

கம்பம்:
மதுரை சகோதயா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ் சார்பாக தேனி மேரிமாதா பப்ளிக் பள்ளியில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி நடைபெற்றது.
இதில் 15 அணிகள் கலந்து கொண்டன. 14 வயதுக்குட்பட்ட பிரிவிலும், 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும் கம்பம் சக்திவிநாயகர் பன்னாட்டு பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றனர்.
வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் அச்சுதநாகசுந்தர் பாராட்டு தெரிவித்து பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.