என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
  X

  கோவில் மனையில் குடியிருப்போர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  • ஆர்ப்பாட்டத்தில், கோவில் மனையின் நில மதிப்பிற்கு மேல் மாத வாடகை செலுத்து பவர்களுக்கு கருணை அடிப்படையில் மனை பட்டா வழங்க வேண்டும்.

  சேலம்:

  தமிழ்நாடு கோவில் மனையில் குடியிருப்போர் சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட பொதுச்செயலாளர் முருகன் தலைமை தாங்கி னார். மாவட்ட செயலாளர் மோகன் முன்னிலை வகித்தார்.

  ஆர்ப்பாட்டத்தில், கோவில் மனையின் நில மதிப்பிற்கு மேல்

  மாத வாடகை செலுத்து பவர்களுக்கு கருணை அடிப்படையில் மனை பட்டா வழங்க வேண்டும். உயர்த்தப்பட்ட வாடகை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  வாடகை குழு பரிந்துரையை உடனே அமுல்படுத்த வேண்டும். அறநிலைத் துறை அதிகாரிகள் கட்டுப்பாட்டில் உள்ள நீதிமன்றங்களை, பொது நீதிமன்றங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும்.

  வீராணம் அறநிலைத் துறையின் கீழ் உள்ள நிலத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அரசு மேல்நிலைப் பள்ளியை, அறநிலைத் துறையில் இருந்து தமிழ்நாடு கல்வித்துறைக்கு மாற்றம் செய்து பள்ளிக்கூடத்தை பாதுகாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கோஷங்கள் எழுப்பினர்.

  Next Story
  ×