search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருமணிமுத்தாறு ஆரத்தி விழாவில்பங்கேற்ற பக்தர்கள் பரவசம்
    X

    திருமணிமுத்தாறு ஆரத்தி விழாவில் பங்கேற்ற பக்தர்களை படத்தில் காணலாம்.

    திருமணிமுத்தாறு ஆரத்தி விழாவில்பங்கேற்ற பக்தர்கள் பரவசம்

    • இந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேஇந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம்.
    • அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் காக்கும் வகையில் மகா ஆரத்தி வழிபாடு நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர்.

    சேலம்:

    இந்துக்களின் புனித தலமான காசியில் கங்கை நதிக்கு தினசரி ஆரத்தி வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். அதே போன்று ஏற்காட்டில் உற்பத்தியாகி சேலம் வழியாக செல்லும் திருமணிமுத்தாறு நதியின் புனிதம் காக்கும் வகையில் மகா ஆரத்தி வழிபாடு நடத்த பக்தர்கள் முடிவு செய்தனர். சேலம் தெய்வீக தமிழ் சங்கம் அறக்கட்டளை, அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் ஆன்மீக, இலக்கிய, சமூக அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

    இதற்காக நேற்று காலையில் சேலத்தில் திரண்ட அனைவரும் நதி உற்பத்தியாகும் ஏற்காடு வசம்பாடி நீர்வீழ்ச்சி பகுதிக்கு சென்று ஆரத்தி வழிபாடு நடத்தினர்.

    பின்பு திருமணிமுத்தாறு கரையில் பஞ்சபாண்டவர்கள் வழிபட்ட 5 தலங்களான சேலம் சுகவனேஸ்வரர் கோவில், உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில், பில்லூர் வீரட்டீஸ்வரர் கோவில், மாவுரெட்டி பீமேஸ்வரர் கோவில், நன்செய் இடையேறு திருவேலிநாதர் கோவில்களுக்கு சென்று வழிபட்டனர்.

    மாலையில் சேலம் பஞ்சாட்சர கணபதி கோவில் அருகே திருமணிமுத்தாறு கரையில் அனைவரும் திரண்டனர். அங்கு அகில பாரதிய சன்னியாசிகள் சங்க நிறுவனர் சுவாமி ராமானந்த மகராஜ் தலைமையில் ஏராளமான துறவிகள் நதிக்கு ஆரத்தி எடுத்து வழிபட்டனர். சிவ மந்திரங்கள், பஜனையுடன் இந்த வழிபாடு நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் பங்கேற்று பக்தி பரவசத்துடன் நதியை வணங்கினார்கள். காசியில் நடப்பது போன்று இந்த ஆரத்தி நிகழ்வு நடந்ததால் அதை காண ஏராளமானோர் திரண்டிருந்தனர்.

    நிகழ்ச்சியில் பங்கேற்ற சமூக அமைப்பினர் பேசுகையில், புண்ணிய நதியான திருமணிமுத்தாற்றில் கழிவுகள் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

    இதுபோன்ற ஆரத்தி நிகழ்வுகள் நடைபெறும் இடங்களில் நதிகள் பிரவாகம் எடுத்து ஓடுவதோடு விவசாயமும் செழிக்கும் என்பதால் மாதந்தோறும் ஆரத்தி விழா நடத்தவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×