என் மலர்
சேலம்
- மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
- அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
மேட்டூர்:
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று விநாடிக்கு 1,098 கன அடியாக இருந்த நீர்வரத்து, இன்று சற்று அதிகரித்து, விநாடிக்கு 1,410 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.
அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் வேகமாக சரிந்து வருகிறது.
நேற்று 102.90 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம், இன்று மேலும் சரிந்து 102.87 அடியானது.
- செல்லம்மாள் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், வீட்டை தாழிட்டு விட்டு, பால் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றார்.
- வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த சேசன்சாவடி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி ராமச்சந்திரன். இவரது மனைவி செல்லம்மாள் (வயது 60). தனியாக வசித்து வரும் இவர், வீட்டை தாழிட்டு விட்டு, பால் வாங்குவதற்காக அருகிலுள்ள கடைக்கு சென்றார்.
மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து பார்த்தபோது, கதவு திறந்து கிடந்தது. வீட்டின் பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
இதனால் பதறிப்போன செல்லம்மாள், இதுகுறித்து வாழப்பாடி போலீசில் புகார் செய்தார். இவரது புகாரின் பேரில் வாழப்பாடி போலீசார் வழக்கு பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார்.
- இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
சேலம்:
சேலம் சீலநாயக்கன்பட்டி ராமயன் காடு பகுதியைச் சேர்ந்தவர் கங்காதர். இவரது மகன் ஹரிஹரன் என்கிற பிரவீன் (வயது 23). இவர் அதே பகுதியில் உள்ள பெருமாள் கோவில் மேட்டில் உள்ள தனது மாமா வெங்கடேசன் என்பவருக்கு சொந்தமான வெள்ளி பட்டறையில் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் ஹரிகரன் வேலை செய்து வந்த வெள்ளி பட்டறையில் பிணமாக கிடந்தார். இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அன்னதானப்பட்டி போலீசருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஹரிஹரன் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார், ஹரிஹரன் எப்படி இறந்தார்? என தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- “பனை” மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம். அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான “நுங்கு”.
- அக்னி வெயிலுக்கு இதமாக இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கருப்புச்சாறு, ஜூஸ் உள்ளிட்ட குளிர் பானங்களை வாங்கி அருந்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரியத்தில் "பனை" மரத்திற்கு ஒரு தனியிடமுண்டு. பல வகையான பொருட்களை நாம் பனை மரத்தில் இருந்து பெறுகிறோம். அதில் ஒன்று தான் சுவையான உணவு பொருளான "நுங்கு".
சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகவே கோடை வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. அவ்வப்போது, தலைகாட்டும் கோடை மழை வெயிலின் உக்கிரத்தை ஓரளவுக்கு தணிந்து, மக்களை குளிர்விக்கிறது. வாட்டி வதைக்கும் அக்னி வெயிலுக்கு இதமாக இளநீர், நுங்கு, தர்ப்பூசணி, கருப்புச்சாறு, ஜூஸ் உள்ளிட்ட குளிர் பானங்களை வாங்கி அருந்தும் சூழலுக்கு மக்கள் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சூழலால் ஜூஸ், கருப்புச்சாறு, குளிர்பானம் விற்கும் கடைகளில் மக்கள் அதிகமாக கூடுகின்றனர்.
அடிக்கும் வெயிலுக்கு என்னதான் குளிர்பானங்களை வாங்கி குடித்தாலும், இயற்கைப் பானங்களான இளநீர், நுங்குகளை வாங்கி சாப்பிடுவதையே மக்கள், வாகன ஓட்டிகள், பெண்கள் விரும்புகின்றனர். இதனால் நகரின் பல்வேறு இடங்களில் சாலையோரங்களில் தற்காலிக நுங்கு கடைகள் அதிகரித்துள்ளன. இந்த இடங்களில் வாங்கி சாப்பிடுவதுடன் குடும்பத்தினருக்கும் நுங்கு கண்களை சிலர் வாங்கிச் செல்கின்றனர்.
கோடை காலம் வந்துவிட்டாலே நமக்கு நியாபகம் வருவது நுங்கு தான். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரக்கூடியதில் நுங்கு முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. கோடையில் ஏற்படும் நாவறட்சி, நீர்சத்து குறைவு போன்றவைகளுக்கு நுங்கு சாப்பிடுவதால் பலன் கிடைக்கின்றன.
