என் மலர்
சிவகங்கை
ஊரடங்கு உத்தரவு காரணமாக இளையான்குடி பகுதியில் மிளகாய் விவசாயம் பாதிப்படைந்துள்ளது. அறுவடையான மிளகாயை விற்பனை செய்ய கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இளையான்குடி:
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள ஊர்கள் வறண்ட பகுதி ஆகும். இந்த நிலையில் கோடைக்கால பயிராக விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் தங்களது நிலங்களில் மிளகாய் பயிரிட்டனர்.
சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்தும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்தும் மிளகாய் வியாபாரிகள் இங்கு நேரடியாக வந்து விவசாயிகளிடம் மொத்த விலைக்கு மிளகாய்களை கொள்முதல் செய்வது வழக்கம். இவ்வாறு இளையான்குடி, சாலைக்கிராமம், சூராணம், கண்ணமங்கலம், தாயமங்கலம் ஆகிய பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மிளகாய் பயிரிட்டு தற்போது அறுவடைக்கு தயாராக உள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பித்த நிலையில் அறுவடை செய்ய முடியாமல் விவசாயிகள் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் மிளகாய் செடியிலேயே அழுகி வருகிறது. இதுதவிர பறித்த மிளகாய்களை சில விவசாயிகள் வத்தலாக மாற்றுவதற்காக காய வைத்து பக்குவப்படுத்தினாலும், அவற்றை விற்பனைக்கு அனுப்ப முடியாமல் தவித்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மிளகாய் விவசாயிகள் சிலர் கூறியதாவது:-
தற்போது ஊரடங்கு காரணமாக மிளகாயை நல்ல விலைக்கு விற்பனை செய்ய முடியாமல் மன வேதனையில் உள்ளோம். இளையான்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதியில் கடந்த ஆண்டு பெய்த நல்ல மழையால் அப்போது மிளகாய் பயிர் தண்ணீரில் மூழ்கி அழிந்து விட்டது. இந்த முறை பயிரிடப்பட்ட மிளகாய், அறுவடைக்கு தயாராக இருந்த வேளையில் ஊரடங்கினால் பறிக்காமல் விடப்பட்டு அழுகி வருகிறது.
ஆண்டுதோறும் வரும் வெளிமாவட்ட வியாபாரிகள் தற்போது மிளகாய் வாங்க வரவில்லை. இதனால் விற்பனைக்காக பறித்து வைக்கப்பட்ட மிளகாய்களை காய வைக்கும் வேலையில் ஈடுபட்டு உள்ளோம். இந்த மிளகாய் விவசாயத்தை நம்பி இப்பகுதி விவசாயிகள் ஆயிரக்கணக்கில் கடன் பெற்று அதனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் உள்ளோம்.
பொதுவாக இந்த பகுதியில் விளையும் நெல்லுக்கு விலை நிர்ணயிக்க அரசு கொள்முதல் நிலையம் அமைத்தது போன்று மிளகாய்க்கும் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும். அப்போது தான் இவ்வாறு கஷ்டமான கால கட்டத்தில் மிளகாய் பயிரிட்ட விவசாயிகள் நஷ்டத்தை சந்திக்க வேண்டிய நிலை இருக்காது. எனவே இந்த பகுதியில் மிளகாய்க்கு அரசு கொள்முதல் நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

மானாமதுரை அருகே ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அந்த வீட்டை சாராய கடையாக மாற்றிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
மானாமதுரை:
ஊரடங்கு காரணமாக அனைத்து டாஸ்மாக் கடைகளும் பூட்டி கிடக்கின்றன. இந்தநிலையில் திருட்டுத்தனமாக சாராயம் காய்ச்சி விற்கப்படும் நிகழ்வுகளும் நடக்கின்றன. இதை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை பகுதிகளில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, சப்-இன்ஸ்பெக்டர் மாரிகண்ணன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது அன்னவாசல் புதூர் செல்லும் ரோட்டில் ஆள் இல்லாமல் பூட்டப்பட்டிருந்த ஒரு வீட்டில் மர்மமான முறையில் சிலரது நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அந்த வீட்டில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது அந்த வீட்டின் உள்ளே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சாராயம், சாராய ஊறல்கள் மற்றும் சாராயம் காய்ச்சுவதற்கான பொருட்களை கைப்பற்றி அழித்தனர்.
