என் மலர்
சேலம்
- சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
- இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார்.
சேலம்:
திண்டுக்கல் மாவட்டம் வேடச்சந்தூர் பகுதியை சேர்ந்தவர் பிச்சமுத்து. இவரது மகன் மதியழகன் (வயது 35). இவருக்கு செல்வி (30) என்ற மனைவியும், வித்தின் தர்ஷன் (7) என்ற மகனும் உள்ளனர்.
மதியழகன் சேலத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டு, சூரமங்கலம் பெரிய மோட்டூர் அமராவதி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த மதியழகன், விஷத்தை குடித்து விட்டு வாயில் நுரை தள்ளியபடி மயங்கி கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், மதியழகனை சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொண்டு வந்து சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த மதியழகன், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் பள்ளப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில், மதியழகன் ஏலச் சீட்டு நடத்தி வந்துள்ளார். இதில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதாகவும், அதனால் பலரிடம் கடன் வாங்கி திருப்பி தர முடியாமல் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- ஆர்ப்பாட்டத்தில், கோவில் மனையின் நில மதிப்பிற்கு மேல் மாத வாடகை செலுத்து பவர்களுக்கு கருணை அடிப்படையில் மனை பட்டா வழங்க வேண்டும்.
சேலம்:
தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில், கோவில் மனையின் நில மதிப்பிற்கு மேல்
மாத வாடகை செலுத்து பவர்களுக்கு கருணை அடிப்படையில் மனை பட்டா வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட வாடகை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாடகை குழு பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும். அறநிலைத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களை, பொது நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.
வீராணம் அறநிலைத் துறையின் கீழ் உள்ள நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியை, அறநிலைத் துறையில் இருந்து தமிழ்நாடு கல்வித்துறைக்கு மாற்றம் செய்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.
- காவல் துறையில் 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும், உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
- சேலம் மாநகரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்-டிவிசன் டி.எஸ்.பி. ஆகவும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நிலவழகன் , சூரமங்கலம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
சேலம்:
தமிழக காவல் துறையில் 12 டி.எஸ்.பி.க்கள் மற்றும், உதவி கமிஷனர்களை இடமாற்றம் செய்து, டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாநகரம் சூரமங்கலம் உதவி கமிஷனர் நாகராஜன், சேலம் மாவட்டம் ஆத்தூர் சப்-டிவிசன் டி.எஸ்.பி. ஆகவும், திருப்பத்தூர் மாவட்ட குற்றப்பிரிவு டி.எஸ்.பி. நிலவழகன் , சூரமங்கலம் உதவி கமிஷனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.
இதேபோல் ஆத்தூரில் பணியாற்றிய டி.எஸ்.பி. ராமச்சந்திரன், விழுப்புரம் மாவட்டத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த டி.எஸ்.பி. கணேஷ்குமார் திரு வள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோன்று ஊத்துக்கோட்டை, வேலூர், திருவள்ளூர், கோவை மாநகர் உள்ளிட்ட பகுதிகளில் டி.எஸ்.பி.க்கள், உதவி கமிஷனர்கள் என மொத்தம் 12 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
- விளம்பரங்கள் செய்வதையும் தடுத்து, திருக்குறள், பொன்மொழிகள் மற்றும் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
- தேசிய தலைவர்கள் மற்றும் அவ்வையார், பாரதியார் உள்ளிட்ட பழம்பெரும் கவிஞர்களின் வண்ண ஓவியங்கள் தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளை யத்தில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் சுவ ரொட்டிகள் ஒட்டுவதையும், தேவையற்ற விளம்பரங்கள் செய்வதையும் தடுத்து,
திருக்குறள், பொன்மொழிகள் மற்றும் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வம், தலைமையாசிரியை ஜெயலட்சுமி ஆகியோரது வேண்டுகோளின் பேரில், முத்தம்பட்டி தனியார் பால் பண்ணையின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், பள்ளி சுற்றுச்சுவர் வண்ணம் தீட்டப்பட்டு, மகாத்மா காந்தி, காமராஜர், அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்துல் கலாம், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், அன்னை தெரசா, உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் அவ்வையார், பாரதியார் உள்ளிட்ட பழம்பெரும் கவிஞர்களின் வண்ண ஓவியங்கள் தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு அறநெறி புகட்டி சமூக வாழ்வியல் திறன் வளர்க்கும் திருக்குறள், பொன்மொழிகளும் எழுதப்பட்டுள்ளன. இதனால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.இதற்கு பள்ளி நிர்வாகத்திற்கும், தனியார் பால் பண்ணை நிறுவனம் மற்றும் ஓவியர் சுரேஷ் குழுவினருக்கும் இப்பகுதி கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
- சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
- இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டின் பல்வேறு பகுதிகளில், மாசி மாத அமாவாசையொட்டி மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. அதன்படி, ஏற்காடு ஜெரினாகாடு புது மயானத்தில் உள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோவிலில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து, மேள தாளம் முழங்க ஊர்வலமாக முக்கிய வீதி வழியாக மயானத்திற்கு எடுத்து சென்றனர்.
