என் மலர்
ராணிப்பேட்டை
கோழி பண்ணையில் இருந்து 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கேன் எரிசாராயம், 3,200 லேபில், ஸ்டிக்கர் அட்டை, 1,250 மூடிகள், மிஷின் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் அவளூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் போலீசார் சம்பவத்தன்று மாமண்டூரிலிருந்து களத்தூர் செல்லும் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள தேக்குமர தோப்பில் கார் மற்றும் மோட்டார் சைக்கிள் இருப்பதை பார்த்த போலீசார் அருகே சென்றபோது அங்கிருந்த 6 பேர் தப்பி ஓடினர். இதனையடுத்து போலீசார் அந்தப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது தோப்பில் 452 போலிமது பாட்டில்கள் பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த மதுபாட்டில்கள் மற்றும் கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதுகுறித்து விசாரணை நடத்தி மாமண்டூரை சேர்ந்த அன்பரசன் (36) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவரது நண்பர்களான ஓச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்கி (27), புதுச்சேரியைச் சேர்ந்த கண்ணன் என்ற செந்தாமரைக்கண்ணன் (37) ஆகியோரை கைது செய்தனர்.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர்கள் காவேரிப்பாக்கம் மகாலட்சுமி,பாணாவரம் லட்சுமிபதி ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. தப்பியோடிய கவி என்ற கவியரசன் (46), ராமசந்திரன் (37), குமார் (50), பச்சையப்பன் (37), முரளி (45) ஆகியோரை அவளூர் போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீசார் கூறியதாவது:-
புதுச்சேரியில் குமார், ராமச்சந்திரன், கவி என்ற கவியரசன் ஆகியோரிடமிருந்து சற்குணம் என்பவர் மூலமாக பாட்டிலின் மேல் ஒட்டக்கூடிய லேபிள்கள், மூடியின் மேல் ஒட்டும் ஹாலோகிராம் சீல் ஆகியவற்றை வாங்கி வந்து, செய்யாறில் உள்ள சற்குணத்தின் நண்பரான முரளி என்பவர் மூலம், பச்சையப்பன் என்பவருக்கு சொந்தமான கோழி பண்ணையில் பாட்டில் மூடி சீல் வைக்கும் எந்திரம், காலி மது பாட்டில்கள், மூடிகள், மதுபானத்தில் கலக்கக்கூடிய எசன்ஸ் ஆகியவற்றைக் கொண்டு போலி மதுபானங்களை தயார் செய்து கொடுத்தாக போலீசார் தெரிவித்தனர்.
மேலும் 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 14 கேன் எரிசாராயம், 3,200 லேபில், ஸ்டிக்கர் அட்டை, 1,250 மூடிகள், மிஷின் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.8 லட்சம் என்று கூறப்படுகிறது.
தலைமறைவாக இருக்கும் கடலூரை சேர்ந்த சற்குணம் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

வாலாஜா அருகே மனைவியிடம் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த சென்னசமுத்திரம் புதிய காலனியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 52), கூலித் தொழிலாளி. இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் சில மாதங்களாக உடல் நலம் பாதிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை.
இந்தநிலையில் சென்னசமுத்திரம் தனியார் பெட்ரோல் பங்க் எதிரில் மரத்தில் மூர்த்தி தூக்கில்பிணமாக தொங்கினார். இதுபற்றி தகவல் அறிந்ததும் வாலாஜா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம் அருகே பஸ் மீது கார் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரக்கோணம்:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தை சேர்ந்தவர் நாராயணன் (வயது 68). இவரது மனைவி சியாமளா. இவர்கள் இருவரும் மருத்துவ சிகிச்சைக்காக காரில் வந்து கொண்டிருந்தனர். நேற்று மாலை அரக்கோணத்தை அடுத்த பெருங்களத்தூர் அருகே வந்தபோது முன்னால் சென்ற பஸ்சின் பின்பகுதியில் மோதியது. இதில் காரில் இருந்த நாராயணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் சியாமளா மற்றும் கார் டிரைவர் சதிஷ் ஆகியோர் சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது குறித்து அரக்கோணம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 11 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 186 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று ஒருவர் உயிரிழந்தார். மாவட்ட நிர்வாகம் சார்பில், தொற்று தடுப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ராணிப்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதலில் பெண் பலியானார். மேலும் ஒருவர் காயம் அடைந்தார்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையை அடுத்த அம்மூர் அருகே உள்ள கல்மேல்குப்பம் பகுதியை சேர்ந்தவர் பஷீரூனிஷா (வயது 55). இவர் தனது பேரன் சுபியான் (19) என்பவரின் மோட்டார் சைக்கிளில் ராணிப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் இரவு சென்று கொண்டிருந்தார்.
