என் மலர்
சேலம்
- அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- அணையில் தற்போது 92.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்தாண்டு அணை 5 முறை நிரம்பியது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அணைக்கு நீர்வரத்தை விட அதிகளவில் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 119.66 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6 ஆயிரத்து 871 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 92.91 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அணைக்கு தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
கர்நாடகாவில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக வினாடிக்கு 90 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து குறைந்ததால் நீர்திறப்பும் குறைக்கப்பட்டு வருகிறது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 19 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அணையில் இருந்து காவிரி ஆற்றில் நீர்மின் நிலையம் மற்றும் 16 கண் மதகு வழியாக தண்ணீர் திறப்பு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
- அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இந்தாண்டில் 5-வது முறையாக அணை நிரம்பியது. இதையடுத்து உபரிநீர் அதிகளவில் 16 கண் மதகு வழியாக காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வந்தது. அதிகபட்சமாக 90 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில் நீர்வரத்து குறைந்ததால் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் அளவும் படிப்படியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக நீடித்தது. அணைக்கு வினாடிக்கு 30 ஆயிரத்து 850 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 23 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 850 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் வினாடிக்கு 56 ஆயிரத்து 997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
- அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து இந்தாண்டில் 5-வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரிநீர் 16 கண் மதகு வழியாக திறக்கப்பட்டது. அதிகபட்சமாக சுமார் 90 ஆயிரம் கனஅடி வரை திறக்கப்பட்டதால் காவிரிஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் வினாடிக்கு 56 ஆயிரத்து 997 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதையடுத்து அணையில் இருந்து இன்று காலை 10 மணி முதல் 16 கண் மதகு வழியாக திறந்து விடப்பட்ட தண்ணீர் வினாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது.
மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 750 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
- 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி களில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே பெய்ய தொடங்கியது. இதன் காரணமாக நீர்வரத்து அதிகரித்து அங்குள்ள கிருஷ்ணராஜ சாகர், கபினி அணைகள் நிரம்பியது.
இதையடுத்து இந்த அணைகளில் இருந்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதன் காரணமாக இந்தாண்டில் முதல் முறையாக ஜுன் மாதம் 29-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது.
பின்னர் மழையின் தீவிரத்தை பொறுத்து அணைக்கு நீர்வரத்து அதிகரித்தும், குறைந்தும் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. ஆனாலும் தொடர்ந்து டெல்டா பாசனத்துக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
இதன் அடிப்படையில் மேட்டூர் அணை இந்தாண்டில் 2-வது முறையாக ஜூலை 5-ந்தேதியும், 3-வது முறையாக ஜூலை 20-ந்தேதியும் 4-வது முறையாக ஜூலை 26 ஆம் தேதியும் நிரம்பியது.
இந்நிலையில், ஒகேனக்கல் காவேரி தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக இன்று காலை நடப்பாண்டில் 5-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது.
இதையடுத்து உடனடியாக பாதுகாப்பு கருதி அணையில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 90 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
- தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர்:
கர்நாடகாவில் மழை தீவிரம் அடைந்து உள்ளதால் அங்குள்ள கிருஷ்ணராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. 2 அணைகளில் இருந்து மொத்தம் 95ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு உள்ளது. எனவே அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு விரைவில் வர தொடங்கி அணை மீண்டும் இந்த ஆண்டில் 5-வது முறையாக நிரம்பும் வாய்ப்பு உள்ளது.
இதையடுத்து உபரிநீர் எந்த நேரத்திலும் மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் 50ஆயிரம் கனஅடி முதல் 70ஆயிரம் கனஅடி வரை திறந்து விடப்படலாம். இதுதொடர்பாக நீர்வளத்துறை சார்பில் காவிரி கரையோரம் உள்ள சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், நாகை உள்பட 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
மேட்டூர் அணையின் உபரிநீர் போக்கி எதிரே உள்ள தங்கமாபுரி பட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர், சேலம் கேம்ப் பகுதியில் வருவாய் துறையினர் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
- தற்போது அணையில் 89.63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 117.56 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 6 ஆயிரத்து 223 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் அது இன்று வினாடிக்கு 7 ஆயிரத்து 382 கனஅடியாக அதிகரித்து காணப்படுகிறது.
அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 22 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 89.63 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- நெத்திமேடு துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சேலம்:
சேலம் நெத்திமேடு துணை மின் நிலையத்தில் நாளை (18-ந் தேதி) பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நெத்திமேடு, அன்னதானப்பட்டி, செவ்வாய்ப்பேட்டை, சத்திரம், அரிசிபாளையம், 4 ரோடு, குகை, லைன்மேடு, தாதகாப்பட்டி, தாசநாயக்கன்பட்டி, கொண்டலாம்பட்டி,
நெய்க்காரப்பட்டி, உத்தமசோழபுரம், பூலாவரி, சூரமங்கலம், மெய்யனூர், சின்னேரிவயல், பள்ளப்பட்டி, சாமிநாதபுரம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் பாரதி தெரிவித்தார்.
- போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
- போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டிர்களா இபிஎஸ்?.
சேலத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (CPI) 'தமிழ்நாடு 26வது மாநில மாநாடு' நடந்து வருகிறது. "வெல்க ஜனநாயகம்" என தலைப்பிடப்பட்ட இந்த மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்றார். இதில் சிபிஐ முன்னாள் மாநில தலைவர் முத்தரசன், இந்தநாள் தலைவர் சண்முகம் உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஸ்டாலின், கருப்பும் சிவப்பும் சேர்ந்ததுதான் திராவிடர் கழகம். எங்களில் பாதி நீங்கள். கொள்கை முரண்கள் எதிரிகளுக்கு சாதகமாக அமைந்துவிடக்கூடாது.
