என் மலர்
நீங்கள் தேடியது "Written Test for the post of Sub-Inspector"
- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்த தேர்வு இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
- 10 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு 1 மணி வரை நடைபெற்றது. தேர்வெழுதியவர்கள் சி.சி.டி.வி. காமிரா மூலம் கண்காணிக்கப்பட்டனர்.
சேலம்:
தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்த தேர்வு இன்றும், நாளையும் மாநிலம் முழுவதும் நடக்கிறது.
10 மையங்கள்
இதையொட்டி சேலம் மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் 10 மையங்களில் இந்த தேர்வு நடக்கிறது. இதில் புறநகரில் 8 ஆயிரத்து 95 பேரும், மாநகரில் 3 ஆயிரத்து 89 பேரும் என மொத்தம் 11 ஆயிரத்து 184 பேர் எழுதுகிறார்கள்.
ெ
கடும் கட்டுப்பாடு
தேர்வு எழுத வந்த ஆண் மற்றம் பெண் விண்ணப்ப தாரர்கள் அனைவரும் தீவிர சோதனைக்கு பின்னரே தேர்வு மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் செல்போன் உள்பட எலக்ட்ரானிக் பொருட்கள் தேர்வு மையத்திற்கு கொண்டு செல்ல அனும திக்க வில்லை. தேர்வு எழுதுபவர்களுக்கு தேவை யான குடிநீர் மற்றும் கழி வறை உள்பட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
உதவி ஆய்வாளர் களுக்கான எழுத்து தேர்வு நடைபெற்ற மையங்களில் மாநகர போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் கபிலன் தலைமை யிலான போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் சிறப்பு குழுவினரும் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
நாமக்கல்
இதேபோல் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்லூரியில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வில் 3800 ஆண்கள், 1124 பெண்கள் என மொத்தம் 4924 பேர் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை எழுதினர்.