விசாரணையில் அந்த வீட்டை சேர்ந்தவர்கள் வெளியூரில் வசிப்பதும், எப்போதாவதுதான் வந்து செல்வதும் தெரியவந்தது. எனவே ஆள் இல்லாத வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்து அந்த வீட்டை சாராய கடையாக மாற்றியதுடன், அங்கு சாராயம் காய்ச்சியதும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதுதொடர்பாக கிளாங்காட்டூர் கிராமத்தை சேர்ந்த தவமணி, நாகேஸ்வரன், கார்த்திக், ராஜேஷ் ஆகிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட இந்த 4 பேரும் பட்டதாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

ராமநாதபுரம்-சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த கிராம கோவில்கள் பூசாரிகள் கொரோனா நிவாரண தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது.
சிவகங்கை:
இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வரும் கிராமக்கோவில் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகளுக்கு தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா வைரஸ் நிவாரண உதவித் தொகை ரூ.1,000 வழங்கப்படவுள்ளது. இந்த நிவாரணத் தொகை பூசாரிகளின் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும்.
இதற்கு பரமக்குடி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அலுவலகத்தில் கிராமக்கோவில் பூசாரிகள் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள பூசாரிகள் உடனடியாக பெயர், கைப்பேசி தொலைபேசி எண், வங்கி கணக்குப் புத்தகத்தின் முதல்பக்க விபரம், அடையாள அட்டை விவரம் ஆகியவற்றை சிவகங்கை, மானாமதுரை, காளையார்கோவில், திருப்புவனம் வட்டத்தில் உள்ளவர்கள் 94436 48434 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும், திருப்பத்தூர் வட்டத்தில் உள்ளவர்கள் 98426 37751 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும், சிங்கம்புணரி வட்டத்தில் உள்ளவர்கள் 96291 35822 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும், காரைக்குடி வட்டத்தில் உள்ளவர்கள் 9677757520 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.
அதே போன்று தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் வட்டத்தில் உள்ளவர்கள் 94454 40013 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும், பரமக் குடி, இளையான்குடி, கடலாடி, முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ளவர்கள் 90879 72180 என்ற வாட்ஸ் அப் மூலமாகவும், ராம நாதபுரம், ராமேஸ்வரம், கீழக்கரை வட்டத்தில் உள்ளவர்கள் 99425 65677 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும், கமுதி வட்டத்தில் உள்ளவர்கள் 9976903966 என்ற வாட்ஸ்அப் மூலமாகவும் அனுப்ப வேண்டும்.
இது தொடர்பாக உதவி ஆணையர் அலுவலகத்திற்கு நேரில் வரத் தேவையில்லை என பரமக்குடி இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.

தேவகோட்டை அருகே ஊஞ்சல் கட்டிய தூண் சாய்ந்து விழுந்த விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தேவகோட்டை:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரில் பழமை வாய்ந்த செல்லப்பச்செட்டியார் பிள்ளையார் கோவில் உள்ளது.
கோவில் தென்புறத்தில் கோவில் காவலாளி காளிமுத்தன் வசித்து வருகிறார். நேற்று மாலையில் அவரது மனைவி செல்வி (50) வீட்டில் இருந்த தூணிலும் அருகில் உள்ள வேப்ப மர கிளையிலும் கட்டப்பட்டிருந்த ஊஞ்சலில் படுத்திருந்தார்.
அப்போது பேரன் யுவன்ராஜ்(6) வெளியில் விளையாடி விட்டு வேகமாக வந்து பாட்டியின் மடியில் படுத்தான். பழமை வாய்ந்த கட்டிட தூண் என்பதால் பாரம் தாங்காமல் ஊஞ்சல் சாய்ந்தது.
