என் மலர்tooltip icon

    தேனி

    • மாரிச்சாமி மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
    • இதனால் தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    தேனி:

    தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தினமும் பல ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களின் உணவு தேவைக்காக மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே, கேன்டீன்களில் உள்ள குடிநீர் குழாய் கடந்த சில வாரங்களுக்கு முன்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கேன்டீன் நடத்தி வரும் மாரிச்சாமி என்பவர் கல்லூரி நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளார். அப்போது குடிநீர் இணைப்புகளை மீண்டும் வழங்க வேண்டுமானால் தனக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று தேனி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் கூறியதாகவும் கூறப்படுகிறது.

    இதையடுத்து, மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் கேன்டீன் அமைத்துள்ள மாரிச்சாமி, மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரத்திற்கு லஞ்சம் கொடுக்கும் வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

    இந்நிலையில், தேனி மருத்துவக் கல்லூரி முதல்வர் மீனாட்சி சுந்தரம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    உணவக உரிமையாளரிடம் லஞ்சம் வாங்கிய புகாரில் மீனாட்சி சுந்தரம்மீது அமைச்சர் மா.சுப்பிரமணியன் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

    மேலும் மீனாட்சி சுந்தரம் மீது துறை ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டுள்ளார்.

    • பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.
    • பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி பகுதியில் அமைந்துள்ள வீர காளியம்மன் ஆடி மாத திருவிழாவை முன்னிட்டு இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது.

    போடி ஒன்றியத்திற்குட்பட்ட ராசிங்காபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த மாட்டு வண்டி பந்தயத்தில் 100-க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றனர்.

    பாரம்பரியமாக நடைபெற்று வரும் இந்த இரட்டை மாட்டு வண்டி பந்தயத்தில் இளம் சிட்டு, புள்ளிமான், தட்டான் சிட்டு, தேன் சிட்டு, பூஞ்சிட்டு, கரிச்சான் வகை பந்தய மாடுகள் பங்கேற்றன.

    பந்தயத்தில் வெற்றி பெற்ற பந்தய மாட்டு உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    இளஞ்சிட்டு வகை மாடுகளுக்கு ரூ.4000 முதல் பரிசாகவும் கோப்பை வழங்கப்பட்டது.

    பெரிய மாடு வகையான கரிச்சான் வகை மாடுகளுக்கு முதல் பரிசாக ரூ. 30000, 2-ம் பரிசாக ரூ. 25,000 3-ம் பரிசாக ரூ. 20,000 மற்றும் நினைவுக் கோப்பைகள் வழங்கப்பட்டது.

    தேனி மாவட்ட நாட்டு மாடுகள் நலச் சங்கம் சார்பாக நடைபெற்ற இந்த இரட்டை மாட்டு வண்டி எல்லை பந்தயத்தில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டி பந்தய வீரர்கள் மாடுகளுடன் பங்கேற்றனர்.

    • தனது நண்பருக்கு சொந்தமான வைக்கோல் சுற்றும் எந்திரத்தை சின்னவாய்க்கால் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
    • அதில் இருந்த பொருட்களை 3 பேரும் திருடிச் சென்றனர்.

    கம்பம்:

    கம்பத்தை சேர்ந்தவர் பரமன் (வயது55). இவர் வைக்கோல் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தனது நண்பருக்கு சொந்தமான வைக்கோல் சுற்றும் எந்திரத்தை சின்னவாய்க்கால் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.

    அதில் இருந்த பொருட்களை ஞானசேகரன் (45), சுல்தான் இப்ராகிம் (51), முகமது ரபீக் (51) ஆகிய 3 பேரும் திருடிச் சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து கம்பம் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    • சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.
    • சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    தேனி:

    தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே சுருளி அருவி பகுதியில் சுருளி சாரல் திருவிழா-2023 நடைபெறுவதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் ஆனந்த் முன்னிலையில் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா ஆய்வு மேற்கொண்டார்.

