என் மலர்tooltip icon

    ராணிப்பேட்டை

    • பராமரிப்பு பணிகள் நடக்கிறது
    • மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்

    சோளிங்கர்:

    சோளிங்கர் துணை மின் நிலையம் மற்றும் மேல் வெங் கடாபுரம் துணை மின்நிலை யங்களில் அத்தியாவசிய மின் சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்ப தால் நாளை (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சோளிங்கர், எறும்பி, தாடூர், கல்பட்டு, தாளிக்கால், போளிப்பாக் கம், பழையபாளையம், தப் பூர், பாண்டியநல்லூர், பாணாவரம், சோமசுமுத்தி ரம், கரிக்கல், மேல்வெங்கடா புரம், ஜம்புகுளம், கொடைக் கல், சூரை, மருதாளம், தலங்கை, பொன்னை, ஒட்ட நேரி, கீரைசாத்து, மிளகாய் குப்பம், எஸ்.என்.பாளையம், கே.என். பாளையம், பொன்னை புதூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் மின்நிறுத்தம் செய்யப் படும்.

    இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித் துள்ளார்.

    • ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்
    • 2 பேர் சேர்ந்து தாக்கினர்

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்தவர் இளங்கோ. இவர், கீழ்விஷாரம் சுடுகாட்டுக்கு செல்லும் பாதையில் இயற்கை உபாதை கழிக்க சென்றார். அப்போது அங்கு இருந்த மேல்விஷாரம் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (வயது 20), 18 வயதுடைய சிறுவன் ஆகிய இருவரும் மதுகுடிப்பதற்காக அங்கே இருந்து உள்ளனர்.

    அப்போது இவர்கள் இருவரும் இளங்கோவிடம் தகராறில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் தகராறு முற்றி அவர்கள் 2பேரும் சேர்ந்து இளங்கோவை சரமாரியா கதாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்த புகாரின் பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழரசன் மற்றும் சிறுவனை கைது செய்தனர்.

    • போலீஸ் பாதுகாப்பு
    • உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் சுயம்பு லிங்கங்கள் ,சப்தகன்னிகள்,முருகர் கோவில், பெரிய அளவில் சிவலிங்கம் ஆகியவை உள்ளன.

    இந்நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக லாலாப்பேட்டை ஊராட்சி மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சியை சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

    இதை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.

    இந்த நிலையில் இன்று சித்ரா பவுர்ணமி விழா நடத்துவதற்கும், யாகம், பஜனை,அன்னதானம், போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இருதரப்பினருக்கும் தடை விதித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

    இதனையடுத்து இன்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு காஞ்சனகிரி மலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • நடவடிக்கை எடுக்க ஒன்றிய குழு கூட்டத்தில் வலியுறுத்தல்
    • அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தனர்

    அரக்கோணம்:

    நெமிலி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் தீனதயாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் பேசிய அரிகலபாடி ஒன்றியக்குழு அதிமுக உறுப்பினர் வினோத்குமார் உறுப்பினர்களுக்கான வார்டு மேம்பாட்டு நிதியாக ரூ.10 லட்சம் வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

    இதற்கு பதில் அளித்த தலைவர் பெ.வடிவேல் பொதுநிதியிலிருந்து ரூ.5 லட்சம் தான் வழங்க முடியும் என்றார்.

    பின்னர் பேசிய பாட்டாளி மக்கள் கட்சியின் அசநெல்லிகுப்பம் ஒன்றியக்குழு உறுப்பினர் சங்கீதா அசநெல்லிகுப்பத்தில் அனுமதியின்றி சாயபட்டறை இயங்கி வருகின்றது.

    இதிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் கொசஸ்தலை ஆறு, அசநெல்லிகுப்பம், நெல்வாய் கண்டிகை பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை மாசுபடுத்துவதால் குடிநீர் ஆதாரங்கள் மற்றும் விவசாய கிணறுகளில் தண்ணீர் மாசடைகின்றது.

    இது குறித்து கலெக்டர், மாசு கட்டுபாட்டு அதிகாரிகளிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகையால் இந்த ஒன்றியக்குழு கூட்டத்தில் நிலத்தடி நீர் மாசுபடுவதை தடுக்க தீர்மானம் நிறைவேற்றி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பேசினார்.

    ஒன்றியக்குழு கூட்டத்தில் பள்ளி கட்டிடங்கள், பள்ளி கழிவறைகள், குடிநீர், சுகாதாரம் மற்றும் சாலை வசதிகள் குறித்து பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும்
    • குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டையில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திலிருந்து கடந்த மாதத்தில் 4 சிறுவர்கள் இல்லத்தை விட்டு வெளியேறி சென்றனர். பின்னர் அவர்களை போலீசார் மீட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைத்தனர்.

