என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.
கம்பத்தில் வைக்கோல் சுற்றும் எந்திர உபகரணங்கள் திருட்டு
- தனது நண்பருக்கு சொந்தமான வைக்கோல் சுற்றும் எந்திரத்தை சின்னவாய்க்கால் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
- அதில் இருந்த பொருட்களை 3 பேரும் திருடிச் சென்றனர்.
கம்பம்:
கம்பத்தை சேர்ந்தவர் பரமன் (வயது55). இவர் வைக்கோல் வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தார். தனது நண்பருக்கு சொந்தமான வைக்கோல் சுற்றும் எந்திரத்தை சின்னவாய்க்கால் அருகே நிறுத்தி வைத்திருந்தார்.
அதில் இருந்த பொருட்களை ஞானசேகரன் (45), சுல்தான் இப்ராகிம் (51), முகமது ரபீக் (51) ஆகிய 3 பேரும் திருடிச் சென்றனர். அவர்களை மடக்கி பிடித்து கம்பம் வடக்கு போலீசில் ஒப்படைத்தார். அதன்பேரில் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.
Next Story