படுகாயம் அடைந்த இருவரும் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு சிகிச்சை பலனின்றி யுவன்ராஜ் இறந்தான். செல்விக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் ஆபத்தான நிலையில் சிவகங்கை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு அதன்மூலம் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட ஏற்கனவே வணிகர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 14.4.2020 வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 144 தடைக்காலம் 3.5.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் 14.4.2020 வரையிலான காலத்திற்கு பெறப்பட்ட அனுமதிக் கடிதத்தை 3.5.2020 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக மீண்டும் அதேநபர்கள் தனியே அனுமதி பெறத் தேவையில்லை.
மேலும், பொதுமக்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசு அலுவலகப் பணியாளர்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி கலெக்டரிடம் அனுமதி பெற வருபவர்கள் விண்ணப்ப படிவம் கொண்டு வரத் தேவையில்லை. கலெக்டர் அலுவலகத்தில் 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு அதன்மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு பச்சைக்கலர் படிவம் அனுமதிச்சான்றும், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சிவப்புக்கலர் படிவம் அனுமதிச்சான்றும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நீலநிற படிவம் அனுமதிச்சான்றும் கலெக்டரிடம் கையொப்பம் பெற்று வழங்கப்படுகிறது. அதைப் பெற்று செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்டத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாகவே கடந்த சில வாரங்களாக வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு காரைக்குடி, தேவகோட்டை, திருப்பத்தூர், சிங்கம்புணரி, கல்லல், காளையார்கோவில், சிவகங்கை, திருப்புவனம் ஆகிய பகுதியில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதையடுத்து மின்சாரம் நிறுத்தப்பட்டு மழை முடிந்தவுடன் மீண்டும் வழங்கப்பட்டது.
சிவகங்கையில் லேசான மழையும், திருப்பத்தூரில் சுமார் 1½ மணி நேரமும், தேவகோட்டை மற்றும் காளையார்கோவில் பகுதியில் ½ மணி நேரமும், சிங்கம்புணரி, எஸ்.புதூர் பகுதியில் ஒரு மணி நேரமும் மழை பெய்தது. திருப்புவனத்தில் நேற்று முன்தினம் இரவு அரை மணி நேரமும், நேற்று அதிகாலை அரை மணி நேரமும் மழை பெய்தது. மானாமதுரை மற்றும் இளையான்குடி பகுதியில் மழை பெய்யவில்லை. நேற்று முன்தினம் இரவு சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெய்த பலத்த மழை காரணமாக நேற்று பகலில் குளுமையாக காணப்பட்டது. இதேபோல் இரவும் குளுமையான நிலை இருந்ததால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
நேற்று முன்தினம் சிவகங்கை மாவட்டத்தில் பெய்த மழையின் அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
காரைக்குடி-87, சிங்கம்புணரி-59, திருப்பத்தூர்-50, திருப்புவனம்-30.2, தேவகோட்டை-18.4, காளையார்கோவில்-10.2, சிவகங்கை-4. இதில் அதிகபட்சமாக காரைக்குடி பகுதியில் 87 மில்லி மீட்டரும், குறைந்த பட்சமாக சிவகங்கையில் 4 மில்லி மீட்டரும் மழை பதிவாகி இருந்தது.
