என் மலர்
உள்ளூர் செய்திகள்

சேலம் கலெக்டர் அலுவலக கேண்டினில் பாம்பு புகுந்த காட்சி.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கேண்டினில் பாம்பு புகுந்ததால் பரபரப்பு
- பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பேர் சிற்றுண்டி, மற்றும் தேனீர் அருந்துவது வழக்கம்.
- உணவகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உணவகம் செயல்பட்டு வருகிறது.
இந்த உணவகத்தில் தினசரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பல பேர் சிற்றுண்டி, மற்றும் தேனீர் அருந்துவது வழக்கம். இந்த நிலையில் இன்று உணவகத்திற்குள் பாம்பு ஒன்று புகுந்ததால் உணவகத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த நபர்கள் பதறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அங்கிருந்த நபர் ஒருவர் உள்ளே புகுந்த பாம்பை உணவகத்தை விட்டு வெளியே துரத்தினார்.
இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






