என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன் பிடிக்க அனுமதி மறுப்பு"

    • போராட்டம் நடத்தியதை தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இன்று அணைப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாம் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார்.
    • மீனவர்கள் நாங்கள் போராட்டம் நடத்த வில்லை. ஒப்பந்ததாரர்தான் மீன் பிடிக்க எங்களை அனுமதிக்க வில்லை. எப்போது வேலைக்கு அழைத்தாலும் உடனே வர தயாராக உள்ளோம் என தெரிவித்தனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகில் உள்ள வைகை அணை நீர்தேக்கத்தில் ஏராளமான மீனவர்கள் மீன்குஞ்சுகளை விட்டு மீன்களைபிடித்து வந்தனர்.

    வைகைஅணையை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மீனவர்களுக்கு பங்கீடு அடிப்படையில் மீன்பிடிக்க வனத்துறை அனுமதி வழங்கியது. மீன்வளத்துறை சார்பில் வைகை அணையில் மீன்பிடிக்கும் ஒப்பந்தப்பு ள்ளி மூலம் கடந்த 1-ந்தேதி முதல் தனியாருக்கு வழங்கப்பட்டது.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஒப்பந்ததாரர் சார்பில் மீன்பிடிப்பதற்கு வழங்கப்படும் கூலி போது மானதாக இல்லை என்றும் , சம பங்கீட்டில் மீன்கள் வழங்க வலியுறுத்தியும் மீனவர்கள் கடந்த வாரம் தொடர் போராட்டம் நடத்தினர். அவர்களுடன் அதிகாரிகள் நடத்திய முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடை ந்தது. ஆண்டிபட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் தாசில்தார் திருமுருகன், மீன்வளத்துறை இயக்குனர் பிரபாவதி, உதவி இயக்குனர் பஞ்சராஜா, டி.எஸ்.பி. ராமலிங்கம், எம்.எல்.ஏ. மகாராஜன் ஆகியோர் முன்னிலையில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    இதில் உரிமம் பெற்ற ஒப்பந்ததாரர் மூலம் அணையில் மீன்பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மீனவர்க ளுக்கு இயற்கையாக வளரும் ஜிலேபிரக மீன்களை சமபங்கு என்ற அடிப்படையிலும், கட்லா, ரோகு, மிருகால் போன்ற வளர்ப்பு மீன்களை 3ல் ஒரு பங்கு என்ற அடிப்படையிலும் ஒப்பந்ததாரர் சார்பில் பிரித்து வழங்குவது என உடன்பாடு ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து ஒரு வாரத்துக்கு பிறகு மீனவர்கள் மீண்டும் மீன்பிடிக்க சென்றனர். இந்த நிலையில் இன்று அணைப்பகுதியில் மீன்பிடிக்க வேண்டாம் என ஒப்பந்ததாரர் தெரிவித்துள்ளார். இது குறித்து உதவி இயக்குனர் பஞ்சராஜா கூறுகையில், வைகை அணையில் முதல் நாள் 1½ டன் மீன்கள் பிடிபட்டது.

    இதில் 500 கிலோவுக்கு மேற்பட்ட மீன்கள் விற்பனையாகவில்லை. எனவே வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் மீன் பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என ஒப்பந்ததாரர் தெரிவித்ததாக கூறினார். இது குறித்து மீனவர்கள் கூறுகையில், நாங்கள் போராட்டம் நடத்த வில்லை. ஒப்பந்ததாரர்தான் மீன் பிடிக்க எங்களை அனுமதிக்க வில்லை. எப்போது வேலைக்கு அழைத்தாலும் உடனே வர தயாராக உள்ளோம்.

    ஆனால் எங்களுக்கு சேர வேண்டிய பங்கை முழுமையாக தர வேண்டும். வியாபாரம் ஆகவில்லை என கூறி வியாபாரிகளுக்கு வழங்கப்படும் மீன்களின் அளவை குறைக்கும் முயற்சி யாகவே ஒப்பந்ததாரரின் செயல்பாடு உள்ளது என்றனர்.

    ×