என் மலர்
நீங்கள் தேடியது "Tasmac employee suspended"
- தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் அந்த டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்.
- கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.
தேனி:
தேனி மாவட்டம் கண்டமனூர் டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்ததை விட பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாக விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனைத் ெதாடர்ந்து தேனி டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தனலட்சுமி அந்த டாஸ்மாக் கடையில் திடீர் சோதனை நடத்தினார்.
அப்போது மதுபாட்டிலுக்கு கூடுதலாக ரூ.10 வாங்குவது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து டாஸ்மாக் விற்ப னையாளர் முத்தையாவை சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
டாஸ்மாக் கடைகளில் அரசு நிர்ணயம் செய்த விலையில் மட்டுேம மதுபானங்கள் விற்க வேண்டும். கூடுதல் விலைக்கு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார்.






