என் மலர்tooltip icon

    சேலம்

    • தனியார் உரக்கடைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.
    • இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி  பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகளில் விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள், உரம், யூரியா, உயிர் நுண்ணுட்டச்சத்து இடு பொருட்கள் ஆகியவற்றை கூடுதல் விலைக்கு விற்பனை செய்கின்றனர்.

    வாங்கும் பொருட்களுக்கு ரசீது வழங்குவதில்லை. தரமற்ற போலியான உயிர் நுண்ணூட்ட இடுபொருட்களை விற்பனை செய்வ தாகவும், இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் புகார் தெரிவித்தனர். வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கா விட்டால் போராட்டம் நடத்தப்படுமென, சேலம் மாவட்ட பா.ம.க. உழவர் பேரியக்க செயலாளர் முருகன் தெரிவித்தார்.

    இதன் எதிரொலியாக, வாழப்பாடி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் மணிமேகலாதேவி தலைமையில், வாழப்பாடி மற்றும் பேளூர் பகுதியில் இயங்கும் தனியார் உரக்க டைகள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில், வேளாண்மைத்துறையினர் திடீர் ஆய்வு நடத்தினர்.

    அப்போது யூரியா, உரம் உள்ளிட்ட இடுபொருட்க ளின் இருப்பு நிலை சரி பார்த்ததோடு, பயோ பூச்சிக்கொல்லி மருந்துகளின் மாதிரிகளின் உண்மை த்தன்மையை அறிய மாதிரி கள் சேகரித்து பகுப்பாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.எந்த பொருளையும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்ய க்கூடாது. விவசாயிகள் கொள்முதல் செய்யும் பொருட்களுக்கு உரிய ரசீது வழங்க வேண்டும். யூரியா, உரம் வாங்க வரும் விவசாயிகளிடம், இந்த தயாரிப்பு நிறுவனங்களின் மற்ற பொருட்களை வாங்க கட்டாயப்ப டுத்தக்கூடா தென, உரக்கடை விற்பனை யாளர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. விதிமுறை களை பின்பற்றாத 2 தனியார் உரக்கடைகள், இடுபொருட்கள் விற்பனைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டது.

    • சேலம் மாவட்ட வன அலுவலர் குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.
    • அப்போது, காப்பு காட்டில் 2 பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.

    சேலம்:

    சேலம் மாவட்ட வன அலுவலர் சசாங் கசியப் ரவி உத்தரவின் பேரில், வனசரக அலுவலர் முரளிதரன் தலைமையில் வனவர் பழனிவேல், வனக்காப்பாளர்கள் அசோக்குமார், அருண்குமார், செல்வசேகர் ஆகியோர் கொண்ட குழுவினர், குரும்பப்பட்டி காப்புக்காடு பகுதியில் நேற்று இரவு ரோந்து பணி ஈடுபட்டனர்.

    அப்போது, காப்பு காட்டில் 2 பேர் வேட்டையாட பதுங்கி இருந்தனர். அவர்கள் வனத்துறையினரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர். 2 பேரையும் சுற்றி வளைத்து பிடித்த வனத்துறையினர், விசாரணை செய்ததில், அவர்கள் சங்கர் (வயது 29), பச்சியப்பன் (51) என்பது தெரியவந்தது.

    இருவரும் நாட்டுத் துப்பாக்கி மற்றும் கன்னி வலைகளை பயன்படுத்தி புள்ளிமான், முயல், காட்டுப்பூனை போன்ற வனவிலங்குகளை வேட்டையாடி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து, குற்றவியல் நீதிமன்ற நடுவர் எண் 6-ல் நீதிபதி முன்பு அஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிழக்குமேடு பகுதியில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகின்றது.
    • மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள துட்டம்பட்டி கிழக்குமேடு பகுதியில் புதுமாரியம்மன் கோவில் திருவிழா நடந்து வருகின்றது, இங்கு கோவில் கம்பம் நடுவது மற்றும் சாமியை தூக்குவது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த தமிழரசன் (வயது 29), ஆனந்த் (19) ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி இரு தரப்பை சேர்ந்த ஆனந்த், செல்வம், லட்சுமி, கலைவாணி, யமுனா,தமிழரசன், ரவி, பரத், சீரங்கன், சதீஷ்குமார், முனி, மலர், பிரியா ஆகிய 13 பேர் மீது தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அஜித்குமார், பாரதி தம்பதியினர் ஊர் ஊராக சென்று தங்கி கைரேகை பார்த்து வரும் தொழில் செய்து வருகின்றனர்.
    • இவர்களுடைய 1 1/2 வயது குழந்தை மித்ரன் நேற்று கோவில் பகுதியில் விளையாடிகொண்டிருந்த போது பாம்பு கடித்து விட்டதாக தெரிகிறது.