இந்த சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்கா ளம்மன் போன்று பல்வேறு வேடமிட்டு ஆடியவாறு சென்றனர். அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு, தங்களின் நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில், சாமியாடி வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளை கொடுத்தனர்.
அதனை வாங்கிய பக்தர்கள், ஆட்டின் குரல் வளையை கடித்து ரத்தம் குடித்தும், கோழியை வாயில் கவ்வியபடியும் சுடுகாடு நோக்கி ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் சுற்று வட்டார கிராமத்திலிருந்து ஆயிரக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர். அசம்பாவிதம் எதுவும் நடக்காமல் தடுக்க ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- மேட்டூர் அணைக்கு நேற்று 993 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 841 கன அடியாக சரிந்துள்ளது.
- அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைந்துள்ளது. ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து விநாடிக்கு 2,000 கனஅடியாக நீடிக்கிறது.
அதே சமயம், மேட்டூர் அணைக்கு நேற்று 993 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை விநாடிக்கு 841 கன அடியாக சரிந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
நேற்று 103.77அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம், இன்று காலை 103.74 அடியாக சரிந்தது.
- உழவர் சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
- அதன்படி, இன்று மாசி மாத அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது.
அன்னதானப்பட்டி:
சேலம் மாநகரில் சூரமங்கலம், தாதகாப்பட்டி, அஸ்தம்பட்டி, அம்மாப்பேட்டை மற்றும் மாவட்டத்தில் ஆத்தூர், மேட்டூர், ஜலகண்டாபுரம் , எடப்பாடி, இளம்பிள்ளை, தம்மம்பட்டி , ஆட்டையாம்பட்டி ஆகிய 11 இடங்களில் உழவர் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளில் பண்டிகை, அமாவாசை, பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் காய்கறிகள், பழங்கள், பூக்கள் வழக்கத்தை விட கூடுதலாக விற்பனையாவது வழக்கம்.
அதன்படி, இன்று மாசி மாத அமாவாசை ஆகும். அதனையொட்டி அனைத்து உழவர் சந்தைகளிலும் அதிகாலை முதலே பொது மக்கள் கூட்டம் அலை மோதியது. முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கவும், வீடுகளில் முன்னோர்கள், மற்றும் சாமிக்கு பூஜைகள் செய்து, படையலிட்டு சமைப்பதற்காகவும் பொது மக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள், பூக்கள் உள்ளிட்டவற்றை அதிகளவில் வாங்கி சென்றனர்.
பழங்கள், தேங்காய், வாழை இலை , கீரை வகைகள் , பூசணிக்காய் , காய்கறிகள் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனை ஆனது . இதே போல் , பூக்கள் வியாபாரமும் வழக்கத்தை விட அதிகரித்து காணப்பட்டது.
சேலம் மாவட்டத்தில் உள்ள 11 உழவர் சந்தைகளிலும் இன்று 934 விவசாயிகள், பல்வேறு 637 வகையான காய்கறிகள், பழங்கள் உள்ளிட்டவற்றை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். காய்கறிகள், பழங்களின் மொத்த வரத்து 237.283 மெட்ரிக் டன் ஆகும். அவற்றை 53,402 நுகர்வோர் வாங்கிச் சென்றனர்.
இதன் மூலம் இன்று ஒரே நாளில் ரூ.76,83,930 மதிப்பிலான காய்கறிகள், பழங்கள், பூக்கள் விற்பனை ஆனது. இது வழக்கமான வியாபாரத்தை விட கூடுதல் விற்பனை ஆகும் என வேளாண்மைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- இந்தியாவில் மகா ராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
- கடந்த ஆண்டு பெய்த மழையால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரிய வெங்காயம் அமோக விளைச்சலை தந்துள்ளது.