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றது. நுங்கை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும்.
ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள். இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும்.
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும். பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர் ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே தனிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளிர்ச்சியை ஏற்படுத்தும். கோடையில் வேர்குரு தொல்லையினால் அவதிப்படுபவர்கள் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும். பனைவெல்லம், பனங்கற்கண்டு, பனங்கிழங்கு, மட்டை, ஓலை என பனையில் இருந்து கிடைக்கும் அனைத்துப் பொருட்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. நுங்கில் வைட்டமின் பி,சி இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், சோடியம், மக்னீசியம், பொட்டாசியம், தயாமின், அஸ்காரபிக் அமிலம் மற்றும் புரதம் போன்ற சத்துகள் அதிகம் காணப்படுகின்றன. நுங்குக்கு கொழுப்பைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும் தன்மை அதிகம்.
பொதுவாக கோடை காலங்களில் வெப்பம் அதிகரிப்பதாலும், ஒரு சில கிருமிகள் இக்காலத்தில் பல்கி பெருகுவதாலும் சின்னம்மை, பெரியம்மை போன்ற நோய்கள் ஒரு சிலருக்கு ஏற்படுகிறது. இக்காலத்தில் உடலுக்கு வலு சேர்க்க கூடிய உணவாகவும், அம்மை நோய்களை விரைவாக நீக்க கூடிய உணவாகவும் நுங்கு இருக்கிறது. எனவே அம்மை நோய் தாக்கம் ஏற்பட்டவர்கள் சரியான அளவில் நுங்கு சாப்பிடுவது நல்லது.
ஆரம்ப காலங்களில் கிராமங்களில் இருந்து நகரத்துக்கு இடம் பெயர்ந்த பலரும் நுங்கு சாப்பிடுவதற்காகவே இன்றும் கோடை விடுமுறையில் கிராமத்து பக்கம் விசிட் அடிப்பது வழக்கம். சொந்தம் பந்தங்களை பார்த்து நலம் விசாரித்து விட்டு நுங்கு உள்ளிட்ட இயற்கையின் கொடைகளை ருசித்து பார்ப்பதுமே விடுமுறை பயணத்தின் நோக்கமாக இருக்கும். கடைக்கோடி கிராமங்களில், அடர்ந்து குலைதள்ளி சிரித்திருக்கும் பனை மரத்தடியில் அமர்ந்து புதிய நுங்கை பறித்து விரல் துளாவி சுவைப்பது அலாதி விருப்பமாகும். மேலும் அதனை சுளை சுளையாக எடுத்து பால் பனை வெல்லம் சேர்தது சாப்பிடுவது தேவாமிர்தம் போலிருக்கும். நினைத்தாலே நாவின் எச்சில் ஊறும் நுங்கு இயற்கையின் அற்புதம்.
- சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
- 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
- கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இருகாலூர் ஊராட்சி, செல்லப்பம்பட்டி கிராமம் கல்லேரியில், சங்ககிரி ஊராட்சி ஒன்றியம் மூலம் மீன்பிடிக்க குத்தகை ஏலம் விடப்பட்டது.
மீன்பிடி குத்தகைதாரர்கள் மீன்களுக்கு இரையாக கழிவுகளை ஏரியில் கொட்டி மீன் பிடித்து வந்ததாகவும், இதனால் ஏரியில் உள்ள நீர் மாசு ஏற்பட்டு துர்நாற்றம் வீசுவதாக கூறி, இருகாலுார் பொதுமக்கள் பலகட்ட போராட்டங்களை நடத்தினர்.
இதனையடுத்து, சங்ககிரி ஆர்.டி.ஓ. சவுமியா தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. அதில், மீன்பிடிதாரரர்கள் கழிவுகளை ஏரியில் கொட்ட கூடாது எனவும், மேலும், விவசாய கிணறு, ஏரி தண்ணீரை எடுத்து பரிசோதனை செய்து அதில் தண்ணீர் மாசு அடைந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என கூறினர்.