அல்லிகுளம் கூட் ரோடு அருகே சென்றபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, சுபியான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. அந்த மோட்டார் சைக்கிள் அதே சாலையில் மேல்விஷாரத்தை சேர்ந்த அன்சர் பாஷா (45) என்பவர் வந்த மோட்டார் சைக்கிள் மீதும் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் சுபியான் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் கீழே விழுந்தது.
அந்த மோட்டார்சைக்கிளில் பின்புறம் அமர்ந்து சென்ற பஷீரூனிஷா பலத்த காயமடைந்தார். இதேபோல் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த அன்சர் பாஷாவிற்கும் காயம் ஏற்பட்டது.
அந்த பகுதியில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஆட்டோ மூலம் வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். பஷீரூனிஷாவை டாக்டர்கள் பரிசோதித்தபோது இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
மற்றொரு நபரான அன்சர் பாஷா மேல் விஷாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா நோய் தொற்று பரவல் குறைந்து வருகிறது. நேற்று 12 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 187 பேர் கொரோனா நோய் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக யாரும் உயிரிழக்கவில்லை.
காவேரிப்பாக்கத்தில் தரமான அரிசி வழங்கக்கோரி பொதுமக்கள் ரேஷன் கடையை முற்றுகையிட்டனர்.
காவேரிப்பாக்கம்:
காவேரிப்பாக்கம் பஜார் வீதியில் கற்பகம் கூட்டுறவு ரேஷன்கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடை செவ்வாய், வியாழன், சனி ஆகிய மூன்று நாட்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இதில் கவரைத்தெரு, கோட்டைத்தெரு, செங்கட்டான் தெரு, ஓச்சேரி அம்மன் கோவில் தெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களை சேர்ந்த 460 குடும்ப அட்டைதாரர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று பொது மக்களுக்கு அரிசி வழங்கப்பட்டது. அப்போது தரமில்லாத அரிசி வழங்கியதாக கூறப்படுகிறது. இதனால் பொது மக்கள் விற்பனையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சரியான தகவல் தெரிவிக்காத காரணத்தால் பொது மக்கள் கடையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில் வாரத்தில் மூன்று நாட்கள் திறக்க வேண்டிய கடை ஒருநாள் மட்டுமே திறக்கப்படுகிறது. அரிசி வழங்கும் போது குறைவாகவும், தரமில்லாத அரிசியும் வழங்கப்படுகிறது. மூன்று மாதங்களாக பருப்பு வழங்கவில்லை. மண்எண்ணெய் ஒரு லிட்டருக்கு அரை லிட்டர் வழங்கப்படுகிறது. 5 கிலோ மூக்கடலைக்கு ஒரு கிலோதான் வழங்கபடுகிறது என புகார் தெரிவித்தனர்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த ரேஷன் கடையில் தரமான அரிசி வழங்கவும், வாரத்தில் மூன்று நாட்கள் கடை திறக்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் தினமும் 8 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடவேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர்கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் உத்தரவிட்டுள்ளார்.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசியை தனியார் மருத்துவமனைகளில் இலவசமாக போடுதல், தடுப்பூசி முகாம்களை அதிகரித்து அதிகப்படியான பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்துதல் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடனான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது.
