என் மலர்

    நீங்கள் தேடியது "2 people sucide"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார். இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    போடி அருகே தர்மத்துப்பட்டியை சேர்ந்தவர் சுப்பையா மனைவி குள்ளம்மாள் (வயது90). இவர் உறவினர் பராமரிப்பில் இருந்து வந்தார். கடந்த சில நாட்களாக மன நிலை சரியில்லாமல் இருந்து வந்தார்.

    இந்த நிலையில் திடீரென தனது உடலில் தீ வைத்துக் கொண்டார். படுகாயங்களுடன் போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவர், முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

    இது குறித்து போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    தேவதானப்பட்டி அருகே செங்குளத்துப்பட்டியை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் விஜயபிரகாஷ் (20). இவர் வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றித்திரிந்துள்ளார். அதனை அவரது தாய் தட்டிக்கேட்டதால் வேதனை அடைந்த விஜயபிரகாஷ் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இது குறித்து தேவதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • கூலித் தொழிலாளிக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.
    • ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள ஆத்துபொள்ளாச்சியை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது 30).

    கூலித் தொழிலாளி. இவருக்கு கடந்த 1 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ரமேஷ்குமார் தினசரி மது குடித்து விட்டு வந்தார். இதனை அவரது மனைவி கண்டித்தார். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனையடுத்து ரமேஷ்குமாரிடம் கோபித்துக்கொண்டு அவரது மனைவி பெற்றோர் வீட்டிற்கு சென்றார்.மனைவி பிரிந்து சென்றதால் மிகுந்த மனவேதனை அடைந்த ரமேஷ்குமார் வாழ்க்கையில் விரக்தி அடைந்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    துடியலூர் அருகே உள்ள அசோகாபுரத்தை சேர்ந்தவர் தினேஷ்பாபு (வயது 35). ரெடிமேட் சப்பாத்தி விற்பனை செய்யும் தொழில் செய்து வந்தார். இவர் தொழில் தேவைக்காக தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். ஆனால் தொழிலில் போதிய வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வந்தார். இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினேஷ்பாபு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து துடியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×