    இதை தொடர்ந்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் , ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதி தலைமையில் நேற்று அரசினர் குழந்தைகள் இல்லத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    ஆய்வை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர்.ஆர்.ஜி.ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அந்த வகையில் ராணிப்பேட்டையில் கடந்த மாதம் 4 சிறுவர்கள் சிறுவர் இல்லத்தில் இருந்து தப்பிச்சென்றதை தொடர்ந்து உடனடியாக அவர்கள் மீட்கப்பட்டு மீண்டும் இல்லத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் மன அழுத்தம் முக்கிய காரணமாக உள்ளது.

    குழந்தைகளின் மன அழுத்தத்தை போக்கும் பயிற்றுநர்கள் மையத்தில் 3 நபர்கள் உள்ளனர். குழந்தைகள் இல்லத்தில் கூடுதல் மனநல ஆலோசர்களை பணியமர்த்த வேண்டும், குழந்தைகளின் மனநலத்தை சீரமைக்க யோகா பயிற்சிகள், விளையாட்டு பயிற்சிகள், திறனை வெளிக்கொண்டுவரும் பயிற்சிகளை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துக்காட்டாக குழந்தைகள் யாரும் தப்பி போகாமல் மையங்களிலே சிறந்த முறையில் வளர நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.

    குழந்தைகள் இல்லம், கூர்நோக்கு இல்லங்கள். நல்வழிப்படுத்தும் இல்லங்களாக மாற்றிட குழந்தைகளின் மனநிலை மாற வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    அப்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அனுசியா, குழந்தைகள் நல குழும தலைவர் வேதநாயகம் உள்பட பலர் உடனிருந்தனர்.

    • போலீசார் விசாரணை
    • மது வாங்கி தராததால் ஆத்திரம்

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை அடுத்த புதிய அக்ராவரம் பகுதியை சேர்ந்தவர் தயாளன்(வயது 38) சென்னையில் வெல்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் உமாநாத்(32) டிரைவர்.

    இந்த நிலையில் உமாநாத் , தயாளனிடம் மது வாங்கி கொடு என கேட்டதாகவும், அதற்கு தயாளன் மறுத்த தாகவும் கூறப்படுகிறது. இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த உமாநாத் இரும்பு ராடால் தயாளனை தாக்கியுள்ளார்.

    இதில் காயமடைந்த தயாளன் ராணிப்பேட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் குறித்து தயாளன் கொடுத்த புகாரின் பேரில் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து உமாநாத்தை கைது செய்தனர்.

    • கலெக்டர் தகவல்
    • சுதந்திர தின விழாவில் வழங்கப்படும்

    ராணிப்பேட்டை:

    சுதந்திர தின விழாவில் வழங்கப்படும் முதல் அமைச்சரின், இளைஞர் மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என ராணிப்பேட்டை கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார். இது தொடர்பான செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சமுதாய வளர்ச்சிக்கு சேவை செய்யும் இளைஞர்களின் பணியை அங்கீகரிக்கும் பொருட்டு கடந்த 2015-ம் ஆண்டு முதல் "முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது" ஒவ்வொரு ஆண்டும் சுதந்திரதினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருது ரூ.1 லட்சம் பாராட்டு பத்திரம் மற்றும் பதக்கம் ஆகியவை உள்ளடக்கியது.

    அதன்படி, 2023ம் ஆண்டிற்கான முதல் அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திரதின விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்பட உள்ளது.

    இந்த விருது பெற 15 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். கடந்த ஏப்ரல் 1, 2022 (1.4-2022) அன்று 15 வயது நிரம்பியவராக வரும்,மார்ச் 31, 2023 (31.3.2023) அன்று 35 வயதுக்குள்ளானவராகவும் இருத்தல் வேண்டும்.

    கடந்த நிதியாண்டில் (2022-2023) மேற்கொள்ள ப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும், விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்தபட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும்,சான்றும் இணைக்கப்பட வேண்டும்.

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் சேவை செய்திருக்க வேண்டும்.அவ்வாறு செய்த தொண்டு கண்டறியப்படக் கூடிய தாகவும், அளவிடக்கூடியதாகவும் இருத்தல் வேண்டும்.

    மத்திய , மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள் கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கஇயலாது, விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் ஏற்று கொள்ளப்படும்.

    இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வருகிற 31-ந் தேதி மாலை 4 மணிக்குள் வர வேண்டும். விண்ணப்பங்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் இணைய தளமான www.sdat.tn.gov.in ல் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்பித்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
    • வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை

    அரக்கோணம்:

    அரக்கோணம் பழனி பேட்டையில் தினத்தை முன்னிட்டு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

    தொழிலாளர் கூட்டமைப்பு மாநில தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். ரமேஷ், கிறிஸ்டோபர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் வி.பிரகாஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

    வ.உ.சி, சிங்காரவேலர், திரு.வி.க ஆகியோர் உருவப்படத்தை திறந்து வைத்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் கொடியை ஏற்றி சிறப்புரையாற்றினர்.

    கூட்டத்தில் ஆன்லைன் தொழிற்சங்க கல்வியை உருவாக்கிடவும், நலிவடைந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்கு ஒன்றுபட்ட தொழிலாளர் இயக்கத்தின் சார்பாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திடவும், ஒரு தொழிலாளர்கள் ஒரு லட்சம் பேர் இயக்கத்தில் சேர்க்க வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முடிவில் மாதவன் நன்றி கூறினார்.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    அரக்கோணம்:

    அரக்கோணம் அடுத்த கைனூர் ஊராட்சியில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கிராம சபை கூட்டம் பஞ்சாயத்து தலைவர் உமாமகேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.

    கிராம சபை கூட்டத்தில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதில் ஊராட்சி பஞ்சாயத்து துணைத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் கமலக்கண்ணன், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, கீதா, புவனேஸ்வரி, மீனாட்சி, சங்கர் கணபதி, புருஷோத்தனி, விமலா, துரைசாமி முன்னாள் துணை தலைவர் ரமேஷ் உள்பட150- க்கும் மேற்பட்ட கிராம பெண்கள் கலந்து கொண்டனர்.

    • 1½ கிலோ பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    அரக்கோணம்:

    அரக்கோணம் டவுன் போலீசார் மங்கம்மாபேட்டை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பைக்கில் வந்த 3 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    பின்ன ர் அவர்களின் சோதனை செய்தபோது 1½ கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது.

    விசாரணையில் அவர்கள் காஞ்சிபுரத்தை சேர்ந்த புருஷோத்தமன் (வயது 34), ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ராஜசேகர் (32), தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த கண்ணவேணி மகேஷ் (27 ) என்பது தெரிய வந்தது.

    வாலிபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கலெக்டரிடம், பா.ம.க. வினர் கோரிக்கை மனு
    • பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது

    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட பா.ம.க.செயலாளர் சரவணன் தலைமையில் கட்சி நிர்வாகிகள் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் வளர்மதியிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    வட தமிழ்நாட்டு மக்களின் வேளாண்மைக்கும் குடிநீர் உள்பட அன்றாட பயன்பாட்டுக்கும் உயிர் ஆதாரமாக பாலாறு இருந்து வருகிறது.

    கோடிக்கணக்கான ஏக்கர் வேளாண்மை நிலங்களும்,பொது மக்களும் பாலாற்றின் நிலத்தடி நீரை நம்பிய வாழ்கின்றனர்.

    இந்நிலையில் மக்களிடம் கருத்து கேட்காமல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஒன்றியம் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை ஏற்படுத்த முயற்சிகள் நடைபெறுகிறது.

    அரசு மணல் குவாரி சம்பந்தப்பட்ட அரசு போர்டுகளை எசையனூர் கிராமத்தில் பாலாற்றங்கரையில் வைத்துள்ளனர்.

    பாலாற்றில் மீண்டும் மணல் குவாரிகளை செயல்பாட்டுக்கு கொண்டு வந்தால் பாலாறு பாலைவனமாக மாறும் நிலை உள்ளது.

    எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பது எதிர்த்து பா.ம.க சார்பில் கடந்த மாதம் 25ம் தேதி எசையனூர் கிராமத்தில் பாலாற்றில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

    மணல் கொள்ளையை தடுத்து நிலத்தடி நீர் வளத்தை காத்து இயற்கை வளங்களை பாதுகாத்து எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் என்ற நோக்கில் எசையனூர் மற்றும் வளவனூர் ஆகிய கிராமங்களில் பாலாற்றில் மணல் குவாரிகளை அமைப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

    • பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்
    • முக்கிய வீதிகளில் வலம் வந்தது

    சோளிங்கர்:

    சோளிங்கர் லட்சுமி நரசிம்மர் கோவிலில் சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நடைபெற்று வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் சோளிங்கர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து வந்தி ருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் சோளிங்கர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்து மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

    கோவில் இணை ஆணையாளர் ஜெயா, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.முனிரத்தினம், முன்னாள் எம்.பி. சி.கோபால், முன் னாள் எம்.எல்.ஏ.பார்த்திபன், சோளிங்கர் நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி அசோகன், துணைத் தலைவர் பழனி உள்பட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×