    தாரமங்கலம்:

    கொளத்தூர் அருகிலுள்ள பண்ணவாடி, ராமகிருஷ்ணா காலனி பகுதியை சேர்ந்த அஜித்குமார், பாரதி தம்பதியினர் ஊர் ஊராக சென்று தங்கி கைரேகை பார்த்து வரும் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தாரமங்கலம் அருகிலுள்ள பெரியாம்பட்டி மாரியம்மன் கோவிலில் தங்கி அந்த பகுதியில் கைரேகை பார்த்து வந்துள்ளனர்.

    இவர்களுடைய 1 1/2 வயது குழந்தை மித்ரன் நேற்று கோவில் பகுதியில் விளையாடிகொண்டிருந்த போது பாம்பு கடித்து

    விட்டதாக தெரிகிறது. மயக்கம் அடைந்த குழந்தையை உடனடியாக மீட்டு தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,
    • கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    சேலம்:

    அரக்கோணம்-காட்பாடி ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள வாலாஜா ரோடு ரெயில் நிலையம் பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணி நடைபெறுகிறது.

    இதையொட்டி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) மற்றும் சென்னை சென்ட்ரல்- கோவை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) ஆகிய ரெயில்கள் நாளை (செவ்வாய்க்கிழமை) பகுதியாக ரத்து செய்யப்ப டுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது,

    அதன்படி கோவை-சென்னை சென்ட்ரல் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12680) கோவையில் இருந்து நாளை காலை 6.15 மணிக்கு புறப்பட்டு சேலம் வழியாக காட்பாடி வரை மட்டும் இயக்கப்படும்.

    காட்பாடி முதல் சென்னை சென்ட்ரல் வரை செல்லாது. இதே போல் மறு மார்க்கத்தில் இயக்கப்படும் சென்னை சென்ட்ரல்-கோவை இன்டர் சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-12679) சென்னை சென்ட்ரல்-காட்பாடி இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது காட்பாடியில் இருந்து புறப்பட்டு கோவை வரை செல்லும் என சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.
    • அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.

    சேலம்:

    ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காட்பாடி முதல் சேலம் வரை சோதனை செய்தனர்.

    அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதை ரெயிலில் கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மேட்டூர் அணைக்கு நேற்று 992 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 993 கனஅடியாக அதிகரித்தது.
    • தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் மேட்டூர் அணை நீர்மட்டம் மேலும் உயரும்.

    மேட்டூர்:

    காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நீர்வரத்து, தொடர்ந்து நாட்களாக 1000 கன அடியாக நீடித்த நிலையில், நேற்று விநாடிக்கு 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது.

    அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 992 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை 993 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர்தேவைக்காக விநாடிக்கு 1000 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

    நேற்று 103.79 அடியாக இருந்த நீர்மட்டம், இன்று காலை 103.77 அடியாக சரிந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்தால் நீர்மட்டம் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை பெற்று தந்து அதற்கான பணி ஆணையும் வழங்கினார்.
    • ராஜாவின் குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் இருந்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார்.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த கொளத்தூர் கோவிந்தப்பாடியை சேர்ந்தவர் காரவடையான் என்கிற ராஜா (வயது 45). செட்டிப்பட்டியை சேர்ந்தவர்கள் ரவி (40), இளைய பெருமாள் (40). மீனவர்களான இவர்கள் உள்பட 4 பேர் கடந்த 14-ந்தேதி இரவு தமிழக-கர்நாடக எல்லையில் உள்ள அடிப்பாலாறு பகுதியில் காவிரி ஆற்றில் மீன் பிடிக்க சென்றனர்.

