பெரியகுளத்தில் பைக்கில் இருந்து தவறி விழுந்து தொழிலாளி பலி

சோத்துப்பாறை பகுதியில் உள்ள மாந்தோப்புக்கு செல்வதற்காக நண்பர்களுடன் தொழிலாளி மோட்டார் சைக்கிளில் சென்றார். திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கோப்பு படம்
கோப்பு படம்
Published on

பெரியகுளம்:

தேனி அன்னஞ்சியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது49). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தார். கருத்து வேறுபாடு காரணமாக அவரது மனைவி குழந்தை களுடன் கோபித்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் சோத்துப்பாறை பகுதியில் உள்ள மாந்தோ ப்புக்கு செல்வதற்காக நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் சென்றபோது திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்தார்.

இதையடுத்து சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பால கிருஷ்ணன் இறந்து விட்டட தாக தெரிவித்தனர். இது குறித்து தென்கரை போலீ சார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com