சேலம்:
இந்தியாவில் மகா ராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிக அளவில் வெங்காயம் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்கு அடுத்தப்படியாக கர்நாடக மாநிலம் பெல்லாரியில் பெரிய வெங்காயம் சாகுபடி நடக்கிறது. கடந்த ஆண்டு பெய்த மழையால் மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் பெரிய வெங்காயம் அமோக விளைச்சலை தந்துள்ளது. அதனால் வட மாநிலங்களில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெங்காயத்தின் விலை சரிவடைந்துள்ளது.
இது குறித்து வியாபாரிகள் தெரிவிக்கையில், மகாராஷ்டிரா, கர்நா டக மாநிலங்களில் ஆயிரக்க ணக்கான ஏக்கரில் பெரிய வெங்காயம் சாகுபடி நடைபெறுகிறது.
இங்கிருந்து இந்தியா முழுவதும் மற்றும் வெளிநாடுகளுக்கு ெபரிய வெங்காயம் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த 15-ந்தேதிக்கு பிறகு வட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அறுவடை தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் அங்கிருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 200 டன் பெரிய வெங்காயம் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் பெரிய வெங்காயத்தை சில்லரை வியாரிகள் வாங்கி சென்று கிலோ கணக்கில் விற்பனை செய்கின்றனர். பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து ள்ளதால் கிலோ ரூ. 20-க்கு விற்பனை செய்யப்படுகிறது, என்றனர்.
- இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறு வதற்கும் ‘நெட்’ தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.
- இந்த தேர்வில் முதல்கட்ட மாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன.
சேலம்:
சென்னை, பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியராக பணிபுரிவதற்கும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான மத்திய அரசு வழங்கக்கூடிய உதவித்தொகையை பெறுவதற்கும் 'நெட்' தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறுபவர்களே உதவி பேராசிரியர்களாக சேரவும், மத்திய அரசின் உதவித்தொகையை பெறவும் முடியும்.
அந்த வகையில் இந்த தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்.டி.ஏ.) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் 2 முறை கணினி வாயிலான தேர்வாக நடத்துகிறது. அதன்படி, கடந்த டிசம்பர் மாதத்துக்கான நெட் தேர்வு நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 10-ந் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட இருக்கிறது.
இந்த தேர்வில் முதல்கட்ட மாக நடத்தப்பட உள்ள 57 பாடங்களின் தேர்வுக்கான ஹால்டிக்கெட்டுகள் தற்போது வெளியிடப்பட்டு உள்ளன. தேர்வர்கள் https://ugcnet.nta.nic.in/ என்ற இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
மீதம் உள்ள பாடங்க ளுக்கான தேர்வுக்கால அட்டவணை, ஹால்டிக்கெட் குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படப்படும் என்றும், கூடுதல் விவரங்களை http://www.nta.ac.in/ என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
சேலம் மாவட்டம்
சேலம் மாவட்டத்தில் நெட் தேர்வு மையம் காகாபாளையத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தேர்வு
மையத்தில் செய்யப்பட்டு ள்ளன. தேர்வர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ளபடி குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையத்திற்கு வந்து விட வேண்டும். காலதாமதமாக வருபவர்கள் தேர்வு மையத்திற்குள் அனு மதிக்கப்ப டமாட்டார்கள். சேலம் மாவட்டத்தில் இந்த தேர்வை முதுநிலை
பட்டதாரிகள் ஏராள மானோர் எழுதுகின்றனர்.
- மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி இறந்தவர்களின் கல்லறை, நினைவிடங்கள் சுடுகாட்டில் புதுப்பிக்கப்பட்டு இருந்தது.
- சேலம் காசிமுனியப்பன் கோவில் தெருவில் உள்ள ஆதிசிவன் அங்காளம்மன் கோவிலிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
சேலம்:
மாசி மாதத்தில் வரும் அமாவாசையில் நடக்கும் மயான கொள்ளை நிகழ்ச்சி சேலத்தில் மிகவும் பிரபலமானது. அதன்படி, மாசிமாத அமாவாசையொட்டி இன்று மாநகரின் பல்வேறு இடங்களில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது.
அதாவது ஒவ்வொரு பகுதியிலும் உள்ள காளியம்மன், பெரியாண்டிச்சியம்மன் கோவில்களில் இருந்து ஊர்வலமாக மயானங்களுக்கு வரும் பக்தர்கள், அங்கு சிறப்பு பூஜை செய்து வழிபடுவர்.