    சுருளி அருவி பகுதியில் சாரல் திருவிழா கடந்த காலங்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. கொரோனா நோய் தாக்கத்தினால் கடந்த 3 வருடங்களாக இந்த சாரல் திருவிழா நடைபெறவில்லை. பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் சாரல் திருவிழா நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியதன் அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை இணைந்து இந்த ஆண்டு சாரல் திருவிழாவினை சிறப்பாக கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

    சாரல் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து விரிவாக கள ஆய்வு மேற்கொண்ட மாவட்ட கலெக்டர் மேடை அமையுள்ள இடம் மற்றும் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை உள்ளாட்சி அமைப்பினர் விரைந்து சீர் செய்து கொடுக்க வேண்டும். வனத்துறையினர் தேவையான ஒத்துழைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். மேலும் மின்சாரம் மற்றும் சாலை வசதிகளை சரி செய்ய தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    முன்னதாக 13-வது உலக புலிகள் தின விழாவை கொண்டாடும் விதமாக சுருளி அருவி பகுதியில் கட்டப்பட்டுள்ள 2 சுற்றுச்சூழல் அங்காடிகளை மாவட்ட கலெக்டர் திறந்து வைத்தார். இந்த அங்காடியில் புலிகள் மற்றும் வனவிலங்குகளை காப்பது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான ஆடைகள் டி-ஷர்ட், கீ செயின்கள் மற்றும் துணி பைகள் போன்ற பொருட்கள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    பின்னர் சுருளி அருவிக்கு செல்லும் சாலை , சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வன அலுவலர் சமர்த்தா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் இந்துமதி, உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் பால்பாண்டி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் அண்ணாதுரை, கம்பம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் பாலாமணி கணேசன், வனசரகர் பிச்சைமணி, சுற்றுலா அலுவலர் (பொறுப்பு) பாஸ்கரன் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார்.
    • கடை வைத்ததில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டு மனமுடைந்தவர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார்.

    தேனி:

    தேனி அருகே அழகாபுரி அம்மாபட்டியை சேர்ந்தவர் சேகர் (வயது39). இவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவருக்கு பிரபா என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர்.

    ஓய்வு பெற்ற பணத்ைத வைத்து நண்பருடன் கடை நடத்தி வந்தார். அதில் நஷ்டம் ஏற்பட்டதால் குடும்பத்தில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த சேகர் வீட்டிலேயே தூக்கு போட்டு தற்கொைல செய்து கொண்டார். இது குறித்து அல்லிநகரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ஆண்டிபட்டி அருகே சிவலிங்கபட்டியை சேர்ந்தவர் பஞ்சராஜா மனைவி மலர்க்கொடி (44). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மலர்க்கொடிக்கு அடிக்கடி வயிற்று வலி ஏற்பட்டதால் பல்வேறு இடங்களில் சிகிச்சை பெற்று வந்தார்.

    ஆனால் குணமாகாததால் மனமுடைந்த அவர் அரளி விைதயை அரைத்து குடித்து மயங்கினார்.

    ஆண்டிப்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து ராஜதானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    • சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார்
    • அப்போது மாயன் தீ வைத்து மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேலபூசனூத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாயன் (வயது 70) என்பவ ருக்கும் முன்விரோதம் இருந்துவந்தது.

    சம்பத்தன்று தனது மோட்டார் சைக்கிளை தோட்டத்து வீட்டு அருகே நிறுத்தி விட்டு மாடு மேய்க்க சென்றார். அப்போது அங்கு வந்த மாயன் குணசேகரனின் மனைவியை திட்டி அங்கு இருந்த மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்து சென்று விட்டார்.

    இதில் மோட்டார் சைக்கிள் முழுவதும் எரிந்து நாசமானது. இது குறித்து வருசநாடு போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அந்த டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்.
    • கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

    தேனி:

    தேனி மாவட்டம் கண்டமனூர் டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் ெதாடர்ந்து தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனலட்சுமி அந்த டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்.

    அப்போது மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் விற்ப னையாளர் முத்தையாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.

    டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையில் மட்டுேம மதுபானங்கள் விற்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.

    • ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.
    • இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி மாவட்டம் போடி அருகே உள்ள சில்லமரத்துப்பட்டியை சேர்ந்தவர் ஜெயப்பிரகாஷ் (வயது40). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 மகன்கள் உள்ளனர்.

    ஜெயப்பிரகாஷ் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது நண்பர் தேவாரம் அருகில் உள்ள கிருஷ்ணம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி (36). இவர் கார்பெண்டர் வேலை பார்த்து வருகிறார். இருவரும் சேர்ந்து மது அருந்துவது வழக்கம். கருப்பசாமி நெருங்கிய நண்பராக இருந்ததால் அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

    கருப்பசாமிக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் ஜெயப்பிரகாஷ் குடும்பத்துக்கு பண உதவிகள் செய்து வந்துள்ளார். ஆனால் அந்த பணத்தை ஜெயப்பிரகாஷ் கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இதனிடையே கொடுத்த பணத்தை வாங்குவதற்காக ஜெயப்பிரகாஷ் வீட்டிற்கு அடிக்கடி வந்து அவரது மனைவியிடம் கருப்பசாமி பணம் கேட்டு வந்துள்ளார். இதனை அக்கம் பக்கத்தினர் பார்த்து ஜெயப்பிரகாசிடம் கூறவே இனிமேல் தனது வீட்டிற்கு வரவேண்டாம் என கருப்பசாமியிடம் கூறி உள்ளார்.

