என் மலர்
சேலம்
- கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது.
- இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர்.
சேலம்:
சேலம் பூ மார்க்கெட்டுக்கு சேலம், தர்மபுரி, ஓசூர், பெங்களூர், நாமக்கல் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகின்றன. இந்த பூக்களை சேலம் மற்றும் பக்கத்து மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் வாங்கி செல்கிறார்கள். இந்த நிலையில் பூக்களின் விலை நாளுக்கு நாள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு 250 ரூபாய்க்கு விற்ற மல்லிகை பூ ஒரு கிலோ நேற்று ரூ. 360-க்கு விற்கப்பட்டது. இன்று விலை மேலும் உயர்ந்து ஒரு கிலோ மல்லிகை பூ 500 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஆனாலும் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் முகூர்த்த நாளைெயாட்டி அதிக அளவில் மல்லிகை பூக் களை வாங்கி செல்கின்றனர். மற்ற பூக்களின் விலை விவரம் ஒரு கிலோவுக்கு வருமாறு:- முல்லை ரூ.360 ஜாதிமல்லிகை ரூ. 260, காக்கட்டான் ரூ.320, கலர் காக்கட்டான் ரூ.280 ,மலைக்காக்கட்டான் ரூ.320, அரளி ரூ.160, வெள்ளைஅரளி ரூ.260, மஞ்சள் அரளி ரூ.260, செவ்வரளி ரூ.260, ஐ.செவ்வரளி ரூ.180, நந்தியாவட்டம் ரூ.140, சி.நந்திவட்டம் ரூ.200, சம்பங்கி ரூ.200, சாதா சம்பங்கி ரூ.200.
- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
- www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தால் 3,359 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 17.09.2023 ஆகும்.
இந்த தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பு சேலம் கோரிமேடு பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வருகிற 29-ந் தேதி காலை 10 மணியளவில் தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சி வகுப்பு ஏற்கனவே போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட உள்ளது. மேலும் பாடக்குறிப்புகள் இலவசமாக வழங்கப்படுவதோடு மாதிரித் தேர்வுகளும் நடத்தப்படவுள்ளன.
தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இப்பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயன்பெறலாம். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.
- சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது.
- இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.
சேலம்:
சேலம் 4 ரோடு ஓமலூர் சாலையில் டி.வி.எஸ். பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடையில் வைக்கப்பட்டிருந்த 10 கிராம் எடையுள்ள தங்க டாலர் மாயமானது.
இதுகுறித்து அந்த பிரிவின் மேலாளர் சரவணன் (39) என்பவர் பள்ளப்பட்டி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்தனர்.
இதில் டாலர் வைக்கப்பட்டு இருந்த பிரிவில் வேலை பார்க்கும் சேலம் சூரமங்கலம் ஜாகிர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த கார்த்திக் (38) என்பவர் டாலரை திருடியது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து கார்த்திக்கை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டபோது, தங்க டாலரை 5 ரோடு பகுதியில் உள்ள ஒரு நகை அடமான கடையில் அடமானம் வைத்தது தெரிய வந்தது.
கைது செய்யப்பட்ட கார்த்திகை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
- சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் இவரது பேத்தி மைஸிகாபேரன் சர்வன் ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
- பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
அன்னதானப்பட்டி;
சேலம் செவ்வாய்பேட்டை, அப்பாசாமி தெருவை சேர்ந்தவர் நடராஜன் (வயது 56). இவரது பேத்தி மைஸிகா (9), பேரன் சர்வன் (5) ஆகிய 2 பேரும் லைன்மேட்டில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடராஜன் தனது பேரன், பேத்தியை மொபட்டில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவர் அன்னதானப்பட்டி 4 ரோடு சந்திப்பு பகுதியில் சென்ற போது, பின்னால் வந்த சரக்கு லோடு ஆட்டோ திடீரென மொபட் மீது மோதியது. இதில் நடராஜன், சிறுமி, சிறுவன் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கள்ளி மலர் வகையை சேர்ந்த ‘பிரம்ம கமலம்’ செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்கள் இறை வழிபாட்டிற்கு சிறந்ததாக நம்பப்படுகிறது.
- கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழையும் அதிகளவில் பெய்யுமென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
சேலம்:
வறண்ட நிலங்களில் வளரும் கள்ளி மலர் வகையை சேர்ந்த 'பிரம்ம கமலம்' செடிகளில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் வெண்ணிற மலர்கள் இறை வழிபாட்டிற்கு சிறந்ததாக நம்பப்படுகிறது.
இந்த பிரம்ம கமலம் மலர்களைப் போலவே, வாழப்பாடி பகுதி கிராமங்களில் தரிசு நிலங்களில் காணப்படும் கள்ளிச் செடிகளிலும் ஆண்டுக்கு ஒரு முறை வெண்ணிறத்தில் மிக அழகாக தோற்றமளிக்கும் கள்ளி மலர்கள் பூத்து வருகின்றன. கள்ளிச் செடிகள் அதிகளவில் பூத்தால், மழையும் அதிகளவில் பெய்யுமென இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
வாழப்பாடி பகுதியில், கல்யாணகிரி, சிங்கிபுரம், தமையனுார், மன்னாயக்கன்பட்டி கிராமங்களில், மானாவரி விளைநிலங்களின் வேலியோரங்களிலும், கல்லாங்குத்து தரிசு நிலங்களிலும் காணப்படும் கள்ளிச்செடிகளில், தற்போது வெண்ணிற மலர்கள் ஏராளமாக பூத்துக் குலுங்குகின்றன.
பிரம்ம கமலம் மலரை போல இரவில் பூத்து பகலில் வாடும் இந்த கள்ளி மலர்களை, ஆன்மிக பக்தர்களும், பொதுமக்களும் பிரமிப்போடு பார்த்து செல்கின்றனர். சிலர் இந்த கள்ளி மலர்களை பறித்துச் சென்று கிராம தெய்வங்களுக்கு பூஜை செய்து வருகின்றனர்.
- குடிபோதையில் 3 வாலிபர்கள் கருங்கல்லால் தாக்கி விட்டதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார்.
- மருந்து சீட்டில் எழுதிய மாத்திரையை வழங்காமல் மாற்று மாத்திரையை பயிற்சி மாணவர் வழங்கியுள்ளார்.
சேலம்:
சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 30 படுக்கை வசதியுடன் கூடிய அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. தினந்தோறும் புறநோயாளிகளாக 200-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக வருகின்றனர்.
நேற்று முன்தினம் குடிபோதையில் 3 வாலிபர்கள் கருங்கல்லால் தாக்கி விட்டதாக கூறி ஓய்வுபெற்ற அரசு ஊழியரான கிருஷ்ணமூர்த்தி என்பவர் சிகிச்சைக்காக சென்றுள்ளார். அவருக்கு கையில் தையல் போடுவதற்காக டாக்டர் பரிந்துரை செய்துள்ளார். அப்போது பணியில் இருந்த பல்நோக்கு மருத்துவ பணியாளர் நளினி என்பவர் கிருஷ்ணமுர்த்திக்கு தையல் போட்டதாக கூறப்படுகிறது.
மேலும் மருந்து சீட்டில் எழுதிய மாத்திரையை வழங்காமல் மாற்று மாத்திரையை பயிற்சி மாணவர் வழங்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்டு உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது. இது தொடர்பாக சேலம் மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் பானுமதி கெங்கவல்லி அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர் செந்தில்குமாரிடம் விளக்கம் கேட்டுள்ளார். உரிய விளக்கம் அளித்ததும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என இணை இயக்குனர் பானுமதி தெரிவித்துள்ளார்.
- வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.
- தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
காடையாம்பட்டி:
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே கணவாய்புதூர் ஊராட்சியில் ஏரி உள்ளது. இந்த ஏரியில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவரின் உடலை மீட்ட தீவட்டிப்பட்டி போலீசார் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வாலிபர் இறந்து கிடந்த ஏரியின் அருகே மொபட், துணிகள் கிடந்தது.
விசாரணையில் இறந்து கிடந்தவர் ஆந்திர மாநிலம் பாலசேரன் பகுதியை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் பாலசுப்பிரமணியன் (வயது 32) என்பது தெரியவந்தது. இதையடுத்து தற்கொலை வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் உடலை ஒப்படைத்தனர்.