கொரோனா பரவுவதை தடுக்கும் பொருட்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் வீட்டு உபயோக பொருட்கள் கடைகள் ஒரு மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் பிரதமரால் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டும் தமிழக அரசால் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் உத்தரவுகளின் பேரில் அத்தியாவசியப்பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திட காலை 6.மணி முதல் 9.மணி வரை காய்கறி கடைகள் செயல்படவும் 1.மணி வரை இதர அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைத்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் சிவகங்கை மாவட்டத்தில் நீர்ப்பாசன வசதியுடன் பயிர்சாகுபடி செய்து வரும் விவசாயிகள் நலனுக்காக மின்சாதன கடைகள், பாசன நீர்க்குழாய்கள் விற்பனை நிறுவனம், ஹார்டுவேர் நிறுவனங்கள் மின்மோட்டார் பழுது நீக்கும் பட்டறைகள் ஆகியவை செயல்பட ஏற்கனவே அனுமதித்து ஆணையிடப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அன்றாடம் உபயோகப்படுத்தும் வீட்டு மின்சாதனங்கள் (மின் விசிறி, மிக்ஸி, கிரைண்டர், டிவி, செல்போன் உள்பட) பழுதுநீக்கும் கடைகள் பகல் 1.மணி வரை செயல்படவும் பொதுமக்கள் நலன் கருதி அனுமதி வழங்கப்படுகிறது. அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளி பின்பற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கால்நடை தீவன கடைகள் திறக்கலாம் என்று கலெக்டர் ஜெயகாந்தன் உத்தரவிட்டுள்ளார்.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சிவகங்கை மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தீவனங்கள் பற்றாக்குறை இல்லாதவாறு அன்றாடம் தீவனம் கிடைக்கச் செய்திட ஏதுவாக மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தீவன விற்பனை கடைகளை மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்டுள்ள நேரங்களில் திறந்து வைத்து கால்நடை வளர்ப்போருக்கு விற்பனை செய்ய அனைத்து தீவன விற்பனை கடை வியாபாரிகளுக்கு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், கறவை மாடுகள் மற்றும் கோழிகளுக்கு தீவனங்கள் இத் தருணத்தில் தீவனப் பற்றாக்குறை ஏற்படாத வகையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அன்றாடம் விற்பனை செய்து வரும் மருந்துகள் மற்றும் பால் போன்ற கடைகளை போல் தீவனங்கள் விற்பனை கடைகளையும் திறந்து விற்பனை செய்து, பால் உற்பத்தி குறையாமல் கால்நடைகளுக்கு தீவனங்கள் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பிற மாவட்டங்களுக்கு செல்ல கலெக்டரிடம் அனுமதி பெறலாம் என்று சிவகங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
சிவகங்கை,
கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதையொட்டி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொதுமக்களின் நலன்கருதி சிவகங்கை மாவட்டத்திற்குள் மருத்துவம், இறப்பு மற்றும் முன்பே நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் போன்ற அத்தியாவசிய காரணங்களுக்காக அவசர பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து அனுமதி பெற்றுக்கொள்ளலாம்.
மேலும் பிறமாவட்டங்களுக்கு அத்தியாவசிய காரணங்களுக்காக அவசர பயணம் மேற்கொள்ளும் பொதுமக்கள் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து மாவட்ட கலெக்டரிடம் அனுமதி பெற்றுச்செல்லாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் கொரோனா சிகிச்சை பெற்று வருவோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.
காரைக்குடி:
காரைக்குடி அருகே அமராவதிபுதூர் பகுதியில் கொரோனா அறிகுறி உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த வார்டுகளில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்த வார்டுக்கு காரைக்குடி வெற்றி லயன்ஸ் சங்கம் மற்றும் மதுரை லயன்ஸ் சங்கம் சார்பில் 200 போர்வைகள், 100 முக கவசம் மற்றும் கையுறைகள் உள்ளிட்டவைகள் சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் லயன்ஸ் சங்க தலைவர் துரைசிங்கம், முன்னாள் வட்டார தலைவர் மருதப்பன், பொருளாளர் மணிகண்டன், செல்லையா, அமராவதிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுப்பையா, செயலர் அண்ணாமலை மற்றும் பூங்கோதை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

வெளிநாட்டில் இருந்து வந்து வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்கும் வகையில் புதிதாக உருவாக்கப்பட்ட செயலியை அமைச்சர் பாஸ்கரன் தொடங்கி வைத்தார்
சிவகங்கை:
கொரோனா நோய்தொற்று தடுப்பு நடவடிக்கையாக அரசு 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வணிகர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்சனைகளை சரி செய்வது குறித்த ஆலோசனை கூட்டம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜெயகாந்தன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் ராஜகோபால், மானாமதுரை தொகுதி எம்.எல்.ஏ. நாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் அமைச்சர் பாஸ்கரன் கலந்துகொண்டு, வெளிநாட்டிலிருந்து வந்து வீட்டில் தனிமைபடுத்தப்பட்டவர்கள், வெளியே செல்லாமல் இருப்பதை கண்காணிக்க சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு புதிதாக உருவாக்கிய செயலியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அமைச்சர் பேசியதாவது:-
தற்போது கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது. அரசு நடவடிக்கைகளுக்கு வணிகர்களும் ஒத்துழைப்பு தந்தால்தான் இந்த நோயை கட்டுப்படுத்த முடியும். வணிகர்கள் சரக்குகளை கடைகளில் வாங்கி வாகனங்களில் ஏற்றி கொண்டு வர துணை போலீஸ் சூப்பிரண்டிடம் அனுமதி பெற்று கொண்டு வரலாம்.
பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களான பால், இறைச்சி, மீன், மளிகை பொருட்கள், மருந்தகங்கள், ஓட்டல்களில் பார்சல் உணவு, காய்கறிகள் உள்ளிட்டவை வழங்க கடைகள் வழக்கம்போல் செயல்பட தடை இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சிவகங்கை மாவட்ட வருவாய் அதிகாரி லதா, மருத்துவ கல்லூரி டீன் ரெத்தினவேல், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் மங்களேஸ்வரன், முரளிதரன், உதவி போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணசாகர், மருத்துவத்துறை இணை இயக்குனர் இளங்கோ மகேஸ்வரன், சுகாதாரத்துறை துணை இயக்குனர் யசோதாமணி, மருத்துவ கல்லூரி மருத்துவ அலுவலர் மீனா, மகளிர் திட்ட அலுவலர் அருண்மணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வடிவேல், ஊராட்சிகள் உதவி இயக்குனர் விஜயநாதன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் ராஜா மற்றும் வர்த்தகர் சங்க பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரோனா வைரஸ் தாக்குதல் எதிரொலியாக போலீசாருக்கு வழங்க முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
சிவகங்கை:
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கி பல ஆயிரம் பொதுமக்கள் பலியாகி வருகின்றனர். முதலில் சீனா நாட்டில் பரவிய இந்த வைரஸ் அதன் பின்னர் உலகம் முழுவதும் தற்போது வேகமாக பரவி வருகிறது. இதற்கு அடுத்தப்படியாக இத்தாலி நாட்டில் இந்த வைரஸ் தாக்கி ஆயிரக்கணக்கான மக்கள் இறந்து வருகின்றனர்.
இந்தநிலையில் இந்தியாவிலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து இதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் தொடர்ந்து 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதையடுத்து கடைகள் அடைக்கப்பட்டு, பஸ்கள், ரெயில்களின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இந்தநிலையில் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்கான கடைகள் மற்றும் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவினால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அதையும் சிலர் மீறி பகல் நேரங்களில் சாலைகளில் சுற்றித்திரிகின்றனர். இதை தடுக்கும் வகையில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று மாவட்டத்தில் காரைக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வாகனங்களில் சாலைகளில் சுற்றித்திரிவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாக காணப்பட்டது. இதையடுத்து இவர்களை போலீசார் வழமறித்து நூதன முறையில் தண்டனை கொடுத்தும், சில இளைஞர்கள் கேட்பதாக இல்லை. இதையடுத்து அவர்களை போலீசார் வழிமறித்து சில ஆலோசனைகளை செய்து வருகின்றனர்.
இனியும் இதேபோல் செய்தால் கடும் தண்டனை வழங்கப்படும் என எச்சரித்தனர். இதுதவிர மாவட்டத்தில் ஏராளமான போலீசார் தற்போது இரவு பகலாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்காமல் இருப்பதற்காக முக கவசம் வழங்கப்பட்டு வருகிறது.
போதிய அளவில் அவர்களுக்கு முககவசம் இல்லாததால் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் ஆயுதப்படை பெண் போலீசார் மூலம் முககவசம் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.