என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  சேலம் ரவுடி ஆனந்தன் கொலையில்4 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
  X

  சேலம் ரவுடி ஆனந்தன் கொலையில்4 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது.
  • இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  சேலம்:

  சேலம் அருகே குள்ளம்பட்டி காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 45). பிரபல ரவுடியான இவரை கடந்த 5-ந் தேதி நள்ளிரவு மர்ம கும்பல் ஓட ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்தது. பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை குறித்து காரிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

  மேலும் கொலையாளிகளை பிடிக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ஹரிசங்கரி தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த நிலையில் காட்டூர் ஆனந்தன் கொலை வழக்கு தொடர்பாக, வலசையூரை சேர்ந்த ரவுடி அன்பழகன், கன்னங்குறிச்சியை சேர்ந்த மணிகண்டன், பள்ளி பட்டியை சேர்ந்த அஜித் குமார், வெள்ளியம்பட்டியை சேர்ந்த சக்திவேல் ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் சரண் அடைந்தனர்.

  மேலும் இந்த கொலை தொடர்பாக, வலசையூரை சேர்ந்த சீனிவாசன், வெள்ளியம்பட்டியை சேர்ந்த ராஜா, ஹரி சிவன், இவருடைய தம்பி குழந்தைவேல் ஆகியோரை காரிப்பட்டி போலீசார் கைது செய்தனர். சரண் அடைந்த மற்றும் போலீசாரால் கைது செய்யப்பட்டவர்கள் சிறைகளில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

  இந்த நிலையில் சென்னையில் சரண் அடைந்த அன்பழகன், சக்திவேல், மணிகண்டன், அஜித் குமார் ஆகிய 4 பேரையும் காரிப்பட்டி இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் தலைமையில் போலீசார் 4 நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர். அதில் 4 பேரும் கொலைக்கான காரணம் குறித்து போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர்.

  கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலீஸ் விசாரணை இன்று (திங்கட்கிழமை) மாலையுடன் முடிகிறது. அதன்பிறகு அவர்கள் அனைவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர்.

  Next Story
  ×