என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் நிர்வாண பூஜையை கண்டித்த பெண்ணை தாக்கிய சாமியார்
    X

    சாமியார் முருகன்.

    கம்பத்தில் நிர்வாண பூஜையை கண்டித்த பெண்ணை தாக்கிய சாமியார்

    • இது குறித்து அதே பகுதியை சேர்ந்தவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.
    • சாமியார், வீடு புகுந்து தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.

    கம்பம்:

    தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்தவர் முருகன். இவர் தனது வீட்டில் பில்லிசூனியம், நிர்வாண பூஜை நடத்திவந்தார். இதனால் அக்கம் பக்கத்தில் குடியிருப்பவர்கள் பாதிக்கப்பட்டனர்.

    எனவே இவற்றை நிறுத்துமாறு கூறி உள்ளனர். ஆனால் அவர் தொடர்ந்து பூஜையில் ஈடுபட்டுள்ளார். எனவே இது குறித்து அதே பகுதியை சேர்ந்த குணவதி (வயது65) என்பவர் தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். மேலும் இது குறித்து அவர் பேட்டி அளித்தார்.

    இதனால் ஆத்திரம் அடைந்த முருகன் வீடு புகுந்து குணவதியை தகாத வார்த்தைகளால் திட்டி தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். இதில் காயம் அடைந்த குணவதி தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து கம்பம் தெற்கு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு ப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது.

    ,.
    Next Story
    ×