இந்த நிலையில் வாலிபர் இறப்பு குறித்து நேற்று சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவட்டிப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தனர். மேலும் சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் போலீஸ் நிலையத்திற்கு வந்து விசாரணை நடத்துகிறோம் என்றனர்.
- தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திலக் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார்.
- சிவராமன், மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சேலம்:
சேலம் கன்னங்குறிச்சி இந்திரா நகரை சேர்ந்தவர் சிவராமன் (வயது 85). இவர் பெங்களூரு விமான நிலையத்தில் அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி வசந்தா (75). இவர்களது மகன் திலக் (வயது 38). என்ஜினீயரிங் படித்துள்ள இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
இந்த நிலையில் கொரோனாவுக்கு பின்பு வீட்டில் இருந்தபடி சாப்ட்வேர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார்.
திலக்குக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு மகேஷ்வரி (33) என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு சாய்கிரிசாந்த் (6) என்ற மகன் உள்ளான்.
இந்த குழந்தை மனவளர்ச்சி குன்றிய நிலையில் கடுமையாக அவதிப்பட்டு வந்தது.
ஒரே மகன் என்பதால் பாசத்துடன் வளர்த்து வந்தனர். ஆனால் சாய்கிரிசாந்த்க்கு அடிக்கடி உடல் நிலை பாதிக்கப்பட்டு வந்தது. இதனால் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர். மகனை குணப்படுத்த பல்வேறு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் குணப்படுத்த முடியவில்லை.
இதற்கிடையே திலக் மருத்துவ செலவு, குடும்ப செலவிற்கு பலரிடம் பணம் கடன் வாங்கினார். ஆன்லைன் வர்த்தகம் தொடங்க கடன் வாங்கினார். இதில் பலத்த நஷ்டம் ஏற்பட்டது. இதனால் கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். கடன் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்டு தொல்லை கொடுத்து வந்தனர்.
இதனால் திலக் மற்றும் அவரது குடும்பத்தினர் என்ன செய்வதென தெரியாமல் தவித்தனர்.
இது ஒருபுறம் இருக்க மறுபுறம் குழந்தையை குணப்படுத்த முடியவில்லையே என சோகத்தில் மூழ்கினர். இதனால் திலக் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதன்படி நேற்று இரவு திலக் தனது பெற்றோர் சிவராமன்-வசந்தா, மனைவி மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோருக்கு தண்ணீரில் விஷம் கலந்து கொடுத்தார். அவர்கள் விஷத்தை குடித்தனர். இதையடுத்து திலக் வீட்டின் மேல் மாடிக்கு சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு திலக் பெங்களூருவில் உள்ள தனது சகோதரர் சந்துருவுக்கு செல்போன் வாட்ஸ் அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். அதில் தனது குழந்தையை குணப்படுத்த முடியவில்லை. மேலும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்ள போகிறோம் என குறிப்பிட்டு இருந்தார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சந்துரு, அக்கம் பக்கத்தினருக்கும், நண்பர்களுக்கும் செல்போனில் தகவல் தெரிவித்தார்.
இதனிடையே விஷம் குடித்த சிவராமன், மகேஷ்வரி, சாய்கிரிசாந்த் ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். இதில் வசந்தா மயங்கி நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இன்று காலை அக்கம் பக்கத்தினர், அங்கு சென்று கதவை திறக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து கன்னங்குறிச்சி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் துணை கமிஷனர் கவுதம் கோயல் மற்றும் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த வசந்தாவை உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவசர வார்டில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிவராமன், மகேஷ்வரி, மகன் சாய்கிரிசாந்த் ஆகியோர் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதற்கிடையே வீட்டில் சோதனை மேற்கொண்டதில் உருக்கமான கடிதம் சிக்கியது. அதிலும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம் என உருக்கமாக கூறியுள்ளனர். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம்
சேலம் சூரமங்கலம் அருகே உள்ள ஜாகீர் ரெட்டிபட்டி இண்டேன் நகர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி (வயது 24) இவர் அதே பகுதியில் செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார்.
