் வாகன விபத்து இழப்பீடு குறித்த வழக்குகள், சொத்து, பணம் சம்மந்தப்பட்ட உரிமையியல் வழக்குகள், சமாதானம் செய்யக்கூடிய குற்ற வழக்குகள், ஜீவானாம்சம், நில ஆக்கிரமிப்பு, தொழி லாளர் நலன் இழப்பீடு வழக்குகள், குடும்ப வன்முறை தடுப்புச்சட்ட வழக்குகள், காசோலை நுகர்வோர் வழக்குகள், வருவாய் சம்பந்தப்பட்ட வழக்குகள், இதர பொதுப்பயன்பாட்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

    பொது மக்கள் இந்த முகாம்களில் கலந்து கொண்டு நிலுவையில் உள்ள வழக்குகளை விரை வாகவும், சுமூகமாகவும் முடித்து கொள்ளலாம் என்று முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி சஞ்சய்பாபா அறிவித்துள்ளார்.

    • கண்ணகி கோவில் திருவிழா சார்பாக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17ந் தேதி தேக்கடியில் நடைபெற்றது.
    • குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம் அமையும் இடங்களை அவர்கள் பார்வையிட்டு கோவில் வளாகத்தில் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

    கூடலூர்:

    தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கலதேவி கண்ணகி கோவிலில் சித்திரை முழு நிலவு விழா சித்ரா பவுர்ணமியன்று கொண்டா ப்பட்டு வருகிறது. ஒரு வாரம் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வந்த நிலையில் கேரளாவின் கெடுபிடியால் ஒருநாள் மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 5ந் தேதி நடைபெற உள்ளது. விழா நடத்துவது தொடர்பாக இரு மாநில அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் கடந்த 17ந் தேதி தேக்கடியில் நடைபெற்றது. இதில் தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா, இடுக்கி மாவட்ட கலெக்டர் ஷீபாஜார்ஜ் தலைமையில் இருமாநில அதிகாரிகள் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர்.

    இந்த நிலையில் தமிழக அரசு சார்பில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய பாரதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டியன், வட்டாட்சி யர் சந்திரசேகர், கேரள அரசு சார்பில் பெரியாறு புலிகள் காப்பக துணை இயக்குனர் பாட்டீல்சுயோக் சுபாஷ்ராவ், இடுக்கி மாவட்ட துணை கலெக்டர் அருண்நாயர், பீர்மேடு டி.எஸ்.பி. குரியகோஷ் மற்றும் வனத்துறை, போலீஸ், வருவாய்த்துறை அதிகாரிகள் மங்கலதேவி கண்ணகி கோவிலில் ஆய்வு மேற்கொண்டனர்.

    பக்தர்கள் அதிக அளவில் வருவார்கள். எனவே குடிநீர், சுகாதாரம், மருத்துவ முகாம் அமையும் இடங்களை அவர்கள் பார்வையிட்டனர். மேலும் கோவில் வளாகத்தில் சீரமைப்பு பணிகளையும் பார்வையிட்டு ஆலோசனை நடத்தினர்.

    • தேனி மாவட்டத்தில் வெவ்வேறு பிரச்சினைகளில் இளம்பெண் உள்பட 3 பேர் மாயமாகினர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து மாயமானவர்களை தேடி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அல்லிநகரத்தை சேர்ந்தவர் செல்வக்குமார் மகன் ஹரிநாத்கோகுல் (வயது24). இவர் அப்பகுதி யில் உள்ள தனியார் நிறுவன த்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தனது தாயுடன் உறவினர் வீட்டு விஷேசத்திற்கு சென்ற போது இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

    இதனால் ஹரிநா த்கோகுல் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார். அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. இது குறித்து அல்லிநகரம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவனதாப்பட்டி அருகே ஜி.அம்சாபுரத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் (39). இவரது மனைவி பிரியங்கா (27). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். பாண்டியராஜன் லாரி டிரைவராக உள்ளதால் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வீடு திரும்பியபோது பிரியங்கா வீட்டில் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தார். எங்கும் கிடை க்காததால் தேவதானப்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.

    கூடலூரை சேர்ந்த பிரபு (39). சலூன் கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று தனது மகனுக்கு உணவு வாங்கி கொடுத்து விட்டு மாத்திரை வாங்குவதற்காக சென்றார். அதன்பின்ன ர்வீடு திரும்பவில்லை. இது குறித்து கூடலூர் வடக்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து மாயமான பிரபுவை தேடி வரு கின்றனர்.

    • ஜி.கல்லுப்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • அரசு பள்ளிகளில் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாணவ-மாணவிகளிடம் கலந்துரை யாடினார்.

