என் மலர்

    உள்ளூர் செய்திகள்

    தொடர் மழையால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து
    X

    மூலவைகையாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதை படத்தில் காணலாம்.

    தொடர் மழையால் வறண்டு கிடந்த மூலவைகையாற்றில் நீர்வரத்து

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்ததன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
    • வறண்ட மூல வைகையாறு மணலாக காட்சியளித்தது. இந்த நிலையில் மழையால் ஆற்றில் தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

    கூடலூர்:

    சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்ததன்படி தேனி, திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கோடைவெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் ஓரளவு குளிர்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும் ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

    இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மார்ச் மாத தொடக்கத்தில் முற்றிலும் வறண்ட மூல வைகையாறு மணலாக காட்சியளித்தது. இந்த நிலையில் மழையால் ஆற்றில் தொடர்ந்து நீர்வ ரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என எதிர்பார்த்து உள்ளனர். முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 116.30 அடியாக உள்ளது. 308 கனஅடிநீர் வருகிறது. அணையிலிருந்து 100 கனஅடிநீர் திறக்கப்படுகிறது.

    வைகைஅணையின் நீர்மட்டம் 53.97 அடியாக உள்ளது. 107 கனஅடிநீர் வருகிறது. மதுரை மாநகர குடிநீருக்காக 72 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.40 அடியாக உள்ளது. நீர்வரத்தும், திறப்பும் இல்லை.

    சோத்துப்பாறை அணையின்நீர்மட்டம் 57.47 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடிநீர் திறக்கப்படுகிறது. தேக்கடி 0.2, கூடலூர் 1.4, உத்தமபாளையம் 1.2, சண்முகாநதிஅணை 1.4, போடி 6.3, வைகை அணை 0.6, வீரபாண்டி 1.8 மி.மீ மழையளவு பதிவாகி உள்ளது.

    Next Story
    ×