    அப்போது அவர்களை கர்நாடக மாநில வனத்துறையினர் சுற்றி வளைத்துள்ளனர். இரு தரப்பினருக்கும் இடை யே மோதல் ஏற்பட்டு துப்பாக்கி ச்சண்டை நடந்துள்ளது. இந்த சண்டையில் ராஜா காயம் அடைந்து பலியானார். இதற்கிடையே கர்நாடக வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி அவரது உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது.

    இதில் மாவட்ட கலெக்டர் கார்மேகம் மற்றும் உதவி கலெக்டர் விஷ்ணுவர்த்தினி கலந்து கொண்டனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்வதற்கு உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர்.

    மீனவர் ராஜாவின் உடலை அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் கோகுலரமணன், அருண், மகேஷ் ஆகிய 3 பேர் பிரேத பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. பிரேதப் பரிசோதனை முடிந்ததை அடுத்து ராஜாவின் உடல் இன்று காலை உறவினர் களிடம் ஒப்படைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு செல்லப்பட்டது. குடும்பத்தின் உறவினர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என ராஜாவின் மனைவி கோரிக்கை வைத்தார்.

    அதனை ஏற்று சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார் கொளத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் குழந்தைகளை பராமரிக்கும் வேலையை பெற்று தந்து அதற்கான பணி ஆணையும் வழங்கினார்.

    ராஜாவின் குழந்தைகள் வரும் கல்வி ஆண்டில் இருந்து இலவசமாக படிக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தார். அதை தொடர்ந்து உறவினர்கள் மற்றும் ராஜாவின் மனைவி பவுனா, கணவரின் உடலை பெற சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டார். 

    • மலர்கொடி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலர்க்கொடி பிரிந்து சென்று விட்டார்.
    • அதைத்தொடர்ந்து தனது தாய் பாஞ்சாலையுடன் வசித்து வந்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சிவதாபுரம் அருகே உள்ள லகுவம்பட்டி பகுதியை சேர்ந்தவர் அண்ணாமலை ( வயது 50). கூலித் தொழிலாளியான இவருக்கு மலர்கொடி என்ற பெண்ணுடன் திருமணம் ஆகி குழந்தைகள் இல்லாத காரணத்தால் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு மலர்க்கொடி பிரிந்து சென்று விட்டார். அதைத்தொடர்ந்து தனது தாய் பாஞ்சாலையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த 40 நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி உடல் நலக்குறைவால் இறந்துவிட்டார். இந்த நிலையில் வீட்டிலிருந்த அண்ணாமலை நேற்று மாலை 4.45 மணி அளவில் வீட்டின் அருகில் நின்றிருந்த மோட்டார் சைக்கிளில் இருந்து ஒரு பாட்டிலில் பெட்ரோல் பிடித்து தனது உடலில் ஊற்றிக்கொண்டு தீ வைத்துக் கொண்டார். தீயின் தாக்கத்தால் அலறி துடித்த அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அண்ணாமலை இன்று அதிகாலை 2.45 மணி அளவில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து இரும்பாலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • 5-ம் தேதி இரவு மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
    • 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளனர்.

    சேலம்:

    சேலம் அயோத்தி–யாப்பட்டணம் அருகேயுள்ள காட்டூரைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆனந்தன் (வயது 44).

    இவரை கடந்த 5-ம் தேதி இரவு மர்மகும்பல் வெட்டி படுகொலை செய்தது. இதுபற்றி காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இவ்வழக்கில் காட்டூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித்குமார் ஆகிய 4 பேர் சென்னை கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும், ராஜா, சீனிவாசன், ஹரி, சிவன், குழந்தைவேல் ஆகிய 4 பேரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரணடைந்த ரவுடி அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித்குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமை–யிலான போலீசார், 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில், 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து பல்வேறு தகவல்களை போலீசில் தெரிவித்துள்ளனர்.

