search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முல்லை பெரியாறுஅணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை
    X

    கோப்பு படம்

    முல்லை பெரியாறுஅணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல் மழை

    • கடந்த 2 மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கத்தால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக நின்று நீர்மட்டம் குறைந்தது.
    • முல்லை பெரியாறுஅணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லை பெரியாறுஅணை மூலம் தமிழகத்தில் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மதுரை தேனி மாவட்ட முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. மேலும் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14,707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல்சாகுபடி நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகள் மழையையே முழுவதுமாக நம்பியிருந்தனர். ஆனால் கடந்த 2 மாதங்களாக இருந்த வெயிலின் தாக்கத்தால் அணைக்கு நீர்வரத்து முழுவதுமாக நின்று நீர்மட்டம் குறைந்தது.

    இந்நிலையில் நேற்று தேனி, திண்டுக்கல் உள்பட 15 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. அதுபோல முல்லை பெரியாறுஅணை நீர்பிடிப்பு பகுதியில் சாரல்மழை பெய்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 115.80 அடியாக உள்ளது. வரத்து இல்லாத நிலையில் 100 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 1871 மி.கன அடியாக உள்ளது.

    வைகை அணையின் நீர்மட்டம் 53.99 அடியாக உள்ளது. அணைக்கு 26 கனஅடி நீர் வருகிறது. மதுரை மாநகர மக்களின் குடிநீருக்காக 72 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 2568 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 37.60 அடியாக உள்ளது. அணைக்கு நீர் வரத்து, திறப்பு இல்லை. இருப்பு 155.59 மி.கன அடியாக உள்ளது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 58.98 அடியாக உள்ளது. அணைக்கு வரத்து இல்லாத நிலையில் 3 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இருப்பு 21.68 மி.கன அடியாக உள்ளது.

    பெரியாறு 23, தேக்கடி 1.8, உத்தமபாளையம் 5.2, சண்முகாநதி அணை 4.7, மஞ்சளாறு 8 மி.மீ மழையளவு பதிவாகியுள்ளது.

    Next Story
    ×