சமூகத்திற்கு தேவையான நமது கொள்கை வலுவாக இருப்பதால் தான் நமது நட்பும் வலுவாக இருக்கிறது. சேலத்தில் தியாகிகளுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும். அதன் பணிகள் நாளையே தொடங்கப்படும். முத்தரசன் வைத்த கோரிக்கையை தட்டிக்கழிக்க முடியுமா!..
நாடு கடுமையான சூழலை எதிர்கொண்டு வரும் தருணத்தில் நாம் கொள்கை உறவோடு சேர்ந்திருக்கிறோம். சதி செய்தாலும் போலி செய்திகளை பரப்பினாலும் நாம் ஒற்றுமையாய் இருப்பதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. குறிப்பாக எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கம்யூனிஸ்டுகள் மீது திடீர் பாசம் வந்துள்ளது.
கம்யூனிஸ்டுகளை விட நீங்கள் பெரிய தியாகம் செய்து விட்டீர்களா, எழுச்சித்தமிழர் திருமாவை விட நீங்கள் பெரிய தியாகம் செய்துவிட்டீர்களா இபிஎஸ்?.
அடிமைத்தனத்தை பற்றி எடப்பாடி பேசலாமா? அவருக்கு பேச என்ன உரிமை உள்ளது. திராவிட, கம்யூனிஸ்ட் கொள்கைகளை பற்றி தெரியாத இபிஎஸ் வாய்க்கு வந்தததை பேசி வருகிறார். ரெய்டு மூலம் நம்மை மிரட்ட நினைத்தவர்கள் தற்போது மிரண்டு போயிருக்கின்றனர்.
எப்படியாவது கூட்டணியை கலைத்துவிட வேண்டும் என எதிர்க்கட்சிகள் முயற்சித்து வருகின்றன. ஆனால் நமது லட்சியம் பெரிது. அதற்காகத்தான் நாம் அனைவரும் ஒன்றாகி இருக்கிறோம். கூட்டணியில் இருந்தாலும் விமர்சனங்களை முன்வைக்க கம்யூனிஸ்டுகள் ஒருபோதும் தவறியதில்லை" என்று தெரிவித்தார்.
- கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
- தற்போது அணையில் 91.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர்:
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 118.63 அடியாக இருந்தது. அணைக்கு நேற்று வினாடிக்கு 8 ஆயிரத்து 776 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்த நிலையில் இன்று நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 288 கனஅடியாக அதிகரித்து வருகிறது.
மேலும் காவிரி டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 500 கனஅடி தண்ணீரும் திறக்கப்பட்டு வருகிறது. தற்போது அணையில் 91.30 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
- ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கனமழை.
- மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்று மாலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கன மழை பெய்தது.
குறிப்பாக சேலம் கிழக்கு மாவட்ட பகுதிகளான வாழப்பாடி, ஏத்தாப்பூர், வீரகனூர், கரியகோவில் உள்பட பல பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை கொட்டியது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகள் மற்றும் வயல்வெளிகளில் தண்ணீர் தேங்கியது. மழையை தொடர்ந்து மாவட்டம் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது.
ஏற்காட்டில் நேற்று பெய்த சாரல் மழையால் அங்கு குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதனால் அங்கு ரம்மியமான சூழல் நிலவியதால் அங்கு வசிக்கும் பொது மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர்.
சேலம் மாநகரில் நேற்றிரவு 7 மணியளவில் தொடங்கிய மழை சாரல் மழையாக அரை மணி நேரம் பெய்தது . மழையை தொடர்ந்து சேலம் மாநகரிலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது. மாவட்டத்தில் அதிக பட்சமாக வாழப்பாடியில் 28 மி.மீ. மழை பதிவாகி உள்ளது. சேலம் மாநகர் 8.4, ஏற்காடு 12.8, வாழப்பாடி 28, ஆனைமடுவு 17, ஆத்தூர்11.6, கெங்கவல்லி 10, தம்மம்பட்டி 15, ஏத்தாப்பூர் 27, கரியகோவில் 22, வீரகனூர் 20, நத்தக்கரை 15, ஓமலூர் 1.5, டேனீ ஷ்பேட்டை 1 மி.மீ. என மாவட்டம் முழுவதும் 189.80 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.
- தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
- 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூரில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* விவசாய தொழிலாளர்களுக்கும் நன்மை பயக்கும் திட்டத்தை அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியது.
* எம்.ஜி.ஆரை பொதுமக்கள் தெய்வமாக கருதுகிறார்கள்.
* எம்.ஜி.ஆர். குறித்து பேசிய திருமாவளவன் அரசியலில் காணாமல் போய்விடுவார்.
* வெறுப்பை வெளிப்படுத்தும் விதமாக திருமாவளவன் இதுபோல் பேசிக்கொண்டிருக்கிறார்.
* சாதிக்கும் மதத்திற்கும் அப்பாற்பட்ட கட்சி அ.தி.மு.க.
* தி.மு.க. கூட்டணி நிலைக்குமா? நிலைக்காதா? என்பது 8 மாதத்தில் தெரியும்.
* 8 மாத காலத்தில் அ.தி.மு.க. சிறப்பான கூட்டணியை அமைக்கும் என்றார்.
திராவிடத்திற்குள் பார்ப்பனியம் ஊடுருவ வழிவகை செய்தவர் எம்.ஜி.ஆர்.என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் பேசியது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.






