என் மலர்
உள்ளூர் செய்திகள்

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.
களரம்பட்டியில் பொதுமக்கள் சாலை மறியல்
- புலிக்கார தெரு களரம்பட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
- 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை களரம்பட்டி பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:
சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட 57-வது வார்டுக்கு உட்பட்ட வீரவாஞ்சி புலிக்கார தெரு களரம்பட்டி பிரதான சாலை ஆகிய இடங்களில் சாலை முழுவதும் குண்டும், குழியுமாக காணப்படுகிறது.
சாலை மறியல்
சாக்கடை வசதி இல்லாமல் உள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தே.மு.தி.க. வார்டு செயலாளர் சங்கர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இன்று காலை களரம்பட்டி பிரதான சாலையில் திடீரென அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது சாலை வசதி சாக்கடை வசதி செய்து தராத 57-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசனை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இது பற்றி தகவல் அறிந்து வந்த கிச்சிபாளையம் காவல் ஆய்வாளர் சீனிவாசன் தலைமையில் காவல்துறையினர் சாலை மறியல் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது கவுன்சிலர் வரும் வரை மறியலை கைவிட மாட்டோம் என பொதுமக்கள் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தி.மு.க. கவுன்சிலர் சீனிவாசன் மறியல் நடைபெற்ற இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
சாலை மற்றும் சாக்கடை வசதி செய்து தருவதாக உறுதியளித்ததன் அடிப்படையில் தற்காலிக–மாக மறியலை கைவிட்டனர். இதனால் அப்பகுதியில்
½ மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