அதன்படி, நேற்று சேலம் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய உதவி பொறியாளர் விஜய்கோகுல் தலைமையிலான குழுவினர் கல்லேரிக்கு வந்து, ஏரி மற்றும் கிணறுகளின் நீர் மாசடைந்துள்ளதா என பரிசோதனை செய்ய நீரை சேகரித்து எடுத்துச் சென்றனர்.
இந்த ஆய்வின் போது, சங்ககிரி பி.டி.ஓ. முத்து, சேலம் மாவட்ட மீன்வள ஆய்வாளர் (பொறுப்பு) கலைவாணி, ஆர்.ஐ. குணசீலன், வி.ஏ.ஓ சித்ரா மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் உடனிருந்தனர்.
- ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
- இதையொட்டி கடந்த வாரம் 21-ந் தேதி திருவிழா தொடங்கியது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
சேலம்:
சேலம் குமாரசாமிப்பட்டி பகுதியில் மிகவும் பழமையான பிரசித்திபெற்ற ஸ்ரீ எல்லைப்பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்த ஆண்டு திருவிழா கடந்த வாரம் 21-ந் தேதி திருவிழா தொடங்கியது. எல்லையிடாரி அம்மன் கோவிலில் பூ சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி, தொடர்ந்து அம்மனுக்கு சக்தி அழைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலகு குத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தொடர்ந்து சிறப்பு அர்ச்சனை நடைபெற்றது.
குழந்தை பாக்கியம் பெறவும், குடும்பத்தில் சந்தோசம் நிலவவும், திருமணதடை நீங்கவும் என பல்வேறு வகையான வேண்டுதலை நிறைவேற்றித் தந்த அம்மனுக்கு, நேர்த்திக்கடனாக பக்தர்கள் முகம் மற்றும் முதுகின் பின்புறம் மிகவும் கூர்மையான கத்தியை குத்தி கொண்டும், நீளமான சூலத்தை வாயில் அலகு குத்திக் கொண்டனர்.
பட்டா கத்தி அலகு, விமான அலகு என பல்வேறு விதமான அலகுகளை உடலில் குத்திக்கொண்டு வின்சென்ட், குமாரசாமி பட்டி என நகரின் பல்வேறு வீதிகளின் வழியாக ஊர்வலமாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.
அப்பகுதியில் இருந்து ஏராளமான பகதர்கள் நீண்ட நேரம் காத்திருந்து, அலகு குத்தும் பக்தர்களை கண்டு பரவசம் அடைந்தனர். அதனை தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று மாலை தீச்சட்டி ஏந்துதல் மற்றும் நாளை தீமிதி விழா நடைபெறுகிறது.
- மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது.
- 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார்.
சேலம்:
மாற்றுத்திறனாளி களுக்கான 21-வது தேசிய தடகள போட்டிகள் மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் கடந்த வாரம் நடந்தது. இதில் தமிழகத்தில் இருந்து 80-க்கும் மேற்பட்ட வீரர்-வீராங்கனைகள் கலந்து கொண்டு விளையாடினர்.
தமிழக அணியில் இடம்பெற்று இருந்த சேலம் அழகாபுரத்தைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுதிறனாளி பாலாஜி ராஜேந்திரன் என்பவர் குண்டு எறிதல் போட்டியில் கலந்து கொண்டார்.
இதில் அவர் 10.18 மீட்டர் தூரம் குண்டு வீசி வெள்ளிப் பதக்கம் வென்றார். இதனையடுத்து சேலம் வந்த அவருக்கு, சேலம் மாவட்ட பாரா விளையாட்டு சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து இன்று அவர் சேலம் மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவரஞ்சனை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது பயிற்சியாளர்கள் சதீஷ்குமார், உலகநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார்.
- சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
சேலம்:
சேலம் டவுன் போலீஸ் நிலைய சரகத்திற்கு உட்பட்ட, திருச்சி மெயின் ரோட்டில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்திற்கு அருகே சுமார் 52 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் டவுன் போலீசார், அவரது உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதேபோல், சேலம் ஆனந்தா பாலம், தனியார் மருத்துவமனை அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. அவரது உடலை மீட்ட டவுன் போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர். பிணமாக மீட்கப்பட்ட 2 பேர் குறித்து அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
- கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
- கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
சங்ககிரி:
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே குப்பனூர் சத்யா நகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 38), கூலித்தொழிலாளி. இவர், கடந்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி தனது இருசக்கர வாகனத்தில் சங்ககிரியில் இருந்து எடப்பாடி நோக்கி சென்று கொண்டிருந்தார்.