சேலம் டவுன் தேர்வீதி பெரிய அங்காளம்மன் கோவில், ஜான்சன்பேட்டை அங்காளம்மன் கோவில், வின்சென்ட் அங்காளம்மன் கோவில், நாராயண நகர் ஏரிகரை அங்காளபரமேஸ்வரி கோவில், கிச்சிப்பாளையம் அங்காளபரமேஸ்வரி கோவில், ஆண்டிப்பட்டியில் உள்ள அங்காளம்மன் கோவில் மற்றும் மாநகரில் உள்ள மாரியம்மன், காளியம்மன் கோவில்களில் இருந்து சாமி சிலைகளை அலங்கரித்து பக்தர்கள் மேளதாளம் முழங்க அந்தந்த பகுதியில் உள்ள சுடுகாட்டுக்கு எடுத்து சென்றனர். சாமி சிலைகளுக்கு முன்னால் பக்தர்கள் காளி, சிவபெருமான், அங்காளம்மன் போன்று பல்வேறு சாமிகள் போல வேடமிட்டு ஆடியவாறு சென்றனர்.
அப்போது வழிநெடுக திரளான மக்கள் நின்றுகொண்டு தங்களின் பல்வேறு நேர்த்திக்கடனை நிறைவேற்றும் வகையில் சாமியாடியவாறு வந்த பக்தர்களிடம் ஆடு, கோழிகளையும், முட்டைகளையும் கொடுத்தனர். ஆட்டுக்குட்டிகளை வாங்கிய பக்தர்கள் தங்கள் கழுத்தில் தூக்கிபோட்டு ஆடியபடியே வந்ததுடன், ஆட்டின் குரல் வளையை கடித்து ரத்தம் குடித்தனர்.
இன்னும் சில பக்தர்கள் கோழியை வாயில் கவ்வியபடி, அதன் ரத்தத்தை குடித்தவாறு ஆடிக்கொண்டே சுடுகாடு நோக்கி வந்தனர். சாமியாடியவாறு வந்த பக்தர்களின் உடல் முழுவதும் ஆடு, கோழிகளின் ரத்தம் வடிந்த நிலையில் இருந்தது. மேலும் சில பக்தர்கள் சுடுகாட்டின் புதைகுழியில் கிடந்த இறந்த மனிதனின் மண்டை ஓட்டை கவ்வியபடியும், ஆடு, கோழிகளை கடித்து ஆக்ரோஷத்துடன் ஊர்வலமாக வந்தனர்.
இது மெய்சிலிர்க்கும் வகையில் இருந்தது. இப்படி மாநகரின் பல்வேறு இடங்களில் இருந்து வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் வீட்டில் உள்ள பொதுமக்கள், அவர்களின் பாதங்களில் தண்ணீர் ஊற்றி கழுவி வழிபட்டனர்.
சேலம் பிள்ளையார் நகர் பகுதியில் உள்ள காக்காயன் சுடுகாட்டில் மயான கொள்ளை விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அப்போது ஆக்ரோஷத்துடன் ஆடியவாறு வந்த பக்தர்கள், அங்கு கூடி இருந்த பொதுமக்களுக்கு விபூதி கொடுத்து ஆசி வழங்கினர்.
மேலும், ஜான்சன்பேட்டை சுடுகாடு, சந்தைபேட்டை மயானம், கன்னங்குறிச்சி சுடுகாடு, சீலநாயக்கன்பட்டி சுடுகாடு, நஞ்சப்பட்டி சுடுகாடு என நகரில் உள்ள 30-க்கும் மேற்பட்ட சுடுகாடுகளில் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது. சேலம் அம்மாபேட்டை, நாராயணநகர், ஆண்டிப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, கிச்சிப்பாளையம், கன்னங்குறிச்சி உள்பட பல்வேறு இடங்களில் இருந்தும் பக்தர்கள் ஊர்வலமாக அருகில் உள்ள சுடுகாட்டில் நடந்த மயான கொள்ளை நிகழ்ச்சிக்கு வந்தனர்.