    அவரும் சம்மதம் தெரிவித்து விட்டு ஜெயப்பிரகாசுக்கு தெரியாமல் அவரது வீட்டிற்கு சென்று வந்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயப்பிரகாஷ் தனது நண்பனை கொலை செய்ய முடிவு செய்தார்.

    வழக்கம்போல் மது அருந்த வருமாறு கருப்பசாமியை அழைத்துள்ளார். அதன்படி அவர்கள் 2 பேரும் சேர்ந்து பொட்டிப்புரம் செல்லும் சாலையில் ஒண்டிவீரன் கோவில் அருகே மது குடித்தனர். கருப்பசாமிக்கு போதை தலைக்கேறியபோது தான் மறைத்து வைத்திருந்த மீன் வெட்டும் கத்தியால் அவரை சரமாரியாக வெட்டி கொன்றார். அதன்பின் ரத்தக்கறையுடன் போடி தாலுகா போலீஸ் நிலையத்துக்கு வந்து தான் கொலை செய்துவிட்டதாக கூறினார்.

    ஆனால் அவர் மீன் வியாபாரி என்பதால் அதனால் ரத்தக்கறை ஏற்பட்டிருக்கலாம் என நினைத்தும், போதையில் உளறுவதாக நினைத்தும் போலீசார் நம்ப மறுத்துவிட்டனர்.

    ஆனால் தான் கொலை செய்து விட்டேன் என கூறி அழுதுகொண்டே இருந்ததால் டி.எஸ்.பி. பெரியசாமி தலைமையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு சென்றனர். அங்கு இறந்து கிடந்த கருப்பசாமியின் உடலை மீட்டு போடி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை செய்ததை ஒத்துக்கொண்ட பிறகும் போலீசார் அலட்சியத்தால் இரவு முழுக்க போலீஸ் நிலையத்தில் இருந்து பின்னர் போலீசார் ஜெயப்பிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அம்மன் கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
    • கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை மாலைகள் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    கம்பம்:

    கம்பம் கவுமாரியம்மன் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி 2-வது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். குறிப்பாக அதிகளவில் பெண்கள் சூடம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

    கவுமாரியம்மன் கோவிலில் மஞ்சள் பொடி தூவி, எலுமிச்சை மாலைகள் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.

    • 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
    • வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார்.

    கம்பம்:

    மதுரை சகோதயா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பாக தேனி மேரிமாதா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.

    இதில் 15 அணிகள் கலந்து கொண்டன. 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.

    வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலப்பூ பூத்தது. இரவில் ஒருநாள் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூ தாமரை மலரைவிட பெரியஅளவில் உள்ளது.
    • இந்த அதிசய மலரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர்.

    கம்பம்:

    கம்பம் மணிநகரத்தை சேர்ந்தவர் மகேஸ்வரி. ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர் தனது வீட்டில் ஏராளமான பூச்செடிகள் வளர்த்து வருகிறார்.

    இதில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலப்பூ பூத்தது. இரவில் ஒருநாள் மட்டும் பூக்கும் இந்த அதிசய பூ தாமரை மலரைவிட பெரியஅளவில் உள்ளது. இரவில் பூத்து பகலில் வாடியது. இந்த அதிசய மலரை சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து சென்றனர். சிலர் சூடம் ஏற்றி வழிபட்டனர்.

    • புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை.
    • மேற்கூரை பகுதி இடிந்து விழுந்த போது அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி மலைக்கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    அரசரடி கிராமம் அமைந்துள்ள வனப்பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டு தற்போது புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசரடி கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பகுதி சேதமடைய தொடங்கி யது. ஆனால் புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதனால் பள்ளி கட்டிடம் நாளுக்கு நாள் அதிக அள வில் சேதமடைந்து வந்தது.

    மழை பெய்யும் நேரங்களில் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டதால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளை யின் போது குழந்தைகள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது வகுப்பறை கட்டிடத்தின் குறிப்பிட்ட அளவிலான மேற்கூரை பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    இருப்பினும் வனத்துறை யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை இதனால் கடந்த 2 நாட்களாக குழந்தைகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்ேபாது அரசரடி கிராமத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மரத்தடியில் அமரவும் முடியாமல் வகுப்பறைக்குள் செல்லவும் முடியாமல் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×