அப்போது சத்யா நகர் பகுதியில் சாலையை கட க்கும்போது, எடப்பாடியில் இருந்து சங்ககிரி நோக்கி, கொளத்தூர் சின்னமேட்டூரை சேர்ந்த கருப்பண்ணன் (29) என்பவர் ஓட்டி வந்த புல்லட், செல்வம் ஓட்டிவந்த வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் செல்வம் பலத்த காயமடைந்து கோவை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து சங்ககிரி போலீஸ் எஸ்.ஐ. சுதாகரன் வழக்கு பதிவு செய்து சங்ககிரி குற்றவியல் நீதிமன்றம் எண் 1-ல் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி பாபு, விபத்துக்கு காரணமான கருப்பண்ண னுக்கு 1 ஆண்டு 3 மாதம் சிறை தண்டனையும், ரூ.2000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.
- கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர்.
- பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது.
சேலம்:
சேலம் அருகே கருப்பூர் சுங்கச்சாவடியில் போலீசார் நேற்று இரவு வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது பெங்களூ ரில் இருந்து தேனிக்கு வந்த தனியார் பஸ்சை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர்.
அப்போது அந்த பஸ்சில் ஒரு மூட்டையில் கஞ்சா கடத்தி கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதை அடுத்து பஸ் டிரை வரிடம் விசாரித்தபோது, பெங்களூரில் இருந்து கஞ்சா மூட்டையை பஸ்சில் ஏற்றி விட்ட நபர்கள், பணம் கொடுத்து தேனியில் இறக்கி வைக்குமாறு கூறியது தெரியவந்தது.
இதை அடுத்து பஸ் டிரைவரான தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் என்ப வரை கைது செய்தனர். மேலும் ஒரு மூட்டை கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
- 6 மாதத்திற்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், தந்தை சொத்தில் தனக்கும் சரிபாதி பாகம் கொடுக்குமாறு பலமுறை தனது அண்ணன் ராமசாமியிடம் வரதராஜன் கேட்டுள்ளார்.
- ராமசாமி கண்டுகொள்ளாததால் மனமுடைந்த விவசாயி வரதராஜன், நேற்று மன்னாயக்கன்பட்டி சிவாயநகர் அருகிலுள்ள செல்போன் டவரில் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன் (வயது 54). இவரது தந்தை பெருமாளுக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.
இந்த சொத்தை இளைய மகனான வரதராஜனுக்கு கொடுக்காமல், மூத்த மகன் ராமசாமிக்கே இவரது தந்தை எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 6 மாதத்திற்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், தந்தை சொத்தில் தனக்கும் சரிபாதி பாகம் கொடுக்குமாறு பலமுறை தனது அண்ணன் ராமசாமியிடம் வரதராஜன் கேட்டுள்ளார்.
இதை ராமசாமி கண்டுகொள்ளாததால் மனமுடைந்த விவசாயி வரதராஜன், நேற்று மன்னாயக்கன்பட்டி சிவாயநகர் அருகிலுள்ள செல்போன் டவரில் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டவரில் இருந்து இறங்கி வருமாறு வரதராஜனிடம் தெரிவித்துள்ளனர்.
ஆனால் அவர் இறங்க மறுத்ததால், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி ஆலோசனையின் பேரில், தீயணைப்பு படைவீரர் ஒருவர் மற்றும் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ ஒருவரும் வரதராஜனிடம் பேச்சு கொடுத்தபடியே டவரில் ஏறி, 2 மணி போராட்டத்திற்கு பிறகு, வரதராஜனை கயிற்றில் தூரி கட்டி லாவகமாக மீட்டனர்.
சொந்தப் பிரச்சினைக்காக செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பது சட்டப்படி குற்றம். சொத்து பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்தி கொடுப்பதாக போலீசார் உறுதி அளித்து, விவசாயி வரதராஜனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.