    வலசையூர் பேக்கரியில் அன்பழகன் பங்குதாரராக இருந்து சமீபத்தில் விலகியுள்ளார். இருப்பினும் அந்த பேக்கரிக்கு வந்து பணம் கேட்டு மிரட்டியதை ரவுடி காட்டூர் ஆனந்தன் கண்டித்துள்ளார். அதனால் ஆனந்தனை தீர்த்து கட்ட முடிவு செய்திருந்தேன் என அன்பழகன் தெரிவித்ததாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதேபோல் சக்திவேல் தனது நண்பர்களுடன் வலசையூர் பகுதியில் பைக்கில் சுற்றியுள்ளார். அப்போது காட்டூர் ஆனந்தன் அவர்களை மறித்து, இந்த பக்கம் வந்தால் கொன்று விடுவதாக மிரட்டினார். அதனால், அன்பழகனுடன் சேர்ந்து ரவுடி ஆனந்தனை வெட்டிக் கொன்றோம் எனக் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

    கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து 4 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

    • புலிக்கார தெரு களரம்பட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
    • 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை களரம்பட்டி பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 57-வது வார்டுக்கு உட்பட்ட வீரவாஞ்சி புலிக்கார தெரு களரம்பட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.

    சாலை மறியல்

    சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தே.மு.தி.க. வார்டு செயலாளர் சங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை களரம்பட்டி பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது சாலை வசதி சாக்கடை வசதி செய்து தராத 57-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த கிச்சிபாளையம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது கவுன்சிலர் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் தற்காலிக–மாக மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில்

    ½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • புதிய பேருந்து நிலையத்தில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
    • அனுமதி அளிக்கப்பட்டதற்குமேல் கூடுதலாக கடைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி புதிய பேருந்து நிலையத்தில் ஆணையாளர் கிறிஸ்துராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது புதிய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள கட்டண கழிப்பிடங்கள், கட்டணமில்லா கழிப்பிடங்கள் முறையாக பராமரிக்கப்பட்டு சுத்தமாக வைக்கப்பட்டுள்ளதா என்றும், நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்டுகிறதா, கழிப்பிடங்களில் போதுமான தண்ணீர் வசதி உள்ளதா என்பது குறித்தும், துர்நாற்றம் இல்லாத வகையில் மருந்து தெளிக்கப்படுகிறதா என்றும், கழிப்பிடம் சுத்தமாக உள்ளதா, தண்ணீர் வசதி, காற்றோட்ட வசதி, கழிப்பறை கதவுகளில் தாழ்பாள் சரியான முறையில் உள்ளதா என்று மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க க்யூ ஆர் கோடு பொருத்தப்பட்டு உள்ளதையும் ஆய்வு செய்தார்.

    மேலும், பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வெளியே செல்வதற்கும், உள்ளே வருவதற்கும் உள்ள பாதைகளில் ஆக்கிரமிப்பு ஏதேனும் உள்ளதா, பேருந்து நிலைய நடைபாதையில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படும் வகையில் அனுமதி பெறாமல் கடைகள் வைக்கப்பட்டுள்ளதா, புதிய பேருந்து நிலையத்தில் எத்தனை கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    அனுமதி அளிக்கப்பட்டதற்குமேல் கூடுதலாக கடைகள் வைக்கப்பட்டுள்ளதா என்பதையும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் வாகன நிறுத்தங்களில் வாகனங்களுக்கு வசூலிக்கப்படும் கட்டண விபரங்கள் குறித்தும், அது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்கிறார்களா என்பதை ஆய்வு செய்த ஆணையாளர் அவர்கள் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பிடங்கள் மற்றும் நடைபாதைகள் அனைத்தும் சுத்தமாகவும், சுகாதாரமான முறையிலும் வைத்திருக்க வேண்டும் என சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அதனைத் தொடர்ந்து சீர்மிகு நகரத்திட்டத்தின் கீழ் திருமணி முத்தாறு குறுக்கே நடைபெற்று வரும் பாலம் அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்த ஆணையாளர் பணிகள் எவ்வாறு நடைபெற்று வருகிறது என்பதை கேட்டறிந்தார். பணிகளை மிக விரைவில் முடித்திட வேண்டும் என சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் செந்தில் குமார், செல்வராஜ், உதவி பொறியாளர்கள் பாலசுப்பிரமணியம், சுரேஷ், சுகாதார அலுவலர் சதீஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×