என் மலர்
செய்திகள்

கலெக்டர் ஜெயகாந்தன்
அத்தியாவசிய பயணங்களுக்கு 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம்- கலெக்டர் தகவல்
சிவகங்கை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகத்தில் 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு அதன்மூலம் பயணங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.
சிவகங்கை:
சிவகங்கை மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன் செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்குதடையின்றி கிடைத்திட ஏற்கனவே வணிகர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மூலம் 14.4.2020 வரை அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது 144 தடைக்காலம் 3.5.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் கலெக்டர் அலுவலகத்தில் 14.4.2020 வரையிலான காலத்திற்கு பெறப்பட்ட அனுமதிக் கடிதத்தை 3.5.2020 வரை பயன்படுத்திக் கொள்ளலாம். இதற்காக மீண்டும் அதேநபர்கள் தனியே அனுமதி பெறத் தேவையில்லை.
மேலும், பொதுமக்கள், தனியார் நிறுவனப் பணியாளர்கள், அரசு அலுவலகப் பணியாளர்கள் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பயணங்கள் மேற்கொள்ள வேண்டி கலெக்டரிடம் அனுமதி பெற வருபவர்கள் விண்ணப்ப படிவம் கொண்டு வரத் தேவையில்லை. கலெக்டர் அலுவலகத்தில் 3 வண்ணங்களில் விண்ணப்ப படிவம் அச்சடிக்கப்பட்டு அதன்மூலம் அனுமதி வழங்கப்படுகிறது.
பொதுமக்களுக்கு பச்சைக்கலர் படிவம் அனுமதிச்சான்றும், தனியார் நிறுவன பணியாளர்களுக்கு சிவப்புக்கலர் படிவம் அனுமதிச்சான்றும், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு நீலநிற படிவம் அனுமதிச்சான்றும் கலெக்டரிடம் கையொப்பம் பெற்று வழங்கப்படுகிறது. அதைப் பெற்று செல்லலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story