என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அரசு போக்குவரத்துக்கழக டிரைவர் பலி"

    • பைக்கில் சென்றபோது எதிரே வந்த டிராக்டரை பார்த்து நிலைதடுமாறி கீழேவிழுந்தார்.
    • டயர் தலை மீது ஏறி இறங்கியதில் பரிதாபமாக அரசு போக்குவரத்து டிரைவர் பலியானார்.

    கம்பம்:

    கம்பம் அருகே கோம்பை ஓடைத்தெருவை சேர்ந்தவர் பவுன்பாண்டி(54). இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கம்பம் 2 கிளையில் டிரைவராக பணிபுரிந்து வந்தார். ஓய்வு நாளன்று அலுவலகத்திற்கு வந்த பவுன்பாண்டி மீண்டும் ஊர்திரும்பி கொண்டிருந்தார்.

    கம்பம்-கோம்பை சாலையில் ராணிமங்கம்மாள் சாலை பகுதியில் சென்றபோது எதிரே வந்த டிராக்டரை பார்த்து நிலைதடுமாறி கீழேவிழுந்தார்.

    இதை கவனிக்காத டிராக்டர் டிரைவர் பவுன்பாண்டி மீது மோதினார். இதில் டிராக்டர் டயர் பவுன்பாண்டியின் தலைமீது ஏறி இறங்கியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதுகுறித்து கோம்பை போலீசில் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து டிராக்டர் டிரைவர் ஈஸ்வரனை கைது செய்தனர்.

    ×