என் மலர்
நீங்கள் தேடியது "Full moon festival prohibited"
- போலீஸ் பாதுகாப்பு
- உதவி கலெக்டர் பேச்சுவார்த்தை
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை அடுத்த லாலாப்பேட்டை அருகே காஞ்சனகிரி மலையில் சுயம்பு லிங்கங்கள் ,சப்தகன்னிகள்,முருகர் கோவில், பெரிய அளவில் சிவலிங்கம் ஆகியவை உள்ளன.
இந்நிலையில் கோவில் நிர்வாகம் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்துவது தொடர்பாக லாலாப்பேட்டை ஊராட்சி மற்றும் முகுந்தராயபுரம் ஊராட்சியை சேர்ந்த இருதரப்பினருக்கும் இடையே சில மாதங்களாக பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.
இதை தொடர்ந்து ராணிப்பேட்டை உதவி கலெக்டர் வினோத்குமார் தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படவில்லை.
இந்த நிலையில் இன்று சித்ரா பவுர்ணமி விழா நடத்துவதற்கும், யாகம், பஜனை,அன்னதானம், போன்ற நிகழ்ச்சிகள் நடத்த இருதரப்பினருக்கும் தடை விதித்தும், சட்டம் ஒழுங்கு சீர்குலையும் வகையில் யாரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என உதவி கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
இதனையடுத்து இன்று சித்ரா பவுர்ணமி முன்னிட்டு காஞ்சனகிரி மலையில் சுமார் 40க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.






