என் மலர்
நீங்கள் தேடியது "3 பேரை கைது"
- வடமதுரை அருகே கொம்பேறிபட்டி ஸ்ரீராம புரத்தை சேர்ந்தவர் ஆடுகளை வளர்த்து வருகிறார்
- இந்த ஆடுகளை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
வடமதுரை:
வடமதுரை அருகே கொம்பேறிபட்டி ஸ்ரீராம புரத்தை சேர்ந்தவர் முருகன். இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். அப்பகுதியில் உள்ள ஓடை அருகே மேய்ச்சலுக்காக ஆடுகளை கட்டி வைத்திருந்தார்.
அப்போது ஆம்னி வேனில் வந்த ஒரு கும்பல் 2 ஆடுகளை திருடிச் சென்றன. இதை பார்த்ததும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் ஒன்று கூடி அவர்களை விரட்டினர்.
தப்பி சென்ற கும்பல் அவ்வழியாக செல்ல முடியாததால் மீண்டும் மம்மானியூருக்கு திரும்பி வந்தனர். இதை பார்த்ததும் பொதுமக்கள் ஒன்றுகூடி அவர்களை மடக்கி பிடித்தனர்.
பின்னர் வடமதுரை போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணையில் அவர்கள் வடுகபட்டியை சேர்ந்த தங்கதுரை (வயது25), கருப்பதேவனூரை சேர்ந்த பிரகாஷ் (20), நாயக்கனூரை ேசர்ந்த ராஜேந்திரன் (21) என்பதும் ஆடுகள் திருடிச் சென்றதும் தெரிய வந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள கிராமங்களில் ஆடுகள் திருடிச் செல்வது அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