காக்காயன் சுடுகாட்டுக்கு பட்டைகோவில், அணைமேடு, பச்சப்பட்டி, கிச்சிப்பாளையம், குமார சாமிபட்டி, சின்னபுதூர், பொன்னம்மாபேட்டை, கருவாட்டுபாலம், ஆனந்தா பாலம் இறக்கம் ஆகிய இடங்களில் இருந்து சாமி ஊர்வலத்துடன் காளிவேடமிட்ட பக்தர்கள் வந்தனர்.
காளிவேடமிட்ட பக்தர்கள் சுடுகாட்டை நெருங்கும் வேளையில் அதன்பாதையில் திருமணம் ஆகாத இளம்பெண்கள், குழந்தையில்லாத பெண்கள் மற்றும் நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டவர்கள் நேர்த்தி கடனாக தரையில் படுத்திருந்தனர். அவர்களை சாமிவேடமிட்ட பக்தர்கள் ஒவ்வொருவராக தாண்டி சென்றனர். இவ்வாறு செய்தால் அவர்கள் குடும்பத்தில் உள்ள கஷ்டங்கள் தீரும், நீண்டநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், திருமண தோஷம் நீங்கும், பேய், பிசாசு பிடித்தவர்கள் குணம் அடைவார்கள், நோய்நொடிகள் தீரும் என்பது ஐதீகம்.
மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி இறந்தவர்களின் கல்லறை, நினைவிடங்கள் சுடுகாட்டில் புதுப்பிக்கப்பட்டு இருந்தது. இறந்தவர்களின் நினைவிடங்களில், உறவினர்கள் மாலை அணிவித்தும் தேங்காய், பழம், அவல், பொரி வைத்தும் வழிபட்டனர். அத்துடன் இறந்தவர்களுக்கு பிடித்தமானவற்றை படையலாக வைத்தும் வழிபாடு செய்தனர். இதே போல சேலம் காசிமுனியப்பன் கோவில் தெருவில் உள்ள ஆதிசிவன் அங்காளம்மன் கோவிலிலும் மயான கொள்ளை நிகழ்ச்சி நடந்தது.
ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட சாமி சிலைகள், அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தப்பட்டது. சேலம் மாநகரில் சுடுகாட்டில் நடத்தப்பட்ட மயானக் கொள்ளை நிகழ்ச்சியையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். மேலும் மயான கொள்ளை நிகழ்ச்சியையொட்டி போலீஸ் கமிஷனர் நஜ்மல்ஹோடா உத்தரவின்பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- இந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேஇந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
- அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் காக்கும் வகையில் மகா ஆரத்தி வழிபாடு நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர்.
சேலம்:
இந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் காக்கும் வகையில் மகா ஆரத்தி வழிபாடு நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். சேலம் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் ஆன்மீக, இலக்கிய, சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.
இதற்காக நேற்று காலையில் சேலத்தில் திரண்ட அனைவரும் நதி உற்பத்தியாகும் ஏற்காடு வசம்பாடி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று ஆரத்தி வழிபாடு நடத்தினர்.
பின்பு திருமணிமுத்தாறு கரையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட 5 தலங்களான சேலம் சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், நன்செய் இடையேறு திருவேலிநாதர் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.
மாலையில் சேலம் பஞ்சாட்சர கணபதி கோவில் அருகே திருமணிமுத்தாறு கரையில் அனைவரும் திரண்டனர். அங்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில் ஏராளமான துறவிகள் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். சிவ மந்திரங்கள், பஜனையுடன் இந்த வழிபாடு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் நதியை வணங்கினார்கள். காசியில் நடப்பது போன்று இந்த ஆரத்தி நிகழ்வு நடந்ததால் அதை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.
நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக அமைப்பினர் பேசுகையில், புண்ணிய நதியான திருமணிமுத்தாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
இதுபோன்ற ஆரத்தி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் நதிகள் பிரவாகம் எடுத்து ஓடுவதோடு விவசாயமும் செழிக்கும் என்பதால் மாதந்தோறும் ஆரத்தி விழா நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
- ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
- இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சேலம்:
சேலம் அருகே குள்ளம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக, வலசையூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், பள்ளி பட்டியை சேர்ந்த அஜித் குமார், வெள்ளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.
மேலும் இந்த கொலை தொடர்பாக, வலசையூரை சேர்ந்த சீனிவாசன், வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா, ஹரி சிவன், இவருடைய தம்பி குழந்தைவேல் ஆகியோரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த நிலையில் சென்னையில் சரண் அடைந்த அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித் குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.
கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணை இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் முடிகிறது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.






