என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை வசதி - பக்தர்கள் வலியுறுத்தல்
    X

    தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு செல்ல சாலை வசதி செய்யப்பட்டுள்ளதை காணலாம். (பைல் படம்)

    தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை வசதி - பக்தர்கள் வலியுறுத்தல்

    • தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியன்று திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது.
    • தமிழக பக்தர்கள் இடையூறின்றி சென்று வர தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை அமைக்க வலியுறுத்தி உள்ளனர்.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள மங்கல தேவி கண்ணகி கோவிலில் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமியன்று திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக தமிழகத்தில் இருந்து செல்லும் பக்தர்களுக்கு கேரள வனத்துறையினர் அதிக அளவில் கெடு பிடிகளை தருகின்றனர். தேனி மாவட்டம் கூடலூர் அருகே பலியன்குடி வின்னேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது மங்கலதேவி கண்ணகி கோவில். இந்த கோவிலுக்கு லோயர் கேம்ப் பலியன்குடி யில் இருந்து சுமார் 6.6 கி.மீ தூரம் தமிழக வனப்பகுதி வழியாக பக்தர்கள் சென்று வருகின்றனர்.

    இது மட்டுமின்றி கேரள மாநிலம் குமுளியில் இருந்து கொக்கரகண்டம் வழியாக 14 கி.மீ தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது. சித்ரா பவுர்ண மியன்று தமிழக வனப்பாதை யில் வாகனங்கள் செல்ல முடியாது. ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் அங்கு கேரள அரசு அனுமதி பெற வேண்டியுள்ளது. இதன் காரணமாக கோவில் கட்டுப்பாடு முழுவதையும் தங்கள் வசம் கொண்டு வருவதற்கு கேரள அரசு திட்டம் தீட்டி வருகிறது.

    கோவிலின் முகப்பு வாயில் தேனி மாவட்டத்தை நோக்கி அமைந்துள்ளது. 1817ம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனி சர்வேயை யும், 1893, 1896ல் நடைபெற்ற சர்வேயிலும், 1913, 1915-ல் வெளியிடப்பட்ட எல்லை வரை படங்களிலும் தமிழக வனப்பகுதியிலேயே கோவில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    1976ம் ஆண்டு தமிழக - கேரள அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயி லும் கோவில் 40 அடி தூரம் தள்ளி தமிழக வனப்பகுதி யில் இருப்பது ஒப்புக்கொ ள்ளப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கேரள வனப்பகுதியில் வாகனங்கள் செல்வதற்கு பாதை அமை க்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கேரளாவில் கெடுபிடிகள் தொடங்கியது. எனவே இதனை தடுக்க தமிழக வனப்பகுதியான பலியன்குடியில் இருந்து 6.6 கி.மீ தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ தூரத்துக்கு சாலை அமைத்தால் பக்த ர்கள் கோவிலுக்கு செல்ல பாதைகள் கிடைக்கும்.

    வாகன போக்குவரத்து குறைவால் இப்பகுதி நடை பாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோவில் வரை சாலை அமைக்க தமிழக அரசு சர்வே பணிகள் மேற்கொண்டது. ஆனால் அதனைத் தொடர்ந்து பணிகள் முடக்கப்பட்டது. தற்போது ரூ.20 லட்சம் ஒதுக்கீடு செய்து சர்வே பணிகள் நடந்தன. அதன் பின்னர் எந்த நடவடிக்கையும் இல்லை. எனவே தமிழக பக்தர்கள் இடையூறின்றி சென்று வர தமிழக வனப்பகுதி வழியாக மங்கல தேவி கண்ணகி கோவிலுக்கு சாலை அமைப்பதே நிரந்தர தீர்வாக இருக்கும் என்றனர்.

    சித்ரா பவுர்ணமி மே 5-ந் தேதி கொண்டாடப்படுகிறது. எனவே அன்று ஒரு நாள் தேனி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்க ப்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் வகையில் 20-ந் தேதி பணி நாளாக செயல்படும் என தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீ வனா தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×