கலெக்டர் கிளாட்ஸ்டன் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சி, 7 வட்டார வளர்ச்சி அலுவலகங்கள், மற்றும் 9 பேரூராட்சி மூலமாகவும், சுகாதாரத்துறை மூலமாகவும் தினமும் மாவட்டம் முழுவதும் 80 தடுப்பூசி முகாம்கள் நடத்தி, சுமார் 8,000 பொதுமக்களுக்கு மேல் கொரோனா தடுப்பூசியை செலுத்திட நடவடிக்கை எடுக்க அனைத்துத் துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.
மேலும் தற்போது ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள 36 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிறப்பு முகாம்கள் மூலமாக பொதுமக்களுக்கு தினமும் இலவசமாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அதேபோல அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகளிலும், தனியார் தொழில் நிறுவனங்களில் சமூக பங்களிப்பு நிதி உதவியுடன் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை செலுத்தும் பணியை விரிவுபடுத்த வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை தொழிலகப் பாதுகாப்பு இணை இயக்குனர், தொழிற்சாலைகளின் சமூக பாதுகாப்பு நிதி உதவி பெற்று தடுப்பூசியை செலுத்தும் நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்க வேண்டும்.
முகாம்களுக்கு தேவையான செவிலியர்கள் மற்றும் வாகனங்கள், அதற்கான முன்னேற்பாடு பணிகளை மருத்துவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் ஏற்படுத்தி இப்பணியினை வரும் நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்றார்.
கூட்டத்தில் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா தொற்று தற்போது குறைந்து வருகிறது. நேற்று ஒரே நாளில் 12 பேருக்கு தொற்று உறுதியானது. மாவட்டம் முழுவதிலும் அரசு, தனியார் ஆஸ்பத்திரிகளில் 188 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றின் காரணமாக நேற்று யாரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மினி பஸ் மோதி மூதாட்டி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிப்காட் (ராணிப்பேட்டை):
ராணிப்பேட்டையில் உள்ள முக்கியம்மன் கோவில் தெரு பகுதியை சேர்ந்தவர் லலிதா (வயது 66). இவர், ராணிப்பேட்டை ஆட்டோ நகர் அருகே எம்.பி.டி. சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் திடீரென லலிதா மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த லலிதா சிகிச்சைக்காக வாலாஜாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே லலிதா இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராணிப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே 108 ஆம்புலன்சில் பெண்ணுக்கு குழந்தை பிறந்தது.
கலவை:
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை தாலுகாவில் உள்ள மேட்டுநாகலேரி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன். இவரது மனைவி சகுந்தலா. நிறைமாத கர்ப்பிணியான சகுந்தலாவுக்கு நேற்று காலை பிரசவ வலி ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து கலவை பகுதியில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் சகுந்தலாவை வளையாத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை டாக்டர் பரிசோதித்து பார்த்து மேல்சிகிச்சைக்காக அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு பரிந்துரை செய்துள்ளார்.
அதன்பேரில் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சில் அழைத்து சென்றனர். ஆரணி அடுத்த சேவூர் செல்லும் வழியில் சகுந்தலாவுக்கு பிரசவ வலி அதிகரித்ததால், ஆம்புலன்சை நிறுத்தி மருத்துவ உதவியாளர் வெங்கட்ராமன் மற்றும் செவிலியர் ஜிலானிஆகிய இருவரும் பிரசவம் பார்த்தனர். இதில் சகுந்தலாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாயும், சேயும் அடுக்கம்பாறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

நெமிலி அருகே சூதாடிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெமிலி:
பனப்பாக்கத்தை அடுத்த நெடும்புலி கிராமம் திரவுபதி அம்மன் கோவில் அருகே சிலர் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக நெமிலி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அப்போது சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த பனப்பாக்கம் திருமால்பூர் ரோட்டு தெருவை சேர்ந்த ஜபாஷி (வயது 60), அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த ரமேஷ் (50) ஆகிய 2 பேரை கைது செய்தனர். 3 பேர் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.