என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The roof collapsed"

    • புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை.
    • மேற்கூரை பகுதி இடிந்து விழுந்த போது அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    வருசநாடு:

    தேனி மாவட்டம் வருசநாடு அருகே மேகமலை ஊராட்சிக்கு உட்பட்ட அரசரடி மலைக்கிராமத்தில் அரசு ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள் படித்து வருகின்றனர்.

    அரசரடி கிராமம் அமைந்துள்ள வனப்பகுதி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றப்பட்டு தற்போது புலிகள் சரணாலயமாக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசரடி கிராமத்தில் செயல்பட்டு வரும் பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை பகுதி சேதமடைய தொடங்கி யது. ஆனால் புலிகள் சரணாலய பகுதியில் அமைந்துள்ளதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் அனுமதி தரவில்லை. இதனால் பள்ளி கட்டிடம் நாளுக்கு நாள் அதிக அள வில் சேதமடைந்து வந்தது.

    மழை பெய்யும் நேரங்களில் மேற்கூரை வழியாக நீர்க்கசிவு ஏற்பட்டதால் குழந்தைகளின் கல்வி பாதிப்படைந்து வந்தது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு மதிய உணவு இடைவேளை யின் போது குழந்தைகள் அனைவரும் பள்ளி வளாகத்தில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த னர்.

    அப்போது வகுப்பறை கட்டிடத்தின் குறிப்பிட்ட அளவிலான மேற்கூரை பகுதி இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக வகுப்பறைக்குள் எந்த குழந்தையும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இது தொடர்பாக போலீஸ் மற்றும் கல்வி அதிகாரிகள் நேரில் சென்று பார்வை யிட்டனர்.

    இருப்பினும் வனத்துறை யினர் தொடர்ந்து அனுமதி மறுத்து வருவதால் பள்ளி கட்டிடத்தில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள முடியவில்லை இதனால் கடந்த 2 நாட்களாக குழந்தைகள் மரத்தடியில் அமர வைக்கப்பட்டு ஆசிரியர்கள் பாடங்கள் நடத்தி வருகின்றனர்.

    தற்ேபாது அரசரடி கிராமத்தில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. எனவே மழை பெய்யும் நேரங்களில் மரத்தடியில் அமரவும் முடியாமல் வகுப்பறைக்குள் செல்லவும் முடியாமல் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.

    மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து வனத்துறையினருடன் பேச்சுவார்த்தை நடத்தி அரசு பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையெனில் பள்ளி குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்திற்கு நேரில் சென்று மனு அளிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

    ×