என் மலர்
உள்ளூர் செய்திகள்

சுற்றுச்சுவரில் எழுதப்பட்டுள்ள திருக்குறள் மற்றும் தேசிய தலைவர்களின் பல வண்ண ஓவியங்கள்.
வாழப்பாடி அரசு பள்ளி சுற்றுச்சுவரில்திருக்குறள், தலைவர்களின் ஓவியம்
- விளம்பரங்கள் செய்வதையும் தடுத்து, திருக்குறள், பொன்மொழிகள் மற்றும் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
- தேசிய தலைவர்கள் மற்றும் அவ்வையார், பாரதியார் உள்ளிட்ட பழம்பெரும் கவிஞர்களின் வண்ண ஓவியங்கள் தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி புதுப்பாளை யத்தில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி சுற்றுச்சுவரில் சுவ ரொட்டிகள் ஒட்டுவதையும், தேவையற்ற விளம்பரங்கள் செய்வதையும் தடுத்து,
திருக்குறள், பொன்மொழிகள் மற்றும் தலைவர்களின் ஓவியங்களை வரைந்து, மாணவிகளுக்கு தன்னம்பிக்கையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்த பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.
இதனைத்தொடர்ந்து, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் செல்வம், தலைமையாசிரியை ஜெயலட்சுமி ஆகியோரது வேண்டுகோளின் பேரில், முத்தம்பட்டி தனியார் பால் பண்ணையின் சமூக பொறுப்புணர்வு திட்டத்தின் கீழ், பள்ளி சுற்றுச்சுவர் வண்ணம் தீட்டப்பட்டு, மகாத்மா காந்தி, காமராஜர், அம்பேத்கர், தந்தை பெரியார், டாக்டர் ராதாகிருஷ்ணன் அப்துல் கலாம், வ.உ.சிதம்பரனார், சுபாஷ் சந்திரபோஸ், விவேகானந்தர், அன்னை தெரசா, உள்ளிட்ட தேசிய தலைவர்கள் மற்றும் அவ்வையார், பாரதியார் உள்ளிட்ட பழம்பெரும் கவிஞர்களின் வண்ண ஓவியங்கள் தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி, மாணவர்களுக்கு அறநெறி புகட்டி சமூக வாழ்வியல் திறன் வளர்க்கும் திருக்குறள், பொன்மொழிகளும் எழுதப்பட்டுள்ளன. இதனால் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் புதுப்பொலிவு பெற்றுள்ளது.இதற்கு பள்ளி நிர்வாகத்திற்கும், தனியார் பால் பண்ணை நிறுவனம் மற்றும் ஓவியர் சுரேஷ் குழுவினருக்கும் இப்பகுதி கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.






