என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jewelery shop robbery case"

    • கொள்ளை வழக்கில் உத்தம பாளையத்தை சேர்ந்தவரை கைது செய்து அவரிடமிருந்த இருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.
    • தேனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் கொள்ளையனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    தேனி:

    தேனி பெரியகுளம் சாலையில் உள்ள ஒரு நகைக்கடையில் 2013 ஜூன் 30ம் தேதி கருப்பு கையுறைகள், முகமூடி, ஹெல்மெட் அணிந்து அடையாளம் தெரியாத நபர் திடீரென நுழைந்தார். தடுக்க முயன்ற காவலாளியை நோக்கி துப்பாக்கியால் சுட்டார். அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய காவலாளி தப்பியோடினார்.

    இதனால் நகைக்கடையின் கதவு அருகில் இருந்த கண்ணாடி மீது குண்டு பட்டு சிதறியது. அதன் பின் உள்ளே புகுந்த முகமூடி கொள்ளையன் மேல்த ளத்தை நோக்கி 3 முறை சுட்டு ஊழியர்களை மிரட்டினார். பின்னர் 50 பவுன் தங்க சங்கிலிகளை பையில் அள்ளிக் கொண்டு தப்ப முயன்றார்.

    தெருவில் ஓடிய அவரை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். இன்ஸ்பெக்டர் கோபி விசாரணையில் அவர் தேனி மாவட்டம் உத்தம பாளையத்தை சேர்ந்த கேரளக்குமரன் என தெரிய வந்தது. அவரிடம் இருந்த கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டது.

    தேனி சார்பு நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வேல்முருகன் ஆஜரான கேரளக்கு மரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி சுந்தரி தீப்பளித்தார். இதுகுறித்து தேனி போலீசார் தெரிவித்ததாவது, கேரளக்குமரன் பல திருட்டு வழக்குகளில் சம்மந்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

    சிறையில் இருந்த போது பப்புலு என்ற கைதியுடன் பழக்கம் ஏற்பட்டது. அவருடன் இணைந்து பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள கோச்சூரில் வசிக்கும் குரூஸிடம் ரூ.20 ஆயிரம் கொடுத்து கைத்துப்பா க்கியை வாங்கி உள்ளார் என்று தெரிவித்தனர்.

    ×