சேலம் வழியாக சென்ற ரெயிலில் 8 கிலோ கஞ்சா சிக்கியது

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது.அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது.
சேலம் வழியாக சென்ற ரெயிலில் 8 கிலோ கஞ்சா சிக்கியது
Published on

சேலம்:

ஜார்கண்ட் மாநிலம் தன்பாத்தில் இருந்து கேரளா செல்லும் ஆலப்புழா ரெயிலில் கஞ்சா கடத்தி வருவதாக சேலம் ரெயில்வே தனிப்படை போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் காட்பாடி முதல் சேலம் வரை சோதனை செய்தனர்.

அப்போது பொதுப்பெட்டியில் கேட்பாரற்று கிடந்த லக்கேஜ் பேக்கை திறந்து பார்த்தபோது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அந்த பேக்கில் 4 பண்டல்களில் 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதையடுத்து போலீசார் கஞ்சாவை போலீஸ் நிலையம் கொண்டு சென்று அதை ரெயிலில் கடத்தி வந்த நபர்கள் யார்? என்பது குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com