search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 persons arrested"

    • வனப்பகுதியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.
    • மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருச நாடு வனச்சரகத்திற்கு ட்பட்ட ஐந்தரைப்புலி மலைப்பகுதியில் மர்ம நபர்கள் சிலர் புள்ளிமானை வேட்டையாடி சமைத்து சாப்பிடுவதாக வருசநாடு வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலை தொடர்ந்து வனச்சரகர் கணேசன் தலைமையில் வனவர் தர்மன் வனக்காப்பாளர் கமலேஷ் உள்ளிட்ட வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.

    அப்போது ஐந்தரைப்புலி கிராமத்தை ஒட்டியுள்ள வனப்பகுதியில் கடமான் கறியை சமைத்துக் கொண்டிருந்த தேக்கம்பட்டியை சேர்ந்த சுந்தர் (வயது 40), பொம்மையக்கவுண்ட ன்பட்டியை சேர்ந்த ஆசை த்தம்பி (42), ஐந்தரைபுலியைச் சேர்ந்த முருகன் (48) ஆகிய 3 பேரையும் வனத்துறையினர் சுற்றி வளைத்து பிடித்தனர்.

    மேலும் அவர்களிடம் இருந்து 5 கிலோ அளவில் கடமான் கறியை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது இதில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தலை மறைவாக உள்ள மேலும் சிலரை வனத்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • வடமதுரை அருகே கொம்பேறிபட்டி ஸ்ரீராம புரத்தை சேர்ந்தவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்
    • இந்த ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    வடமதுரை:

    வடமதுரை அருகே கொம்பேறிபட்டி ஸ்ரீராம புரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ஓடை அருகே மேய்ச்சலுக்காக ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.

    அப்போது ஆம்னி வேனில் வந்த ஒரு கும்பல் 2 ஆடுகளை திருடிச் சென்றன. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடி அவர்களை விரட்டினர்.

    தப்பி சென்ற கும்பல் அவ்வழியாக செல்ல முடியாததால் மீண்டும் மம்மானியூருக்கு திரும்பி வந்தனர். இதை பார்த்ததும் பொதுமக்கள் ஒன்றுகூடி அவர்களை மடக்கி பிடித்தனர்.

    பின்னர் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் வடுகபட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது25), கருப்பதேவனூரை சேர்ந்த பிரகாஷ் (20), நாயக்கனூரை ேசர்ந்த ராஜேந்திரன் (21) என்பதும் ஆடுகள் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஆடுகள் திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கேஸ் ஏஜென்சி அனுமதி பெற்று தருவதாக ரூ.21 லட்சம் மோசடி செய்த நபர்களை போலீசார் கைது செய்தனர்.
    • சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் பந்தல்தொழிலாளி கேஸ் ஏஜென்சி பெற ஒரு இணையதளத்தில் பெயர் மற்றும் செல்போன் எண்ணை பதிவிட்டார். பின்னர் 3 எண்களில் இருந்து கேஸ் நிறுவன மேலாளர் பேசுவதாக ஒருவர் பேசியுள்ளார்.

    அவர் இந்தியில் பேசியதால் பணிபுரியும் தனது உறவினர் மூலம் அவரிடம் செல்போனில் பேசிஉள்ளார். அப்போது அந்த நபர் கூறிய வங்கி கணக்கில் ரூ.21 லட்சத்து 64 ஆயிரத்து 700 செலுத்தி உள்ளனர்.

    பின்னர் அந்த நபரை தொடர்பு கொண்டு கேஸ் ஏஜென்சி தொடங்குவது குறித்து பேச முயன்றனர். ஆனால் அந்த எண் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது.

    தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த தொழிலாளி சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். விசாரணையில் அவர் செலுத்திய வங்கி கணக்கு பீகாரை சேர்ந்தது என தெரியவந்தது. இதுகுறித்து பீகார் மாநில போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும் மோசடியில் ஈடுபட்ட ரோசன்குமார், தீபக்குமார், பல்ராம் ஆகிய 3 பேரை சைபர் கிரைம் போலீசார் கைது செய்து தேனிக்கு அழைத்து வந்தனர்.

    ×