    தேனி:

    தேனி மாவட்டம் பெரியகுளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஜி.கல்லுப்பட்டி பகுதியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் மேற்கொள்ள ப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட கலெக்டர் ஷஜீவனா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் ரூ.9.80 லட்சம் மதிப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நீர் உறிஞ்சு குழிகள் அமைக்கும் பணி, பணி தளத்தில் குடிநீர் வசதி மற்றும் முதலுதவி பெட்டி வசதிகள், பொது நிதிதிட்டத்தின் கீழ் ரூ.9.85 லட்சம் அமைக்கப்பட்டுள்ள சிமிண்ட் சாலை பணி , பிரதமமந்திரி வீடு திட்ட த்தின்கீழ் கட்டப்பட்டுள்ள குடியிருப்பு கட்டுமானபணி, அறிஞர் அண்ணாது வக்கபள்ளியில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் செயல்பாடுகள் மற்றும் அங்கு அமைக்க ப்பட்டுள்ள காய்கறி தோட்ட த்தினையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஓடைப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்று வதற்கான உரிய நடவடிக்கை களை வருவாய்த்துறை யினருடன் இணைந்து மேற்கொண்டு ஓடைப்பகுதி களை ஊராட்சி கட்டு ப்பாட்டில் வைக்குற மண்டலதுணை வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஊராட்சி மன்ற தலை வர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் ஊராட்சி பகுதி களில் வசிக்கின்ற பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் பொதுமக்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.

    முன்னதாக ஜி.கல்லு ப்பட்டி யில் செயல்பட்டுவரும் அன்புகுழந்தைகளிடத்தில் தங்கி பயிலுகின்ற குழந்தை களின் எண்ணிக்கை, பணி யாளர்களின் எண்ணிக்கை, குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு , வழங்க ப்படும் உணவு, குடிநீர், சுகாதார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் , இல்லத்தின் செயல்பாடுகள், அரசின் வழிகாட்டு நெறிமுறை களின்படி செயல்படுகிறதா என்பதுகுறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

    இதைதொடர்ந்து புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி யில் மாணவ-மாணவி களின் எண்ணிக்கை, ஆசிரியர்களின் எண்ணி க்கை, வருகை பதிவேடு வழங்கப்படும் உணவு அதன் தரம் மற்றும் குடிநீர், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து மாணவ-மாணவி யர்களிடம் கலந்துரை யாடினார்.

    • கேரளாவை சேர்ந்த ஒருவர் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வருவதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
    • அப்பகுதி மக்கள் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டு டாக்டருக்கு ஆதரவாகவும், அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசமிட்டனர்.

    ஆண்டிபட்டி, ஏப்.27-

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே அனுப்பப்பட்டி ரெங்கராம்பட்டி கிராமத்தில் சுமார் 30-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கேரளாவை சேர்ந்த பாபு(62) என்பவர் கிளீனிக் வைத்து பொதுமக்களுக்கு அலோபதி சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதுகுறித்து சிலர் புகார் அளித்தனர். அதன்பேரில் ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்ப நல இணைஇயக்குனர் பரிமளா ஆண்டிபட்டி போலீசில் புகார் அளித்தார்.

    அதன்படி போலீசார் ரெங்கராம்பட்டிக்கு சென்று டாக்டர் பாபுவை கைது செய்து அங்கிருந்த மருத்துவ உபகரண பொருட்களையும் பறிமுதல் செய்தனர். இந்த தகவல் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது. இதனைதொடர்ந்து ஒன்றுதிரண்ட கிராமமக்கள் ஆண்டிபட்டி போலீஸ் நிலையத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர். டாக்டருக்கு ஆதரவாகவும், அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோசமிட்டனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆண்டிபட்டி டி.எஸ்.பி ராமலிங்கம் விரைந்து வந்து கிராமமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். டாக்டர் பாபு சிகிச்சை அளித்து யாரும் பாதிக்கப்படவில்லை. மேலும் ஏழை மக்களிடம் பணம் வாங்காமல் கூட மருத்துவம் பார்த்து வருகிறார். எனவே அவரை விடுவிக்க வேண்டும் என கிராமமக்கள் கோரிக்கைவிடுத்தனர். இதனைதொடர்ந்து அலோபதி சிகிச்சை மேற்கொள்ளக்கூடாது என பாபுவை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனைதொடர்ந்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • தேனி மாவட்டத்தில் பொதுமக்களிடம் திருடுபோனதாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 444 புகார்கள் பெறப்பட்டது.
    • ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 105 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    தேனி:

    தேனி மாவட்டத்தில் அனைத்து போலீஸ்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளிலும் பொதுமக்களிடம் இருந்து திருடுபோனதாக கடந்த ஜனவரி மாதத்திலிருந்து 444 புகார்கள் பெறப்பட்டது.

    இதனையடுத்து மாவட்ட எஸ்.பி. பிரவீன் உமேஷ்டோங்கரே உத்தரவின் பேரில் சைபர் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதில் திருடுபோன 140 செல்போன்கள் மீட்கப்பட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2ம் கட்டமாக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான 105 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு அவை மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் வைத்து உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

    நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

    ×