சம்பவத்தன்று இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற கோபி மறுநாள் காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோபி உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த விலை உயர்ந்த செல்போன்கள் 3 மற்றும் கல்லாவில் இருந்த ரொக்கம் ரூ.15 ஆயிரம் கொள்ளை போயிருப்பது தெரியவந்தது.இது குறித்து கோபி சூரமங்கலம் போலீசில் புகார் செய்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கடையில் திருடிய ஜாகீர் அம்மாபாளையம் பகுதியை சேர்ந்த செந்தில்குமார் மகன் சசிகுமார் (20) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடந்த 20-ந் தேதி கடை மேலாளர் நகையை சரிபார்க்கும் போது அதில் 10 கிராம் நகை குறைவாக இருந்தது
- சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை அங்கு வேலை செய்யும் கார்த்திக் எடுத்தது தெரிய வந்தது.
சேலம்
சேலம் ஓமலூர் மெயின் ரோடு டி.வி.எஸ் பஸ் நிறுத்தம் அருகே பிரபல நகைக்கடை செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையில் சூரமங்கலம் ஜாகீர் அம்மாப்பாளையத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் கார்த்திக் (வயது 38) என்பவர் வேலை பார்த்து வருகிறார். கடந்த 20-ந் தேதி கடை மேலாளர் நகையை சரிபார்க்கும் போது அதில் 10 கிராம் நகை குறைவாக இருந்து தெரியவந்தது. இதையடுத்து சி.சி.டி.வி கேமிராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்த போது நகையை அங்கு வேலை செய்யும் கார்த்திக் எடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து பள்ளப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர்.அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்தியதில் அவர் நகையை திருடி வேறு இடத்தில் அடகு வைத்தது தெரியவந்தது.தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலெக்டர் அலுவலக 2-ம் தள கூட்ட அறை எண்.215-ல் மாதாந்திர விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.
- இந்த தகவலை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
சேலம்:
சேலம் கிழக்கு கோட்ட தபால் அலுவலக தலைமை கண்காணிப்பாளர் அருணாசலம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-இந்திய தபால் துறை தீனதயாள் ஸ்பேர்ஸ் யோஜனா என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் மூலம் மாணவ, மாணவிகளுக்கு தபால் தலை சேகரிப்பு குறித்த வினாடி, வினா போட்டி நடத்தப்பட உள்ளது. 6 முதல் 11-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் கலந்து கொள்ளலாம். மேலும் அவர்கள் தபால் தலை சேகரிப்பு மன்றம் அல்லது தபால்தலை வைப்பு கணக்கு உள்ளவராகவோ இருக்க வேண்டும். விண்ணப்படிவம் www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் அடுத்த மாதம் (செப்டம்பர்) 8-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். போட்டி அக்டோபர் மாதம் 15-ந்தேதி நடக்கிறது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
- கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
- சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
எடப்பாடி:
சேலம் மாவட்டம் எடப்பாடி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட ஆலச்சம்பாளையம் மணியக்காரன் வளவு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் (56). இவரது மகன் நந்தீஸ்வரன் (14). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் கோவிந்தன் நேற்று முன்தினம் தனது நண்பரான அதே பகுதியை சேர்ந்த சித்தையன், மகன் நந்தீஸ்வரன் ஆகியோருடன் எடப்பாடி அருகே உள்ள பெரிய ஏரிக்கு மீன்பிடிக்க சென்றுள்ளார்.
அங்குள்ள ஏரிக்கரையில் மகனை அமர வைத்துவிட்டு நண்பர் சித்தையனுடன் கோவிந்தன் ஏரிக்குள் சென்று மீன் பிடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
மாயம்
மீன்பிடித்து விட்டு கரைக்கு திரும்பிய கோவிந்தன் அங்கே மகனை காணாமல் திடுக்கிட்டார். பின்னர் தனது உறவினர்களுடன் ஏரிக்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தேடினார்.
எங்கு தேடியும் நந்தீஸ்வரன் கிடைக்காத நிலையில் இது குறித்து கோவிந்தன் எடப்பாடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன பள்ளி மாணவன் நந்தீஸ்வரனை தீவிரமாக தேடி வருகின்றனர்.






