என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "salemdistrict:காமலாபுரம் அரசு பள்ளியில் காலை உணவு திட்டம் தொடக்கம் Breakfast program started at Kamalpuram Government School"

    • சர்க்கரை பொங்கல், கிச்சடி, காய்கறி பிரியாணி ஆகிய உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது.
    • 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்ப யன்பெறுகின்றனர்.

    சேலம்

    சேலம் மாவட்டத்தில் ஓமலூர் வட்டம், காமலாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கபள்ளியில் முதல்-அமைச்சரின் விரிவுபடுத்தப்பட்ட காலை உணவு திட்டத்தை கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.

    சர்க்கரை பொங்கல், கிச்சடி, காய்கறி பிரியாணி ஆகிய உணவு வகைகள் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டது. கலெக்டர் கார்மேகம், எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி ஆகியோர் குழந்தைகளுடன் அமர்ந்து உணவை சாப்பிட்டனர்.

    தொடர்ந்து நடைபெற்ற விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசியதாவது:-

    1,418 பள்ளிகள்

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் உன்னத நோக்குடன் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவு திட்டத்தினை அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும்

    விரிவுபடுத்தியுள்ளார். சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை 1,418 பள்ளிகளில் பயின்றுவரும் 1 லட்சத்து 1,318 மாணவ, மாணவிகள் இத்திட்டத்தில்ப யன்பெறுகின்றனர். தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகிறார்கள். எவ்வழி யில் கல்வி பயின்று வரு கிறோம் என்பது ஒரு தடை

    யாக இருக்காது. இதற்கு எடுத்துக்காட்டாக சந்தி ரயான் 3 திட்ட இயக்குனர் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தொடக்கப் பள்ளியில் பயின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கண்காணிப்பு

    முதல்-அமைச்சரின் காலை உணவுத் திட்டம் மாவட்டத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்திடும் வகையில் நாள்தோறும் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    இத்திட்டத்தை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவரும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் களப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. பேசுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர், பள்ளிக் குழந்தைகள் ஊட்டச்சத்தோடும், வலிமையாக வளரவும், தங்குதடையின்றி பெற்றோர் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கும், குழந்தைகள் காலை உணவு உண்ணாமல் பள்ளிக்கு வரக்கூடாது என்பதற்காகவும் வரலாற்றுச் சிறப்புமிக்க காலை உணவுத்திட்டத்தை செயல்படுத்தி உள்ளார்.

    சேலம் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காமலாபுரம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளியாகும்.

    இச்சிறப்புமிக்க இப்பள்ளியைத் தேர்வு செய்த மாவட்ட கலெக்ட ருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    இந்த நிகழ்ச்சியில் மேட்டூர் ஆர்.டி.ஓ தணி காச்சலம், மாவட்ட ஒருங்கி ணைப்பு அலுவலர் ரேச்சல் கலைச்செல்வி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் சந்தோஷ், ஓமலூர் தாசில்தார் புருசோத்தமன், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் செல்வி ராஜா, காமலாபுரம் ஊராட்சிமன்றத் தலைவர் பழனிக்கவுண்டர் உட்பட தொடக்கப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    ×